கலக்கலான கத்திரிக்காய் சட்னி ஒரு முறை இப்படி அரைத்து பாருங்களேன். பிறகு இந்த சட்னிக்கு உங்க வீட்ல நிறைய டிமாண்ட் வந்துடும்.

chutney3
- Advertisement -

கத்தரிக்காயை அப்படியே சமைத்துக் கொடுத்தால், வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட மாட்டார்கள். நிறைய பேருக்கு கத்திரிக்காய் பிடிக்காது. ஆனால் கத்திரிக்காயை உணவோடு சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. இது கத்திரிக்காய் சட்னி என்று சொல்லாதீங்க. கார சட்னி போல அரைத்து வையுங்கள். ஆனால் இந்த சட்னியில் லேசாக ருசி வித்தியாசம் தெரியும். ஆனாலும் அந்த ருசி எல்லோருக்கும் பிடிக்கும். அப்படி ஒரு கத்திரிக்காய் சட்னியை தான் இன்று நாம் அரைக்கப் போகின்றோம்.

இந்த சட்னியை ஒரு முறை அரைத்துக் கொடுத்தால் மீண்டும் மீண்டும் இந்த சட்னியை அரைக்க வேண்டும் என்று வீட்டில் இருப்பவர்கள் கேட்கும் அளவுக்கு இதன் ருசி இருக்கும். வாங்க அந்த கலக்கல் கத்திரிக்காய் சட்னி ரெசிபி நாமும் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

செய்முறை

அடுப்பில் முதலில் கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வர மிளகாய் – 6 லிருந்து 7 உங்கள் காரத்திற்கு ஏற்ப போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அடுத்து அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 போட்டு, லேசாக வதக்குங்கள். கண்ணாடி பதம் வந்தவுடன் நறுக்கிய கத்திரிக்காய் – 2, போட்டு வதக்கவும். கத்தரிக்காய் பாதி வெந்து வந்தவுடன் நறுக்கிய தக்காளி பழம் – 2 போட்டு வதக்குங்கள்.

இப்போது வெங்காயம் தக்காளி கத்திரிக்காய் எல்லாம் நன்றாக வதங்கி வெந்து சுருங்கி வரும்போது கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி, அளவு தேங்காய் துருவல் – 2 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, போட்டு எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொடுத்து அடுப்பை அணைத்து விடுங்கள். (தேங்காய் சேர்க்காமல் இந்த சட்னி அரைத்தாலும் சுவையாக தான் இருக்கும்.)

- Advertisement -

இப்போது இந்த கலவையை நன்றாக ஆற வைத்து அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும். அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கரைக்கவும். இதற்கு நல்லெண்ணெயில் கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், வரமிளகாய் – 2, பெருங்காயம்,  கருவேப்பிலை போட்டு தாளித்து மணக்க மணக்க இதில் கொட்டவும். இப்போது இந்த சட்னியை கலந்து சுடச்சுட இட்லி தோசைக்கு பரிமாறினால் வேற லெவல் டேஸ்ட் இருக்கும்.

மீடியம் சைஸில் இருக்கும் வெங்காயம், கத்தரிக்காய், தக்காளியை, சட்னிக்கு பயன்படுத்தவும். ஓரளவுக்கு சரியான சைசாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் பெரிய வெங்காயம், ரொம்பவும் சின்ன கத்திரிக்காய், அப்படி போடக்கூடாது. வெங்காயம் தக்காளி கத்திரிக்காய் மூன்றும் சம அளவில் போட்டு இந்த சட்னியை அரைத்தால் சுவை சூப்பராக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் எதுவுமே இல்லைன்னாலும் இனி கொஞ்சம் கூட டென்ஷனே ஆகாம ஒரு கப் அவல் இருந்தா அத வச்சு மொறு மொறுன்னு இந்த அட்டகாசமான தோசையை ரெடி பண்ணிடலாம்.

அதேபோல ரொம்பவும் முத்தின கத்திரிக்காயை இந்த சட்னிக்கு பயன்படுத்தக் கூடாது. இலசாக இருக்கும், உள்ளே விதை இல்லாமல் இருக்கும் கத்தரிக்காயை பயன்படுத்துங்கள். கத்திரிக்காய்க்கு உள்ளே முத்திய விதை நிறைய இருந்தால் அதை கழுவும் போது லேசாக நீக்கிவிடுங்கள். நிறைய விதை உள்ள கத்திரிக்காய்களை சட்னியில் சேர்த்தால் அதில் சுவை லேசாக வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சமையல் குறிப்பு பிடித்தவர்கள் அவசியம் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -