தீராத கஷ்டங்களைக் கூட சுலபமாக தீர்த்து வைக்கும் ‘கலச சொம்பு’.

முந்தைய காலங்களில் இருந்தே பெரிய பூஜை செய்வதாக இருந்தாலும், யாகங்கள் நடத்துவதாக இருந்தாலும், கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதாக இருந்தாலும் முதலில் முக்கியத்துவம் கொடுப்பது கலச சொம்பிற்கு தான். இதற்கு முக்கிய காரணம் நல்ல சக்திகளையும், கடவுள் சக்தியையும் ஈர்த்து, வசப்படுத்தி, கலசத்தில் அமர வைத்து, பூஜை செய்து, கடவுளின் மனம் குளிர வைக்கும்போது, அந்த நல்ல சக்திகளின் மூலம் நம்மால் பல நன்மைகளை பெற முடியும். குறிப்பாக இந்த கலசங்கள் செம்பிலும், பித்தளையிலும் வைப்பதற்கு காரணம், நல்லதை ஈர்க்கும் தன்மையானது இந்த இரண்டு உலகங்களுக்கும் உண்டு என்பதுதான். நல்ல சக்திகளை ஈர்க்கும் இந்த இரண்டு உலோகங்கள் கலந்த கலசத்தின் மூலம் நாம் எவ்வாறு பயன் பெறலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kalasam

நம் வீட்டில் இருக்கும் வாஸ்து  சாஸ்திர பிரச்சினையாக இருந்தாலும், கண் திருஷ்டி பிரச்சனையாக இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத தீயசக்திகளாக இருந்தாலும், நம்மை விட்டு நீங்க வேண்டும் என்றால் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம். மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சினைகள் எல்லாம் இருந்தால் கட்டாயம் நம் வீட்டில் பண கஷ்டமும் இருக்கும். இந்த பிரச்சினைகள் எல்லாம் தீரும் போது, வருமானம் நமக்கு தானாகவே வந்துவிடும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு தேவையான பொருட்கள். செம்பு, பித்தளை இரண்டும் கலந்த கலச சொம்பு. பூஜை விளக்குகள் விற்கும் கடையில் கிடைக்கின்றது. கீழ்ப்பகுதியில் பித்தளை, மேல்பகுதியில் செம்பு இப்படி, இரு உலோகங்களும் கலந்த சொம்பு 1, அஞ்சனக்கல் 3, இது எல்லாம் நாட்டு மருந்து கடைகளிலும் விற்கப்படுகிறது. இந்த கல்லை நீலாஞ்சனம், கருமாக்கல் என்ற மற்ற பெயர்களிலும் கூறுவார்கள். அடுத்ததாக பச்சைகற்பூரம் 5. இந்து உப்பு ஒரு கைப்பிடி அளவு. முதலில் இவை அனைத்தையும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

கலச சொம்பை கழுவி சுத்தம் செய்துவிட்டு, அதன் பின்பு முதலில் அஞ்சனக் கல்லை கலசத்தில் போட வேண்டும். இரண்டாவதாக பச்சை கற்பூரம். மூன்றாவதாக இந்து உப்பை கொட்டி நிரப்பி விட வேண்டும். இந்த வரிசையில்தான் கட்டாயம் கலச சொம்பு தயார் செய்ய வேண்டும். இதை நீங்கள் எந்த கிழமையில், எந்த நேரத்திலும் வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம். இந்த கலசல்தை உங்களது வீட்டில் எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக கால் படக்கூடாது, கொட்டக் கூடாது என்பதை மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. இதில் இருக்கும் எந்த பொருளும் கெட்டுப்போகாது. மாற்ற வேண்டும் என்று அவசியம் இருந்தால் 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்றிக் கொள்வது நல்லது.

Anjana kallu

சித்தர்கள் காலத்திலிருந்தே அஞ்சனக்கல்லிற்க்கு அதிகப்படியான மகத்துவம் உள்ளது. எந்த ஒரு நல்ல சக்தியையும் ஈர்க்கும் தன்மை கொண்டது தான் இந்தக் கல். இதனுடன் சேர்க்கப்பட்டிருக்கும் பச்சை கற்பூரமும், இந்து உப்பும் எவ்வளவு மகத்துவம் கொண்டது என்பதை நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இந்த மூன்று பொருட்களும் ஒன்றாக சேர்ந்து, குறிப்பாக இந்த இரண்டு உலோக கலசத்தில் இருக்கும்போது இதற்கு இருக்கும் மகிமையை நம் வாயால் சொல்லிவிட முடியாது. சாஸ்திரப்படி அவ்வளவு மகத்துவம் கொண்டதுதான் இந்த கலச சொம்பு. ஒருமுறை உங்களின் வீட்டில் வைத்து பலனை அடைந்து தான் பாருங்களேன்! இந்த கலச சொம்பு முறையை அந்த காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் வீட்டில் பயன்படுத்தி வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்கள் மண் பானையில் இந்த பொருட்கள் எல்லாம் ஒருசேர போட்டு, செம்பு நாணயம், பித்தளை நாணயம் இவைகளை சேகரித்து போட்டுவைத்து பயன் அடைந்துள்ளதாக சில குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது. ஆகவே இந்த பரிகாரத்தை செய்வதில் எந்த ஒரு பாதிப்பும் நமக்கு ஏற்படாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
கற்பூரத்தில் இத்தனை மகத்துவமா? மறைக்கப்பட்ட ரகசியங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kalasam vaikum murai in Tamil. Kalasam benefits in Tamil. Kalasa pooja. Kalasha pooja details.