வீட்டில் எதுவுமே இல்லைன்னாலும் இனி கொஞ்சம் கூட டென்ஷனே ஆகாம ஒரு கப் அவல் இருந்தா அத வச்சு மொறு மொறுன்னு இந்த அட்டகாசமான தோசையை ரெடி பண்ணிடலாம்.

aval dosai
- Advertisement -

காலை இரவு இரண்டு வேளையும் டிபன் என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது இந்த இட்லி தோசை தான். இதை செய்ய மாவு இல்லாத பட்சத்தில் தான் அடுத்த உணவைப் பற்றிய யோசிப்போம். இனி வீட்டில் மாவு இல்லாத பட்சத்தில் ஒரு கப் அவல் இருந்தால் அதை வைத்து ரொம்பவே சூப்பரான இந்த கிரிஸ்பி தோசையை ரெடி பண்ணிடலாம். வாங்க அது எப்படி தயார் செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த தோசை செய்வதற்கு முதலில் ஒரு டம்ளர் ஜவ்வரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு மாவு ஜவ்வரிசையாக இருந்தால் தான் தோசை ரொம்ப ருசியாக இருக்கும். அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து இந்த ஜவ்வரிசியை நிறம் மாறும் வரை லேசாக வறுத்த பின் ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து ஒரு டம்ளர் சிகப்பு அவலை எடுத்துக் கொள்ளுங்கள். சிகப்பு அவலை சேர்க்கும் போது இந்த தோசையின் நிறமும் நன்றாக இருக்கும். அதே சமயம் சுவையும் அட்டகாசமாக இருக்கும். ஒரு வேளை உங்களிடம் வெள்ளை அவல் தான் இருக்கிறது என்றால் அதையும் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

இப்போது வறுத்த ஜவ்வரிசி, அவல் இரண்டையும் ஒன்றாக மிக்ஸி ஜாரில் சேர்த்து லேசான கொரகொரப்பு தன்மையுடன் அரைத்து எடுத்து ஒரு பவுலில் போட்டு விடுங்கள். இதில் ஒரு சிறிய வெங்காயத்தை பொடியாக அரிந்து சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் பாதி தக்காளி, ஒரு பச்சை மிளகாய் இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி இந்த மாவில் கலந்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு இந்த மாவிற்கு தேவையான அளவு உப்பு, அரை டீஸ்பூன் தனி மிளகாய் தூள் சேர்த்த பிறகு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி முதலில் கலந்து விடுங்கள். அதன் பிறகு இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இதை தோசை மாவின் பதத்தை விட கொஞ்சம் தண்ணீராக கலந்து கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் தோசை கல் வைத்து சூடான பிறகு இந்த மாவை எடுத்து ரவை தோசை ஊற்றுவது போல சுற்றி ஊற்ற வேண்டும். நாம் சாதாரணமாக ஊற்றுவது போல கல்லில் மாவை சேர்த்து தேய்த்து விடக் கூடாது. இதன் பிறகு ஒரு புறம் சிவந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு நெய் அல்லது செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் சேர்த்து சுட்டால் தோசை சுவை அருமையாக இருக்கும்.

இதையும் படிக்காலமே: மொறுமொறுன்னு போண்டா 10 நிமிஷத்தில் தோசை மாவிலேயே சுடலாமா அதெப்படி? கிரிஸ்பியான தோசை மாவு போண்டா ரெசிபி இதோ!

இந்த எளிமையான தோசையை வெறும் 5 நிமிடத்தில் செய்து விடலாம். இந்த தோசைக்கு சைட்டிஷ கூட தேவை இல்லை. இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -