மதுரை காலதேவி அம்மன் கோவில் சிறப்புகள்

kaladevi
- Advertisement -

போனால் திரும்பி வராதது எது. நம்முடைய உயிர்தான் என்று சொல்லுவோம். ஆனால், நேரமும் காலமும் கூட போனால் திரும்பி வரவே வராது. அந்த நேர காலத்திற்கு சொந்தக்காரியான, 27 நட்சத்திரங்களுக்கும், 12 ராசிகளுக்கும், சொந்தக்காரியான இந்த காலத்திற்கே சொந்தக்காரியான, கால தேவி அம்மன் கோவிலை பற்றி தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

காலதேவி அம்மன் சிறப்பு

மனிதர்களுக்கு எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று யாராலும் நிச்சயமாக சொல்ல முடியாது. கால நேரத்தைப் பற்றியும், அடுத்தது இந்த பூமியில் என்ன நடக்கும் என்ற மர்மத்தையும் விஞ்ஞானிகளால் கூட கணிக்க முடியாது என்று ஒரு கருத்து உள்ளது. ஆனால் நம்முடைய நேரத்தைப் பற்றியும், நம்முடைய எதிர்கால நேரத்தைப் பற்றியும் தெரிந்த ஒரு அம்மன் இருக்கிறாள் என்றால், அது இந்த ஸ்ரீ காலதேவி அம்மன் தான்.

- Advertisement -

இந்த கோவிலை பற்றிய சிறப்பு என்ன தெரியுமா. இந்த கோவில் பகல் நேரத்தில் திறந்து இருக்காது. இரவு நேரம் முழுவதும் திறந்திருக்கும். இந்தக் கோவிலில் இருக்கும் காலதேவி அம்மன் மிக மிக சக்தி வாய்ந்த அம்மன் ஆக சொல்லப்படுகிறாள். நேரத்திற்கு அதிபதியாக இருக்கும் இந்த கால தேவிக்கு, ஒருவருடைய தலை எழுத்தை மாற்றக்கூடிய சக்தி இருக்கிறது. ஒரு மனிதனின் கெட்ட நேரத்தை கூட நல்ல நேரமாக மாற்றும் சக்தி இந்த கால தேவி கையில் உள்ளதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.

இந்த கோவிலுக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்றால் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சென்று தான் இந்த தேவியை வழிபாடு செய்ய வேண்டும். இரவு முழுவதும், சூரிய உதயத்திற்கு முன்பு வரை இந்த கோவில் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பௌர்ணமி அமாவாசை தினங்களில் இந்த கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

- Advertisement -

கெட்ட நேரம் நல்ல நேரமாக மாற இந்த கோவிலில் எப்படி பரிகாரம் செய்வது?

இந்த கோவிலுக்கு சென்று இந்த அம்பாளை 11 முறை இடப்பக்கமிருந்து வலப்பக்கமாக சுற்றிவர வேண்டும். பிறகு 11 முறை வலம் இருந்து இடமாக சுற்றிவர வேண்டும். இரவு நேரத்தில் இந்த அம்பாளுக்கு சிறப்பு விசேஷ பூஜைகள் அபிஷேகங்கள் நடக்கும். அது நடந்து முடிந்த பிறகு அம்பாளுக்கு 11 நெய் விளக்குகள் ஏற்றி அம்பாள் முன்பாக அமர்ந்து, 11 நிமிடங்கள் உங்களுடைய வேண்டுதலை கால தேவிக்கு முன்பாக வைக்க வேண்டும்.

ரொம்பவும் பெருசாக கஷ்டங்களை சொல்லி புலம்ப வேண்டாம். அம்பாளை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். என்னுடைய கெட்ட நேரம் நல்ல நேரம் ஆக மாற வேண்டும். ‘எனக்கு எது நல்லது என்று நினைக்கிறாயோ, அந்த வரங்களை கொடு தாயே’ என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டால் போதும் இங்கு வரக்கூடிய பக்தர்களும் இப்படித்தான் தங்களுடைய வேண்டுதலை வெளிப்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

சரி இந்த கோவில் எங்கு இருக்கிறது. எப்படி செல்வது என்று தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா. தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில்தான் இந்த கோவில் அமைந்திருக்கிறது. மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லக்கூடிய பேருந்தில் ஏறவும். சுப்பலாபுரம் மெயின் ரோடு ஸ்டாப்பிங்கில் இறங்கவும்.

இதையும் படிக்கலாமே: பெண்கள் வளையல் அணியும் முறை

இந்த சுப்பலாபுரம் ஊரில் இருந்து, சில்லார் பட்டி என்ற ஒரு கிராமத்துக்கு செல்ல வேண்டும். சில்லார் பட்டி என்னும் கிராமத்தில் தான் இந்த கோவில் அமைந்திருக்கிறது. சுப்பலாபுரம் மெயின் ரோட்டில் இருந்து, இந்த கோவிலுக்கு ஆட்டோவில் செல்லலாம். இல்லை நடந்து கூட செல்லலாம். அங்கு சென்று இந்த அம்மனின் பெயரைச் சொல்லி கேட்டாலே வழி உங்களுக்கு தெரிந்து விடும்.

- Advertisement -