இது என்ன விசித்திரமான பரிகாரமாக இருக்கிறதே என்று சில பேர் சிந்திக்கலாம். ஆனால் இந்த பரிகாரத்திற்கு பின்னால் நீங்கள் செல்வந்தர்களாக மாறக்கூடிய ஒரு யோகம் இருக்கிறது. அது என்ன. கல் உப்புக்கு பின்னால் மறைந்திருக்கும் அந்த சூட்சம பரிகாரம் என்ன. வெறும் சில்லறை காசுகளை வைத்து கோடி கோடியாக பணத்தை புரள வைக்கப் போகும், அந்த சூட்சம பரிகாரத்தை தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆர்வம் இருந்தால், இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படியுங்கள். நம்பிக்கை இருந்தால் மட்டும்.
கல் உப்பு பரிகாரம்
முதலில் எந்த ஒரு கலப்படமும் இல்லாத, கல் உப்பை வீட்டில் வாங்கி பயன்படுத்த வேண்டும். அந்த கல் உப்பில் தான் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். வீட்டு பக்கத்தில் இருக்கும் அன்னாசி கடையில் இந்த உப்பு சாதாரணமாக உங்களுக்கு கிடைக்கும். கையில் இருக்கும் பணத்தை கடைக்காரரிடம் கொடுத்து, உப்பு வாங்க வேண்டும். மறக்காமல் சில்லறை காசுகளையும் அந்த கடை உரிமையாளரிடம் இருந்து மீதம் நீங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும்.
இந்த சில்லறை காசுகளுக்கும் மதிப்பு அதிகம். அந்த கல்லுப்பு, எவ்வளவு ரூபாயோ, அதற்கு அதிகமான பணத்தை கடைக்காரரிடம் கொடுக்க வேண்டும். பத்து ரூபாய் கல் உப்பு பாக்கெட் என்றால், இருவது ரூபாயாக கொடுங்கள், அல்லது 50 ரூபாயை கொடுத்து, மீதம் சில்லறையை வாங்குங்கள். இப்போது கல் உப்பு வாங்கிய பிறகு மீதம் வந்திருக்கும் அந்த சில்லறையை கொண்டு போய் உப்பு ஜாடிக்கு அடியில் வைக்க வேண்டும்.
இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று செய்வது மிக சிறப்பு. வெள்ளிக்கிழமை அன்று கல் உப்பு வாங்க வேண்டும் என்று சொல்லுவார்கள். கல்லுப்பு வாங்கி அந்த மீதம் இருக்கும் சில்லறையை கொண்டு வந்து உப்பு ஜாடிக்கு கீழே வைக்க வேண்டும். அடுத்த வெள்ளிக்கிழமை வரை அந்த பணம் அங்கேயே இருக்கட்டும்.
அடுத்த வெள்ளி கிழமையோ அல்லது இரண்டு வெள்ளிக்கிழமைகள் கழித்தோ மீண்டும் நீங்கள் உப்பு வாங்க செல்வீர்கள் அதற்கும், சில்லறை காசுகளை வாங்கி வர வேண்டும். இப்போது ஏற்கனவே உப்பு ஜாடிக்கு கீழே இருக்கும் சிலரை காசுகளை எடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, சேகரித்து வர வேண்டும். மீண்டும் சிலரை காசை இந்த உப்பு ஜாடி அடியில் வைக்க வேண்டும்.
இதுபோல உப்பு வாங்கி மீதம் வரும் சில்லறை காசுகளை, உப்பு ஜாடிக்கு அடியில் வைத்து எடுத்து சேமித்தால், உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் உயரம் என்பது நம்பிக்கை. நிச்சயமாக கோடி கோடியாக பணம் சம்பாதிக்க முடியவில்லை என்றாலும், நீங்கள் சம்பாதித்த பணம் உங்கள் கையில் தங்கும். உங்களுக்கு வரவேண்டிய பணம் உங்கள் கையை வந்து சேரும். பணத்திற்காக நீங்கள் யாரிடத்திலும் கை நீட்டாமல் இருப்பீர்கள். அதற்கு மகாலட்சுமி பொறுப்பு.
இதையும் படிக்கலாமே: வாழ்க்கையை மாற்றும் பங்குனி உத்திர மந்திரம்
ஆனால் உழைக்க வேண்டும். வேலை செய்ய வேண்டும். உங்களுடைய கடமைகளிலிருந்து தவறக்கூடாது. இதையெல்லாம் பின்பற்றும்போது நிச்சயமாக உங்களுக்கு தேவையான விஷயங்களை அந்த மகாலட்சுமி செய்து கொடுப்பாள். இந்த பரிகாரத்தை செய்யும் போது பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சீக்கிரம் தீரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.