குகையில் தானாய் தோன்றிய சிவன் வடிவம்.. குகை முழுக்க மர்மங்கள் ! எங்கு தெரியுமா ?

cave-1

பொதுவாக சிவ பெருமானின் லிங்க வடிவமே பல இடங்களில் சுயம்புவாக தோன்றியுள்ளதை நாம் பார்த்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒரு குகையில் சிவபெருமானின் முழு வடிவமும் சுயம்புவாக தோன்றி உள்ளது. அது மட்டுமா இன்னும் பல கடவுள் வடிவங்களும் சுயம்புவாக தோன்றி பலரையும் ஆச்சர்யப்பட வைக்கிறது. வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.

sivan kugai

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில், பெளனி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ரன்சூ எனும் மலை கிராமத்தில் அமைந்துள்ளது சிவகோரி(சிவன் குகை) என்னும் மலை குகைக்கோயில். இந்த குகைக்குள் சிவபெருமான் தியான கோலத்தில் இருப்பது போல ஒரு சுயம்பு வடிவம் உள்ளது. அதோடு இல்லாமல் பார்வதி தேவியின் உருவம், நந்தி, விநாயகர், முருகன் என பல தெய்வ உருவங்களும் சுயம்புவாக தோன்றியுள்ளது.

சுமார் 200 மீட்டர் நீளம் உள்ள இந்த குகை, ஒரு மீட்டர் அகலமும் மூன்று மீட்டர் உயரமும் கொண்டது. உடுக்கை வடிவில் அமைந்துள்ள இந்த குகையில், சிவன் சிலைக்கு மேல் எப்போதும் நீர் சொட்டிக்கொண்டிருக்கும் அதிசயம் நிகழ்கிறது. அந்த நீர் எங்கிருந்து ஊற்றெடுத்து எப்படி சரியாக சிவன் உருவத்திற்கு மேல் மட்டும் சொட்டுகிறது என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.

sivan kugai

இந்த குகையில், காமதேனு, சுதர்சன சக்கரம் போன்றவையும் தோன்றியுள்ளன. குகையின் மேற் பகுதி பாம்பு தோல் போல உள்ளது. இந்த குகையில் முப்பத்து முக்கோடி தேர்வர்களும் வாசம் செய்வதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

- Advertisement -

sivan kugai

இந்த குகையில் இருந்து அமர்நாத் குகை கோயிலிற்கு செல்லும் வழி ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது. பாரதப்போர் முடிந்து, கிருஷ்ண பரமாத்மா தன் உலக வாழ்வை முடித்துக்கொண்ட பிறகு, பாண்டவர்கள் சொர்கத்திற்கு செல்ல முடிவெடுத்த போது இந்த வழியை தான் தேர்ந்தெடுத்தனர் என்று கூறப்படுகிறது.

sivan kugai

இந்த குகை ஆரம்பத்தில் பெரிதாகவும் போக போக குறுகலாகவும் அமைந்துள்ளது. பல அற்புதங்கள் நிறைந்த இந்த குகைக்குள் செல்வதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இந்த குகைக்குள் சென்ற சிலர் மீண்டும் திரும்பவே இல்லை என்றும் கூறப்படுகிறது. பாதுகாப்பு கருது அரசாங்கம் இந்த குகைக்குள் செல்ல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

sivan kugai

இதையும் படிக்கலாமே:
சிவ லிங்கத்தில் இருந்து பீறிட்டு வந்த நீர்- ஆச்சர்யத்தில் உறைந்த மக்கள்

கடந்த 2003 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை இந்த குகை பெரிதாக பிரபலம் கிடையாது ஆனால் அதற்கு பிறகு இந்த குகையை காண பலர் கூட்டம் கூட்டமாக வர ஆரமித்தனர். 2016 ஆம் ஆண்டில் மட்டும் இங்கு 20 லட்சம் பேர் வந்துள்ளனர். மகா சிவராத்திரி திருவிழா இங்கு பிரபலம் என்பதால் அந்த நாளில் இங்கு பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவதுண்டு.