பெண்கள் வளையல் அணியும் முறை

valaiyal
- Advertisement -

அன்றைய காலத்தில் இருக்கக்கூடிய பெண்கள் மஞ்சள் தேய்த்து குளித்து பொட்டு வைத்து கையில் வளையல் காலில் கொலுசு போடுவார்கள். தலைமுடியை பின்னி பூ வைப்பார்கள். இதெல்லாம் சாதாரண பெண்களுக்குரிய விஷயமாகவே கருதப்படுகிறது. இவை அனைத்திலும் சூட்சுமமான காரணங்கள் இருந்தன. இந்த ஆன்மீகம் குறித்த பகுதியில் பெண்கள் வளையல் அணிவதின் சிறப்புகளை பற்றியும் அதில் இருக்கக்கூடிய சூட்சுமமான முறைகளை பற்றியும் தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக வளையல் அணிவதால் நம் மணிக்கட்டுக்கு கீழே இருக்கும் பகுதிகளில் இருக்கக்கூடிய வர்ம புள்ளிகள் தூண்டப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஒன்றிற்கும் மேற்பட்ட வளையல்களை அணிவதன் மூலம் அதிலிருந்து வரக்கூடிய சத்தமானது சவுண்டு திறப்பி என்ற வகையிலும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. சரி இப்பொழுது ஆன்மீக ரீதியாக சொல்லக்கூடிய விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

எதை செய்யக்கூடாது:
பெண்கள் மரம், பிளாஸ்டிக், இரும்பு, ரப்பர், ஸ்டைன்லெஸ் ஸ்டீல் போன்ற உலோகங்களால் ஆன வளையல்களை அணியக்கூடாது. அதற்கு மாறாக தங்கம் கண்ணாடி வளையல் போன்ற வளையல்களை அணியலாம். மேலும் கண்ணாடி வளையல்களை அணியும் பொழுது காபி கலர் மற்றும் கருப்பு நிற வளையல்களை அணிவதை தவிர்க்க வேண்டும்.

அது மட்டுமல்லாமல் புதிதாக வளையல்களை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமையை தவிர்ப்பது நன்மை தரும். அதே போல் புதிதாக கையில் வளையல் அணிய வேண்டும் என்று நினைப்பவர்கள் மதியம் மற்றும் இரவு வேலைகளில் அணிவதை தவிர்க்க வேண்டும்.

- Advertisement -

நன்மை தரும் வளையல்கள்:
குடும்பத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசைப்படுபவர்கள் தங்கள் கையில் சிவப்பு நிற வளையல்களை அணியலாம். கல்யாணமாகாத பெண்கள் விரைவிலேயே நல்ல செய்தி அவர்களை தேடி வருவதற்கு பிங்க் நிறத்தில் இருக்கக்கூடிய வளையல்களை அணிய வேண்டும். பண தேவை அதிகமாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் பச்சை மற்றும் பர்பில் நிறத்தில் இருக்கக்கூடிய வளையல்களை அணிய வேண்டும்.

உடல் உஷ்ணத்தால் பாதிப்புகள் ஏற்படக்கூடிய பெண்கள் வெளிர் நீல நிறத்திலான வளையலை அணிய வேண்டும். அன்பாகவும் பாசமாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வெள்ளை மற்றும் சில்வர் நிறத்திலான வளையலை அணிய வேண்டும். சுப நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மஞ்சள் நிறத்திலான வளையலை அணிய வேண்டும்.

- Advertisement -

வளையல்களின் எண்ணிக்கை:
இரண்டு கைகளிலும் இரண்டு என்ற எண்ணிக்கையில் வளையல் அணியும் பொழுது குடும்பத்திற்கு நன்மை ஏற்படும். மேலும் குடும்ப உறுப்பினர்கள் பாசமாக நடந்து கொள்வார்கள். மூன்று வளையல்கள் வீதம் அணிவதன் மூலம் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புகள் தேடி வரும். நான்கு வளையல்கள் அணியக்கூடாது. ஐந்து வளையல்கள் வீதம் அணிவதன் மூலம் பண பிரச்சினைகள் தீரும். ஆறு வளையல்கள் அணிவதன் மூலம் வசதி வாய்ப்பிற்கு எந்தவித பஞ்சமும் இல்லாமல் சுகவாசியாக வாழ்வார்கள்.

இதையும் படிக்கலாமே: வியாபாரம் செழிக்க மட்டை தேங்காய் பரிகாரம்

இதுவரை வளையலை பற்றி தெரியாமல் ஏனோ தானோ வென்று உபயோகப்படுத்துறியவர்கள் இனிமேல் இந்த பதிவை பார்த்துவிட்டு அதற்கு ஏற்றார் போல் அணிந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுங்கள்.

- Advertisement -