- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஉங்கள் கையால் இந்த பொருட்களை அடுத்தவர்களுக்கு கொடுத்தால் அதிர்ஷ்டம் உங்கள் கையை விட்டு உடனே சென்று...

உங்கள் கையால் இந்த பொருட்களை அடுத்தவர்களுக்கு கொடுத்தால் அதிர்ஷ்டம் உங்கள் கையை விட்டு உடனே சென்று விடும்.

- Advertisement -

நம்முடைய முன்னோர்கள் நமக்கு சில விஷயங்களை இப்படி செய்யக்கூடாது என்று சொல்லி வைத்துள்ளார்கள். அந்த விஷயங்களையெல்லாம் நாம் பின்பற்றித்தான் ஆக வேண்டும். இதை செய்தால் நல்லது நடக்கும் என்று சொல்லும் போது அதை நாம் செய்வோம். சில பேர் இதை செய்யக்கூடாது என்று சொன்னால் அதை செய்து தான் பார்ப்போமே, அதனால் என்ன துன்பம் வருகிறது என்று வேண்டுமென்றே செய்யக்கூடாத சில விஷயங்களை செய்து பார்ப்பார்கள். அது மிகவும் தவறு. நல்லது, நடக்குதா இல்லையா என்று வேண்டுமென்றால் நாம் சோதித்துப் பார்க்கலாம். ஆனால் கெட்டது நடக்குமா என்பதை எப்போதுமே சோதித்து பார்க்கக் கூடாது. நம்முடைய முன்னோர்களால் நமக்கு கெடுதலை சொல்லித் தரவில்லை. நல்லதை மட்டும் தான் சொல்லிக் கொடுத்து சென்று உள்ளார்கள். அந்த வரிசையில் இன்றும் ஒரு சாஸ்திர ரீதியான நல்ல தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

நம்முடைய கையால் அடுத்தவர்களுக்கு கொடுக்கக் கூடாத பொருட்கள் என்னென்ன. குறிப்பாக வீட்டின் மகாலட்சுமி ஸ்வரூபமாக கருதப்படும் பெண்களின் கையால் எந்த பொருளை அடுத்தவர்களுக்கு தானமாக கொடுக்கவே கூடாது. எள்ளு, உப்பு, புளி, வர மிளகாய், காட்டன் துணி, நல்லெண்ணெய், ஊறுகாய், விளக்குக்கு போடும் திரி, இவைகளை கட்டாயமாக அடுத்தவர்களுக்கு உங்கள் கையால் நீங்கள் தானம் கொடுக்கவே கூடாது. அப்படி கொடுத்தால் என்ன நடக்கும். உங்களுடைய கையில் இருக்கும் அதிர்ஷ்டம் உங்களை விட்டுப் போவதற்கும், உங்களுடைய வீட்டை வறுமை தொற்றிக் கொள்வதற்கும், மேல் சொன்ன பொருட்களுக்கு எல்லாம் உங்கள் வீட்டில் பஞ்சம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

சரி, அப்போது கடைக்காரர் கொடிக்கிறாரே. கடைக்காரர் பணத்தை வாங்கிக் கொண்டு வியாபாரம் செய்பவர். அவருக்கு இந்த எந்த சாஸ்திரமும் கிடையாது. அது அவருடைய தொழில். ஆகையால் கடைகளுக்கு இந்த சாஸ்திரம் பொருந்தாது.

மேல் சொன்ன இந்த பொருட்களை எல்லாம் தானம் கொடுக்க வேண்டும் என்றாலும், அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றாலும் என்ன செய்வது. ஒரு சிறிய தாம்பூல தட்டில் வைத்து கீழே வைத்து விட்டால், பெறுபவர் எடுத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் ஒரு கிண்ணத்தில் போட்டு கீழே வைத்து விடுங்கள். தாம்பல தட்டில் வைத்த பொருட்களை கையில் கொடுப்பதை விட, தரையில் வைப்பது சிறப்பு. இருப்பினும் நிறைய பேர் இதை மரியாதை குறைவாக நினைக்கலாம். முடிந்தவரை அடுத்தவர்களுக்கு இந்த விஷயங்களை புரிய வைக்க பாருங்கள். (உங்க வீட்டில் இருப்பவர்கள் உங்கள் அம்மா, அக்கா, தங்கை யார் இந்த பொருட்களை கேட்டாலும், எடுத்து அந்த பொருளை ஒரு மேடையின் மீது, டேபிளின் மீது, அல்லது தரையிலோ வைத்து விடுங்கள். அவர்கள் அதை கீழே இருந்து கையில் எடுத்துக் கொள்ளட்டும்.)

- Advertisement -

சாஸ்திர சம்பிரதாயங்களாக சொல்லும்போது இது நமக்கு கொஞ்சம் மன வருத்தத்தை கொடுப்பதாக இருந்தாலும், இந்த விஷயங்கள் எல்லாம் நமக்கு நன்மை தரக்கூடியவை தான். அந்த காலத்தில் பாட்டி உப்பை கையில் கொடுத்தாலே திட்டுவாங்க. உப்பை கையில் கொடுக்காதே கீழே வை என்று சொல்லுவார்கள். உப்பு மட்டுமல்ல, மேல் சொல்லப்பட்ட பொருட்களும் இந்த பட்டியலில் அடங்கும் என்பது நம்மில் பல பேருக்கு தெரியாமல் இருக்கிறது. ஆகவே இந்த சின்ன சாஸ்திர விஷயங்களை கடைப்பிடித்தாலே நமக்கு பெரிய அளவில் நன்மைகள் நடக்கும்.

குறிப்பாக நிறைய பேர் கோவிலுக்கு செல்லும்போது விளக்குரிதி யை மறந்து விடுவார்கள். பக்கத்தில் இருப்பவர்களிடம் விளக்குத்திரி வாங்கி விளக்கு போடுவார்கள். இது தவறு. அடுத்தவர்களுடைய கையில் இருந்து விளக்கு திரி வாங்கி கோவிலில் தீபம் போடுவதாலும் எந்த ஒரு பலனும் இருக்காது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றுங்கள். பலன் பெறுங்கள் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்