பணத்தை ஈர்க்கும் ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம் இப்படிப்பட்ட பொருட்களையெல்லாம், தப்பித்தவறி கூட, இப்படி செய்துவிடக்கூடாது. தீராத பண கஷ்டம் வர இதுவும் ஒரு காரணம்.

cash-kirambu

நமக்கு இருக்கக்கூடிய பணத்தேவையை பூர்த்தி செய்துகொள்ள, அதிகப்படியான பணத்தை சம்பாதிக்க, பணம் சேமிக்க வேண்டும் என்ற ஒரு காரணத்தால் நம்மில் பலபேர் தாந்த்ரீக பரிகாரங்கள், பணத்தை ஈர்க்கக்கூடிய வழிபாட்டுமுறைகள் இப்படியாக பல வகைகளில் ஆன்மிக ரீதியாக தேடல்களை தேடிக் கொண்டுதான் இருக்கின்றோம். இதோடு சேர்த்து விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், உழைப்பும் தான் ஒருவருக்கு குறையாத செல்வத்தை தரும் என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

பரிகாரங்களை நம்முடைய வீட்டில் நாம் செய்து பார்ப்பதில் எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால், அந்த பரிகாரத்தின் மூலம் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது. அதாவது பலன் கிடைப்பது என்பது இரண்டாவது விஷயம், பாதிப்பு கிடைக்காமல் இருக்குமா? என்பதை சிந்தித்து விட்டு அதன் பின்பு உங்களுக்கு தகுந்த பரிகாரத்தை மட்டும் நீங்கள் பிரயோகப்படுத்தி பாருங்கள்.

பணத்தை ஈர்ப்பதற்காக சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களில், பணத்தை ஈர்க்கக்கூடிய ஏலக்காய், பச்சை கற்பூரம், கிராம்பு, இப்படிப்பட்ட பொருட்களை பணம் வைக்கும் பெட்டியில் வைக்கலாம் என்று சொல்லுவார்கள். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. இப்படிப்பட்ட வாசனை மிகுந்த பொருட்களை பணப்பெட்டியில் வைக்கும் போது அந்த இடத்தில் நேர்மறை ஆற்றல் அதிகப்பட்டு, பண ஈர்ப்பு விதி செயல்படும் என்பது என்னமோ உண்மை தான்.

ஆனால் இப்படிப்பட்ட வாசனை மிகுந்த பொருட்களை பணப்பெட்டியில் வைத்து விட்டு, பழைய ஏலக்காய், பழைய கிராம்பு, பச்சைக் கற்பூரம் இப்படிப்பட்ட பொருட்களையெல்லாம் சுத்தம் செய்யும்போது, இந்த பொருட்களை எடுத்து நாம் என்ன செய்வோம்? கால் படாத இடத்தில், வீட்டிலிருந்து வெளியே தான் தூரப் போட்டு விடுகின்றோம்.

- Advertisement -

இல்லையென்றால் சிலபேர் ஓடுகின்ற தண்ணீரில் விட்டு விடலாம் என்று சொல்லுவார்கள். ஆனால், ஒருமுறை நம்முடைய பணப்பெட்டியில் இப்படிப்பட்ட வாசனை மிகுந்த பொருட்களை வைத்து விட்டால், நேர்மறை ஆற்றலை அந்த பொருட்கள் ஈர்த்துக்கொள்ளும். அப்போது உங்கள் வீட்டில் இருக்கும் நேர்மறை ஆற்றல் ஈர்த்த அந்தப் பொருள் வெளியில் சென்றால் உங்கள் வீட்டின் லட்சுமி கடாட்சம் நிச்சயம் வெளியே செல்லத் தான் செய்யும்.

இனி உங்களுடைய வீட்டில் பணப் பெட்டியில், இப்படிப்பட்ட பொருட்களை வைத்தால் சுத்தமான கிண்ணத்தில் போட்டு வைக்க வேண்டும். அந்த ஏலக்காயை புதியதாக மாற்றும் போது பழைய ஏலக்காயை எடுத்து ஏதோ ஒரு இனிப்பு வகையை சமைத்து, மகாலட்சுமிக்கு நிவேதனமாக வைத்து, அந்த பிரசாதத்தை சாப்பிட்டு விடலாம்.

pattai

கிராம்பு, பட்டை, சோம்பு போன்ற வாசனைப் பொருட்களை பணம் சேர்ப்பதற்காக பீரோவில் வைத்து இருந்தால் இந்த பொருட்களை எல்லாம் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து, அதில் கலந்து உங்களுடைய வீட்டில் இருக்கும் மூலைமுடுக்குகளில் தெளித்து விடலாம் தவறு கிடையாது. உங்கள் வீட்டில் சாம்பிராணி தூபம் போடும் போது கூட, இந்த பொடியை கொஞ்சமாக சேர்த்து தூபம் போடலாம்.

pachai-karpooram-yelakkai-sombu

பச்சைக்கற்பூரம் திறந்த வண்ணம் இருந்தால், அது கரைந்து போகும். அப்படி இல்லை என்றால் அதையும் தூபம் போடும் போது அதில் சேர்த்துக் கொள்ளலாம் தவறொன்றும் கிடையாது. இப்படியாக உங்களுடைய வீட்டில் பண ஈர்ப்பு விதிக்கு பயன்படுத்தும் பொருட்களை இனி யாரும் குப்பையில் எடுத்துப் போட வேண்டாம். அதற்கு பதில் வேறு ஏதாவது பயன்பாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

mahalashmi3

வீட்டில் லட்சுமி கடாட்சம் வெளியில் செல்வதற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டுள்ளது. ஒரு வேளை உங்கள் வீட்டு பணப்பெட்டியில் ஏலக்காய் கிராம்பு பட்டை பச்சை கற்பூரம் வைத்திருக்கிறீர்கள். இருப்பினும் பணம் சேரவில்லை என்றால் நீங்கள் இந்த தவறுகளை செய்து வந்திருந்தால், கொஞ்சம் மாற்றி தான் பாருங்களேன். நல்ல பலன் கிடைத்தால் லாபம் தானே! நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் நம்பிக்கையோடு செய்து பலன் அடைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
குலதெய்வம் நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு வீடுதேடி வந்து உங்களையும், உங்கள் வீட்டையும் பாதுகாக்கும். இதற்கு ஒரே 1 எலுமிச்சை பழம் போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.