ராகு – கேது, நாக தோஷங்கள் நீங்க இக்கோவிலுக்கு சென்று இவற்றை செய்யுங்கள் போதும்

kalhasti-logo
- Advertisement -

ஆந்திர மாநிலத்தில் “காளஹஸ்தி” என்கிற ஊரில் இருக்கிறது “ஸ்ரீ காளஹஸ்தி” திருக்கோவில். மிகவும் பழமையான இந்த கோவிலில் இருக்கும் சிவலிங்கம் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால் இந்த கோவிலின் அர்ச்சகர்கள் கூட காளஹஸ்தி சிவலிங்கத்தை தங்கள் கைகளால் அதிகம் தொடாதவாறு பூஜை சடங்குகளை செய்கின்றனர். இப்படிப்பட்ட காளஹஸ்தி கோவில் ராகு – கேது கிரகங்கள் தோஷம், நாக – சர்ப்ப தோஷம் போன்ற தோஷங்களை போக்கும் பரிகார தலமாக இருக்கிறது. இந்த காளஹஸ்தி கோவிலில் தோஷ பரிகாரங்களை செய்யும் முறை குறித்து இங்கு காண்போம்.

காளஹஸ்தி பரிகாரம்

நிழல் கிரகங்களான ராகு – கேது ஒரு நபரின் ஜாதகத்தில் பாதகமான நிலையில் கோட்சாரம் பெறும் போது மிகுந்த துன்பங்களை அந்த நபர் அனுபவிப்பார். அப்படியான நிலையை தங்கள் ஜாதகத்தில் கொண்டவர்கள் இக்கோவிலில் வந்து பரிகார பூஜையை மேற்கொள்வது நல்லது. ராகு – கேது பாம்பு வடிவம் கொண்டவர்கள் என்பதால் நாக – சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இங்கு பரிகார பூஜைகள் மேற்கொள்ளவது அவர்களின் தோஷங்களை போக்கும்.

- Advertisement -

காளஹஸ்தி பரிகார பூஜை முழுமையான பலனை தருவதற்கு, காளஹஸ்தி கோவிலில் பரிகார பூஜை செய்ய இருக்கும் நபர்கள் சில நாட்களுக்கு முன்பாகவே அசைவ உணவு, புகைபிடித்தல், மதுஅருந்துதல் போன்ற பழக்கங்களை நிறுத்தி உடலளவிலும், மனதளவிலும் தூய்மையை கடைபிடிக்க வேண்டும். பரிகார பூஜை செய்யும் காலம் வரை வெறும் தரையில் படுத்து உறங்குவது நல்லது.பரிகார பூஜை செய்யும் தினத்தன்று தலைக்கு ஊற்றி குளிக்க வேண்டும். காளஹஸ்தி கோவிலுக்கு முடிந்த வரை அதிகாலையிலேயே சென்று, காலை பூஜையின் போது காளஹஸ்தி கோவில் சிவலிங்க அபிஷேகத்திற்கு பால் வழங்க வேண்டும்.

இந்த அபிஷேகத்திற்கு பிறகு உங்கள் நட்சத்திரத்திற்குரிய நேரத்திலோ அல்லது ராகு காலத்திலோ ராகு – கேது பரிகார பூஜைகளை அங்கிருக்கும் அர்ச்சகர்களின் வழிகாட்டுதல் படி செய்து வழிபட வேண்டும்.ராகு – கேது பகவான்களுக்கு பரிகார பூஜைகள் செய்பவர்கள், ராகு – கேது பகவான்களை தரையில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்கராம் செய்யக்கூடாது. கோவிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்கள் சிலருக்கு உணவு பொட்டலங்களை தானமாக அளிப்பது நன்மை தரும்.

- Advertisement -

annadhanam 1

இந்த காளஹஸ்தி பரிகார பூஜையை அக்கோவிலில் செய்த பிறகு நேரே உங்கள் இல்லத்திற்கு திரும்ப வேண்டும். பிற கோவில்களுக்கோ, மற்றவர்களின் வீடுகளுக்கோ செல்லக்கூடாது. வீட்டிற்கு வந்த பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் தலைக்கு ஊற்றி குளிக்க வேண்டும். இந்த முறைகளை கடைபிடிப்பதால் காளஹஸ்தி பரிகாரம் முழுமையான பலனை அளிக்கும்.

இதையும் படிக்கலாமே:
சூலம் திசை என்றால் என்ன? அதற்கான பரிகாரங்கள் என்ன

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sri Kalahasti pariharam in Tamil or kalahasti temple pariharam in tamil or Kalahasti kovil pariharam in Temple and benefits of that pariharam.

- Advertisement -