தீராத கடன் தீர, கட்டுக்கட்டாக பணம் சேமிப்பில் இருக்க, வீண் விரயம் குறைய, உங்கள் வீட்டு உப்பு ஜாடியில் இந்த 1 பொருள் இருந்தால் போதும்.

lakshmi-cash

நம்முடைய வீட்டில் செல்வ செழிப்பு நிறைவாக இருக்க வேண்டும் என்றால், உப்பு ஜாடியில் கல்லுப்பு நிறைவாக இருக்க வேண்டும். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். அந்த உப்பு மகாலட்சுமியின் அம்சம். மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய மற்றொரு பொருளை, உப்பு ஜாடியில் வைக்கும் பட்சத்தில் நம்முடைய வீட்டிற்கு கடன் தொல்லை இருக்காது. வருமானம் அதிகரித்துக் கொண்டே போகும். பணம் கட்டுக் கட்டாக சேமிப்பில் இருக்கும். வீண் விரையம் குறையும். மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய மற்றொரு பொருள் என்ன? அதை எப்படி, எந்த நேரத்தில் உப்பு ஜாடியில் வைக்க வேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

poojai

வெள்ளிக்கிழமை காலை நேரத்திலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு, வீட்டில் இருக்கும் பெண்கள் அந்த வீட்டு பூஜை அறையில் பூஜை செய்ய வேண்டும். முடிந்தவரை வியாழக்கிழமை அன்று சுத்தம் செய்யக்கூடிய வேலைகளை முழுமையாக முடித்து விடுங்கள். வெள்ளிக்கிழமை அன்று பூஜை அறையை சுத்தம் செய்வது என்பது அவ்வளவு சரியானது அல்ல.

வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்திருக்க வேண்டும். முடிந்தால் பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றுவது மேலும் சிறப்பு. அதன் பின்பு மகாலட்சுமியின் பாதத்திற்கு முன்பு ஒரு சிறிய தட்டில் 2 விரலி மஞ்சளைப் போட்டு, தீப தூப ஆராதனை காட்டி, உங்களுடைய வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

virali-manjal

பூஜையை முடித்துவிட்டு அந்த 2 விரலி மஞ்சளை கொண்டுபோய், உங்கள் வீட்டு கல் உப்பு ஜாடியில் போட்டு விட வேண்டும். விரலி மஞ்சளை போடுவதற்கு முன்பு, கல் உப்பைத் தொட்டு வணங்கிக் கொள்ளுங்கள். குறிப்பாக வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஓரை என்று சொல்லப்படும் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பூஜையை செய்து, இந்த விரலி மஞ்சளை கொண்டுபோய் சமையல் அறையில் உள்ள உப்பு ஜாடியில் வைப்பது என்பது அவ்வளவு மங்களகரமான விஷயமாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

விரலி மஞ்சளை உங்கள் வீட்டு உப்பு ஜாடியில் போடும்போது மனதார, உங்களுக்கு இருக்கக்கூடிய பணப் பிரச்சனைகள் அனைத்தும் விரைவாக தீர வேண்டும் என்று மகாலட்சுமியின் பெயரை 3 முறை உச்சரித்து விட்டு அதன் பின்பு போடுங்கள். பிறகு வீட்டில் ஏற்படக்கூடிய மாற்றத்தை நீங்களே உணர முடியும்.

salt

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதியதாக 2 விரலி மஞ்சளை வாங்கி வந்து மகாலட்சுமியின் பாதத்தில் வைத்து, அதைக் கொண்டு போய் உப்பு ஜாடியில் போட வேண்டும். புதிய மஞ்சளை போடும் போது, பழைய மஞ்சளை எடுத்து நீங்கள் உங்களுடைய உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எல்லா மஞ்சள் கிழங்குகளையும் ஒரு டப்பாவில் போட்டு, ஒன்றாக சேர்த்து வைத்து, அரைத்து பூஜை பொருட்களுக்கு பொட்டு வைக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

உங்களுடைய முகத்தில் பூசிக்கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் வீட்டு உப்பு ஜாடியில் மஞ்சள் கிழங்கு இருக்கும் வரை, உங்கள் குடும்பத்திற்கு பணத்தின் மூலம் பெரிய பிரச்சனைகள் வரவே வராது என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.