காலபைரவருடைய இந்த 1 பொருள் வீட்டில் இப்படி ஒரே ஒரு நாள் செய்தால் போதும்! கெட்டதெல்லாம் விலகி நல்லதே நடக்கும் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! கணவன் மனைவி பிரச்சனைகளும் நொடியில் தீரும் அற்புதம் நடக்கும்.

bairavar-venkadugu

கலியுகத்தில் காக்கும் கடவுளாக இருப்பது கால பைரவர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்தது தான். அவர் சிவபெருமானின் அம்சமாகவே பார்க்கப்படுகிறார். காலபைரவரை வழிபடுபவர்களுக்கு எமபயம் நீங்கும் என்பது ஐதீகம். எப்படிப்பட்ட கோழையாக இருந்தாலும், கால பைரவரை வணங்கினால் வீரனாகி விடுவார்களாம். பயந்த சுபாவம் கொண்டவர்கள், பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீய சக்திகளின் பிடியில் இருப்பவர்கள், திருஷ்டி தோஷம் இருப்பவர்களும் கால பைரவரை வணங்கினாலே போதும். அத்தனை பிரச்சனைகளும் நீங்கி, பழைய நிலைக்கு திரும்பி விடுவார்கள்.

bairavar

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த காலபைரவரின் தேவ கனமாக விளங்கும் ஒரு பொருள் பூமியில் இருக்கிறது. அது தான் ‘வெண்கடுகு’ என்பார்கள். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. ஆனால் இந்த வெண்கடுகு தெய்வீக சக்தியை முழுமையாக கொண்டுள்ளது. வெண்கடுகை காலபைரவரின் அம்சமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இந்த வெண்கடுகு உங்கள் வீட்டில் இப்படி செய்வதால் எப்பேர்பட்ட தீயசக்திகளும், எதிர்மறை ஆற்றல்களும் நொடியில் ஓடியே போய்விடும். அதை எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஒவ்வொரு கோவில்களிலும் காலபைரவர் சன்னிதியில் தான் இரவு நடை சாத்திய பிறகு பூட்டு சாவியை வைத்து வழிபடுவார்கள். மீண்டும் காலையில் கோவில் நடை திறந்த பிறகு கால பைரவரை வணங்கி விட்டு தான் மற்ற வேலைகள் நடைபெறும். அவரிடம் எந்த ஒரு பொருளும் பாதுகாப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. எனவே காக்கும் கடவுளாக விளங்கும் காலபைரவரை வெண்கடுகு ரூபத்தில் நாம் வீட்டில் இப்படி செய்ய வேண்டும்.

venkadugu

வீட்டில் தொடர்ந்து பிரச்சினைகள் இருக்கும் பொழுது இது போல் செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கப் பெறும். சிறிதளவு வெண்கடுகை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அதனை வீட்டின் அனைத்து திசைகளிலும் தூவி விடுங்கள். ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்திருக்க வேண்டும். 24 மணி நேரம் கழித்து அதனை பெருக்கி ஒரு துணியில் முடிந்து முச்சந்தியில் போட்டு விடலாம். இப்படி செய்வதால் ஏராளமான நன்மைகள் உங்களுக்கு அடுத்தடுத்து நடைபெறுவதை நீங்களே உணரலாம்.

- Advertisement -

வெண்கடுகு தூபம் போடுவதும் இதனால் தான். விசேஷ தினங்களில் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் செய்யும் பொழுது வீடு முழுவதும் வெண்கடுகு கொண்டு தூபம் போடலாம். தூப சாம்பிராணியுடன், வெண் கடுகு சேர்த்து, சிறிதளவு குங்குலியம், ஏலக்காயையும் போட்டால் வீடு முழுவதும் கமகமவென்று தெய்வீக மணம் கமழும். வீட்டில் இருக்கும் அத்தனை தரித்திரமும் நீங்கி நல்ல சக்திகள் மூலம் நன்மைகள் நிறைய நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று இணைவார்கள்.

sambrani

கணவன் மனைவிக்குள் பிரச்சனை இருந்தால் இது போல் வாரம் ஒரு முறை தூபம் போட்டு பாருங்கள். பிரச்சினைகள் எல்லாம் நொடியில் காணாமல் போய்விடும். வீட்டில் இந்த தூபம் போட்டு வந்தால் சுபகாரிய தடைகளும் விலகும் என்பது ஐதீகம். கால பைரவரின் அருள் நேரடியாக வெண்கடுகு மூலம் நமக்கு கிடைக்கும். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவர் காலபைரவர் என்று கூறப்படுகிறது. இப்படியாக வெண்கடுகு மூலம் நாம் வீட்டை சுபிட்சமாக, எப்போதும் பாதுகாப்பாக, மகிழ்ச்சியுடன் வைத்திருக்க முடியும் என்பதைக் கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
பணத்தை ஈர்க்கும் ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம் இப்படிப்பட்ட பொருட்களையெல்லாம், தப்பித்தவறி கூட, இப்படி செய்துவிடக்கூடாது. தீராத பண கஷ்டம் வர இதுவும் ஒரு காரணம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.