கலந்த சட்னி செய்முறை

kalantha chutney
- Advertisement -

நம்முடைய உணவு பழக்க வழக்கத்தில் காலையிலும் மாலையிலும் பலகாரங்களை செய்வது வழக்கமாகிவிட்டது. இட்லி, தோசை, சப்பாத்தி, அடை பொங்கல் என்று ஏதாவது ஒரு வகையான டிபன் ஐட்டத்தை காலையிலும் இரவிலும் செய்து வருகிறோம். அப்படி செய்யும் பொழுது அதற்கு ஏற்றவாறு தொட்டுக்கொள்ள ஏதாவது ஒரு சட்னியை செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்படி நாம் சட்னியை யோசிக்கும் பொழுது ஒன்று தேங்காய் சட்னி இல்லையென்றால் தக்காளி சட்னி என்றுதான் அடிக்கடி செய்வோம்.

இப்படி ஒரே விதமாக சட்னியை செய்வதற்கு பதிலாக இரண்டு சட்னிகளை ஒன்றாக சேர்த்து செய்யும் பொழுது அதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இன்றைய காலத்தில் சில பிள்ளைகளுக்கு தேங்காய் சட்னி என்றால் மிகவும் பிடிக்கும். இன்னும் சில பிள்ளைகளுக்கு தக்காளி சட்னி என்றால் மிகவும் பிடிக்கும். ஒருவருக்கு ஒன்று செய்துவிட்டு மற்றொருவருக்கு இன்னொன்னு செய்யும் சூழ்நிலை ஏற்படுவதற்கு பதிலாக இரண்டு பேருக்கும் பிடித்தார் போல இருக்கக்கூடிய அருமையான ஒரு கலந்த சட்னியை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • பெரிய வெங்காயம் – 1
  • சின்ன வெங்காயம் – 5
  • தக்காளி – 1
  • பச்சை மிளகாய் – 1
  • வரமிளகாய் – 2
  • கருவேப்பிலை – 2 இனுக்கு
  • கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
  • இஞ்சி – ஒரு இன்ச்
  • பூண்டு – 4
  • தேங்காய் – அரை மூடி
  • உடைத்த கடலை – ஒரு டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு வர மிளகாய் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி விட்டு பெரிய வெங்காயத்தையும், சின்ன வெங்காயத்தையும் அதில் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு இதை அடுப்பில் இருந்து அப்படியே இறக்கிவிட்டு ஆற விட வேண்டும். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் நாம் வதக்கி வைத்திருக்கும் பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அதனுடன் மீதம் இருக்கும் துருவிய தேங்காய், உடைத்த கடலை, கொத்தமல்லி இவற்றையும் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.

அரைத்த இந்த சட்னியை ஒரு பவுலில் மாற்றிக்கொண்டு தாளிப்பதற்கு தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு உளுந்து, கருவேப்பிலை, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து அப்படியே சட்னியில் ஊற்றி விட வேண்டும். அவ்வளவுதான் கலந்த சட்னி தயாராகிவிட்டது. இந்த சட்னியில் தக்காளி சட்னியின் சுவையும் வரும் தேங்காய் சட்னியின் சுவையும் வரும்.

இதையும் படிக்கலாமே: பாய் வீட்டு பிரியாணி மசாலா அரைக்கும் முறை

வித்தியாசமான சுவையில் அதேசமயம் தங்களுக்கு விருப்பமான சுவையும் கலந்தார் போல் இருக்கக்கூடிய இந்த சட்னியை செய்து தருவதன் மூலம் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -