அய்யனார் கோவில் கல் யானை கரும்பு தின்ற உண்மை சம்பவம் !

Ayyanar3
- Advertisement -

கல் யானை கரும்பு தின்ற கதையை நாம் திருவிளையாடல் புராணத்தில் படித்திருப்போம். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சொக்கநாதர் நிகழ்த்திய திருவிளையாடலைப் போலவே, மதுரை மேலூருக்கு அருகில் உள்ள கொட்டக்குடி கிராமத்தில் அமைந்திருக்கும் கற்குடைய ஐயனார் கோயிலிலும் கல் யானை கரும்பு தின்ற அற்புதம் நிகழ்ந்திருக்கிறது.

Mariamman-Goddessl

பச்சைப்பசேல் என்று பசுமை சூழ்ந்து காணப்பட்ட வயல்வெளிகளுக்கு இடையில் அமைந்திருக்கிறது கற்குடை ஐயனார் கோயில். கோயில் வரலாறு பற்றித் தெரிந்துகொள்வதற்காகச் சென்ற நாம், அங்கே ஒரு தென்னைமர நிழலில் அமர்ந்திருந்த பெரியவர் எம்.கல்லாணையிடம் கோயில் வரலாறு பற்றிக் கேட்டோம்.

- Advertisement -

”இந்தக் கோயில் ரொம்ப பழைமை வாய்ந்த கோயில். மிகவும் சக்தியான சாமி. இந்த சுத்துப்பட்டில திருவாதவூர் சிவன் கோயிலுக்கு அடுத்து இந்த ஐயனார்தான் சக்திவாய்ந்த சாமி. ரொம்பத் துடியான சாமி. வேண்டுறதெல்லாம் தருவார். வினை செய்ய நெனைச்சா வேரறுத்துடுவார்.

Ayyanar

ரொம்ப காலத்துக்கு முன்னாடி இந்த ஊரைச் சேர்ந்த ஒருத்தர் இந்த வழியா பால் கொண்டுட்டுப் போய் வித்துட்டு வருவார். ஒருநாள் இந்த இடத்துக்கு வந்தபோது கால் இடறி கொண்டு வந்த பால் முழுவதும் கீழே கொட்டிவிட்டது. கீழ விழறது சகஜம்தானேன்னு நெனைச்சு, தூசியை உதறிவிட்டு, காலி சொம்பை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போயிட்டார். தொடர்ந்து அதேபோல் நடக்கவே பயந்துபோனவர், அந்த இடத்துல ஏதோ தெய்வ சக்தி இருக்கறதா நெனைச்சார்.

- Advertisement -

நடந்தை ஊர்மக்களிடம் தெரிவிச்சிருக்கார். ஊர்மக்கள் வந்து பார்த்தப்ப அந்த இடத்துல ஐயனார் காவல் தெய்வமா எழுந்தார்ன்னும், கூடவே அவருக்கு எதிரில் கல்யானையும் எழுந்ததுன்னும் சொல்றாங்க. வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்கு வர்றத்துக்கு முன்னாடியே இந்தக் கோயில் இங்கே இருந்துச்சி.

Elephant

நம்ம நாட்டை பிரிட்டிஷ்காரங்க ஆண்டப்ப, ஒரு வெள்ளைக்காரர் இந்தப் பக்கமாக வந்தவர் ஐயனாரையும், கல்யானையையும் பார்த்திருக்கார். கல்யானையைப் பார்த்ததும் அவருக்கு சிரிப்பு பொத்துக்கிட்டு வந்திடுச்சி. சுவாமிக்கு முன்னாடி இருந்த கல்யானையைப் பார்த்து கேலி பேசியவர், அங்கிருந்த கக்கன் என்பவரிடம், ‘உங்களோட இந்த யானை கரும்பு சாப்பிடுமா?’ன்னு கேலி பேசியிருக்கார்.

- Advertisement -

கேலியை பொறுத்துக்காத கக்கன், ‘அடே, இந்த யானை 7 வண்டி கரும்பைச் சாப்பிடும்’ன்னு சொல்லியிருக்கார். யானையை சோதிச்சுப் பார்க்க நெனைச்ச அந்த வெள்ளைக்காரர், மறுநாளே 7 வண்டி நெறைய கரும்புகளைக்கொண்டு வந்து எறக்கிவிட்டார். ‘இந்தக் கரும்பு மொத்தத்தையும் யானை தின்னுட்டால், நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கறேன். இல்லைன்னா நான் சொல்றதை நீங்கக் கேட்கணும்’ என்று சவால் விட்டுவிட்டுப் போனார்.

British

அடுத்த நாள் அங்கே வந்து பார்த்த வெள்ளைக்காரர் அதிர்ச்சியாயிட்டார். கல்யானை 7 வண்டி கரும்பைத் தின்னது மட்டுமில்லாம, சக்கையை தன்னைச் சுற்றிப் பரப்பி வைத்துவிட்டு சாணமும் போட்டிருந்துச்சி. வெள்ளைக்காரர் பயந்துபோய் அங்கிருந்து ஓடினார். அவர் ஊர் எல்லையைக் கடக்கறதுக்குள்ள ஒரு யானை வந்து மிதித்துப் போட்டுடிச்சு. அன்னையிலருந்து கல் யானைக்குக் கல்லாணைன்னு பேர் வச்சு ஜனங்க வழிபட ஆரம்பிச்சிட்டாங்க. அதுமட்டுமில்லாம இந்த ஊர்ல பொறக்கற பிள்ளைங்களுக்கு கல்லாணை, மதயானை, பொன்னையன், ஐயனார்ன்னு பேரு வச்சு சந்தோஷப்படறாங்க” என்று விளக்கினார்.

karuvarai

இதையும் படிக்கலாமே:
மர்ம குகைக்குள் தானை தோன்றிய சுயம்பு சிவன்.. குகை முழக்க மர்மம்! எங்கு தெரியுமா ?

பூசாரி பிரபுவிடம் பேசினோம். ”ரொம்பப் பழைமையான இந்தக் கோயில சீரமைச்சு கோபுரத்தோட கோயில் கட்டினவர் ஏழுஅப்பச்சிங்கறவர்தான். மூலவரான ஐயனார் சைவம். கோயில் வளாகத்துல இருக்கற கருப்பன், சின்னகருப்பன், பெரியகருப்பன் போன்ற சாமிங்களுக்கு கிடா வெட்டறதும் சேவல் நேர்ந்துவிடறதும் உண்டு. ஐயனாருக்கு ஐப்பசி கடைசி வெள்ளி திருவிழா நடக்கும். ஊரெல்லாம் தூங்கறபோது, ஐயனார்தான் குதிரையில வந்து காவல் காக்கிறார்” என்று சிலிர்ப்புடன் கூறினார்.

- Advertisement -