சனி தோஷம் நீங்க மந்திரம்

Sani crow
- Advertisement -

பொதுவாகவே வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவளிப்பது என்பது மிகப் பெரிய புண்ணியத்தை நமக்கு தேடித் தரும். அதிலும் நம்முடைய வழிபாட்டு முறைகளிலும் கூட ஜீவராசிகளுக்கு உணவளிப்பது நம்முடைய கர்மாக்களை கழிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் நாம் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் காகத்திற்கு சாதம் வைப்பது. அப்படி சாதம் வைக்கும் பொழுது நாம் சொல்லக் கூடிய ஒரு மந்திரம் நம்முடைய வாழ்க்கையை மாற்றும் என்று சொல்லப்படுகிறது. அதைப்பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

சனி தோஷம் நீங்க மந்திரம்

காகத்திற்கு சாதம் வைப்பது என்பது நம்முடைய முன்னோர்கள் முதல் பின்பற்றி வந்த பழக்கங்களில் ஒன்று இந்த முறை இரண்டு பலன்களை நமக்குப் பெற்றுத் தருகிறது ஒன்று நம்முடைய இறந்த முன்னோர்கள் வீட்டில் உள்ளவர்கள் காகமாக வந்து உணவு எடுப்பதாக ஐதீகம் உண்டு. அடுத்து இந்த காகமானது சனிஸ்வரரின் வாகனமாக கருதப்படுகிறது.

- Advertisement -

அப்படியான காகத்திற்கு சாதம் வைக்கும் போது சனி பகவானின் அருளை நாம் முழுவதுமாக பெற முடியும் என்றும் சொல்லப்படுகிறது. இப்படி நம்முடைய வாழ்க்கையில் நற்பலன்களை பெற்றுத் தரக் கூடிய இந்த செயலை செய்யும் போது ஒரு மந்திரத்தை சொல்ல வேண்டும் என்று சொல்லப்படுகிறது. நம்முடைய வழிபாட்டு முறைகளில் பூஜை புனஸ்காரங்களுக்கு எப்படி முக்கியத்துவம் உண்டோ அதே போல் மந்திரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பதுண்டு.

இதற்கு காரணம் மந்திரத்தை ஜெபிக்கும் போது நாம் செய்யும் பூஜைக்கான பலன் பல மடங்கு கிடைக்கும் என்பது தான். அந்த வகையில் காகத்திற்கு சாதம் வைக்கும் போது நாம் இந்த ஒரு மந்திரத்தையும் சொல்ல வேண்டும் அதுவும் சனிக்கிழமையில் மட்டும் சொன்னால் போதும். இப்படி சொல்லும் பொழுது நம்முடைய கர்மாக்கள் குறையும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் அருள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது இத்தனை நற்பலன்களை பெறக் கூடிய அந்த மந்திரம் இதோ.

- Advertisement -

ஓம் காகத்வஜாய வித்மஹே!!
கட்கஹஸ்தாய தீமஹி!!
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்!

இந்த மந்திரத்தை நீங்கள் ஒரு முறை மட்டும் சொன்னாலே போதும் மேற் சொன்ன அனைத்து பலன்களையும் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை எங்களால் இந்த சமஸ்கிருத வார்த்தையை சொல்ல முடியாது என நினைப்பவர்கள் காகத்திற்கு சாதம் வைக்கும் போது ஓம் சனீஸ்வராய நமக என்ற இந்த வார்த்தை மட்டும் சொன்னால் கூட போதும்.

இதையும் படிக்கலாமே: முக்கோடி தேவர்களின் அருளை பெற

இந்த மந்திர வழிபாட்டு முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கும் நம்பிக்கையுடன் செய்து பாருங்கள். நம்பிக்கையுடன் செய்யும் எந்த ஒரு விஷயத்திற்கும் பலன அதிகம் அதேபோல் இந்த முறைக்கான பலனும் உங்களுக்கு கிடைக்கும் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -