இந்த 1 பொருளை இந்தந்த இடங்களில் வையுங்கள்! அடுத்த கொஞ்ச நாளில் கை நிறைய பணம் புழங்கும்.

salt-cash

பணம் என்பது ஒருவருடைய கையில் நிலையாக நிலைக்கும் விஷயமல்ல. இன்று உங்கள் கையில் இருந்தால் நாளை வேறு ஒருவருடைய கையில் இருக்கும். கைக்கு கை பணம் மாறுவதால் அதற்கு தோஷம் உண்டு. பணத்தை எந்த இடங்களில் எல்லாம் நீங்கள் வைக்கிறீர்களோ! அந்த இடங்களில் எல்லாம் இந்த ஒரு பொருளை போட்டு வைக்க வேண்டும். அப்படி செய்யும் பொழுது பணம் கொஞ்ச நாட்களில் உங்கள் கையில் அதிகமாக புழங்குவதை நீங்களே உணர்வீர்கள். பணம் பெருக நாம் என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

vishnu-laxmi

சமுத்திரம் முழுவதும் நிறைந்திருக்கும் உப்பு மகாலட்சுமியின் அம்சமாகும். பாற்கடலில் வாசம் செய்யும் மகாலட்சுமிக்கு உப்பு என்பது தாய் வீட்டு சீதனம். இந்த உப்பை எவர் ஒருவர் வீட்டில் குறையாமல் பார்த்துக் கொள்கிறார்களோ! அவர்களுடைய வீட்டில் பணம், செல்வம் போன்றவை எப்பொழுதும் குறையாது என்பது நம்பிக்கை.

‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது பழமொழி. அதாவது ஒரு வேளை உணவு உங்களுக்கு அடுத்தவர் கொடுத்தால் கூட காலம் முழுக்க அவர்களுக்கு நன்றி மறவாமல் இருக்க வேண்டும். எப்பொழுதும் வீட்டில் சால்ட் உப்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும். கல் உப்பை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த உப்பை வாரம் தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வாங்க வேண்டும். இப்படி செய்ய பணம் கை நிறைய புழங்கும்.

money

நீங்கள் சம்பளத்தை வாங்கியவுடன் வீட்டிற்கு வந்து முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் கல் உப்பை போட்டு அதில் பணத்தை வையுங்கள். ஒரு நாள் முழுவதும் விட்டு விட்டு மறுநாள் காலையில் அந்த பணத்தை எடுத்து நீங்கள் எங்கு வைக்க வேண்டுமோ! அங்கு வைத்துக் கொள்ளுங்கள். கல் உப்பின் மீது வைக்கப்பட்ட சம்பள பணம் வீண் விரையம் ஆகாது. நல்ல காரியத்திற்கு செலவழியும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

மேலும் நீங்கள் பீரோவில் பணம் வைத்திருக்கிறீர்கள் என்றால் அந்த இடத்தில் சிறிய பாக்கெட்டில் கல் உப்பை போட்டு வைத்து விடுங்கள். மணிபர்ஸில் கூட இது போல சிறிய பாக்கெட்டில் கல் உப்பை போட்டு வைத்துக் கொள்ளுங்கள். உப்பு இருக்கும் இடங்களில் இருந்து பணத்தை எடுக்கும் பொழுது பணமானது மென்மேலும் பெருகுவதாக கூறப்படுகிறது. இதை நம்பிக்கையோடு செய்து பாருங்கள் உங்களுக்கே ஆச்சரியப்படும் வகையில் சில விஷயங்கள் நடைபெறும்.

salt

வியாபாரம், தொழில் செய்பவர்கள் பணம் வைக்கும் கல்லாப்பெட்டியில் சிறிதளவு உப்பை பாக்கெட்டில் போட்டு வைக்க வேண்டும். அது போல நீங்கள் மகாலட்சுமி படம் வைத்து ஒரு சிறிய மண் சட்டியில் உப்பைக் கொட்டி வையுங்கள். கணக்கு வழக்கு முடிக்கும் போது பணத்தை வீட்டிற்கு கொண்டு செல்லும் முன் அந்த உப்பின் மீது வைத்து எடுத்து விட்டு பின்னர் கொண்டு செல்லுங்கள். இப்படி செய்ய பணம் கையில் அதிகமாக புழங்க துவங்கும்.

salt1

வாடகை பணம், கடன் கொடுக்க வேண்டிய பணம் போன்ற செலவாகும் பணத்தை உப்பு மீது வைத்து கொடுக்க மறக்காதீர்கள். அப்படி செய்யும் பொழுது கடன் விரைவாக அடையும்! மேலும் வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீடு குடியேறி போவதற்கான வசதி, வாய்ப்புகள் வரும். உப்பிற்கு அவ்வளவு சிறப்பான மகத்துவங்கள் உண்டு. வீட்டின் நான்கு மூலைகளிலும் சிறிய கிண்ணத்தில் உப்பைக் கொட்டி வையுங்கள்! எதிர்மறை ஆற்றல்கள் அத்தனையும் வெளியேறி ஓடியே போய்விடும். நல்ல அதிர்வலைகளை உண்டு பண்ணுவதால் வீட்டில் சண்டை, சச்சரவுகள் கூட இதன் மூலம் வரவே செய்யாது.