அனைத்திலும் வெற்றி பெற செய்யும் வரிஷ்ட யோகம்

நமது முற்பிறவியில் நாம் செய்த நன்மை, தீமைகளை பொறுத்த நமது இப்பிறவி அமைகிறது என்பது நமது சமயங்களில் கூறப்பட்டிருக்கிறது. ஜோதிட கலையில் ஒரு நபர் மிகுந்த நற்பலன்கள் பெறுவதற்கு, அவரது ஜாதகத்தில் முற்பிறவியில் செய்த நல்வினைகளே காரணம் என்றும், அந்த நல்வினை பயன்களால் அந்த நபரின் ஜாதகத்தில் யோகங்கள் ஏற்பட்டு, பல நற்பலன்களை பெறுகிறார்கள் என கூறுகிறது. அந்த வகையில் நற்பலன்களை அதிகம் கொடுக்கும் “வரிஷ்ட யோகம்” குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Lord-Chandra

செல்வதை ஒரு நபரின் ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன், சூரியன் இருக்கும் ராசிக்கு ” 3, 6, 9, 12 ” ஆகிய ராசிகளில் இருந்தால் அந்த ஜாதகருக்கு “வரிஷ்ட யோகம்” உண்டாக்குகிறது. மேற்கூறிய இடங்களில் தேய்பிறை சந்திரன் இருந்தால் அவ்வளவு சிறப்பான பலன்களை தராது.

ஜாதகத்தில் வரிஷ்ட யோகம் கொண்ட நபர்கள் சிறந்த அறிவாற்றலுடன் விளங்குவார்கள். நற்குணங்களை நிரம்ப பெற்றவர்களாகவும் இருப்பார்கள். எதிலும் ஒரு ஒழுக்கத்தை கடைபிடிக்க விரும்புவார்கள். இவர்களிடம்
ஞாபகத்திறன் அதிகமிருக்கும். எல்லாவற்றையும் மிக நுண்ணியமாக ஆராயும் தன்மை இவர்களிடம் அதிகமிருக்கும். கல்வி, கலைகள் போன்றவற்றை கற்பதில் அதிகம் ஆர்வம் இருக்கும். மிகுந்த தைரியசாலிகள் என்பதால் தங்கள் மனதிற்கு சரியாக பட்டதை துணிந்து செய்வார்கள். சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். சிலர் சாகச விரும்பிகளாகவும் இருப்பார்கள்

sucess

ஒரு சிலருக்கு சமூகத்தில் உயர்ந்த மனிதர்களின் நட்பு ஏற்படும். சூழ்நிலைகள் நன்றாக அமைந்தால் சிலர் அரசியல் தலைவர்களாகவும் உருவெடுக்க கூடும். மக்கள் செல்வாக்கு உண்டாகும். அரசாங்க நிர்வாக துறையில் பணியாற்றுபவர்களுக்கு மிக உயர்ந்த பதவிகள் அவர்களை தேடி வரும். முப்பது வயது காலத்திற்கு பிறகு செல்வம் அதிகம் சேர தொடங்கும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் சிறந்த வெற்றிகளை பெறும் அமைப்பு இந்த வரிஷ்ட யோககாரர்களுக்கு உண்டு.

இதையும் படிக்கலாமே:
செல்வதை அள்ளி தரும் துவஜ யோகம்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Varishtha yoga or Varishtha yogam benefits in Tamil. It is also called as Varishtha yogam palangal or Varishtha yogam nanmaigal in Tamil