அரசியல் தலைவர்கள் நட்பை தரும் கலாநிதி யோகம்

மனிதர்கள் அனைவருக்குமே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இருக்கவே செய்வார்கள். இவர்களில் பலரும் நமக்கு பல நேரங்களில் பல வகைகளில் உதவி புரிகிறார்கள். ஆனால் எல்லோருக்கும் அரசியலில் உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதர்களின் நட்பு கிடைத்தால் நமக்கு பல வகைகளில் உதவியாக இருக்கும் என்ற எண்ணம் எழாமல் இருந்திருக்காது. ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் யோகங்களில் உயர்ந்த மனிதர்களின் நட்பு மற்றும் இன்ன பிற நன்மைகளை ஏற்படுத்தும் “கலாநிதி யோகம்” பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

astro

ஒரு நபரின் ஜாதகத்தில் புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்கள் சேர்ந்து 2 ஆம் வீட்டிலோ அல்லது 5 ஆம் வீட்டிலோ இருந்தாலும் அல்லது மேற்கூறிய ராசி வீடுகளில் ஏதேனும் ஒன்றில் குரு கிரகம் இருந்து, அக்குரு கிரகம் இருக்கும் வீட்டை புதன் மற்றும் சுக்கிரன் கிரகங்கள் பார்ப்பதாலும் இந்த “கலாநிதி யோகம்” ஏற்படுகிறது. இந்த கலாநிதி யோகம் மிகவும் அரிதாக ஏற்படக்கூடிய யோகங்களில் ஒன்றாகும்.

கலாநிதி யோகத்தில் பிறந்தவர்கள் நல்ல குணநலன்களை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பிறக்கும் போது இவர்களின் குடும்பம் ஓரளவிற்கு பொருளாதார வசதி மிகுந்த நிலையிலிருக்கும். இவர்கள் பிறந்த பின்பு இவர்களின் குடும்பத்திற்கு நல்ல செல்வா சேர்க்கை உண்டாகும். நோய்கள் எளிதில் அண்டாத உடல்நலம் பெற்றிருப்பார்கள். பலம் வாய்ந்த உடலும் பிறரை வசீகரிக்கும் முகத்தோற்றம், குரல்வளம் ஆகியவற்றை கொண்டவர்களாக இருப்பார்கள்.

சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பதால் அரசியல் துறையில் இவர்கள் மிகவும் புகழ் பெறுவார்கள். தங்களின் பேச்சாற்றலால் அனைவரையும் தன் பக்கம் ஈர்ப்பார்கள். இவர்களின் வாழ்க்கையில் 24 வயது முதல் அதிக செல்வ சேர்க்கை ஏற்பட தொடங்கும். ஆடம்பரமான வீட்டை கட்டி வாழ்வார்கள். ஆடம்பரமான, விலையுயர்ந்த வாகனங்கள் பலவற்றை இவர்கள் பெற்றிருப்பார்கள். பிரதமர், முதலமைச்சர் போன்றவர்களின் நட்பு இவர்களுக்கு உண்டாகும். அவர்களால் பல ஆதாயங்களை கலாநிதி யோகம் கொண்டவர்கள் பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே:
அனைத்திலும் வெற்றி பெற செய்யும் வரிஷ்ட யோகம்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kalanidhi yoga in Tamil. It is also Jathaga yogangal in Tamil or Jothida yogangal in Tamil or Jodhida yogam in Tamil.