துவண்டு போன என்னை நான் நினைத்தபடி பந்துவீச தோனியே காரணம். அவரால் தான் இன்று இரண்டு போல்டு எடுத்தேன் – கலீல் வீடியோ

Kaleel

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 158 ரன்களை அடித்தது. நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

Team

அடுத்து ஆடிய இந்திய அணி எளிதாக சேசிங் செய்து வென்றது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 50 ரன்களும், பண்ட் 40 ரன்களும் அடித்தனர். குருனால் பாண்டியா சிறப்பாக பந்துவீசி 28 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆட்டநாயகன் விருதை குருனால் பாண்டியா தட்டி சென்றார்.

போட்டி குறித்து பேசிய கலீல் : சென்ற போட்டியில் 4 ஓவர்களுக்கு 45 ரன்கள் கொடுத்ததால் கொஞ்சம் விரக்தியில் துவண்டு இருந்தேன். ஆனால், இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினேன். அதற்கு முழு காரணம் தோனி தான் அவரை யோசனைப்படி பந்துவீசினேன். அதில் வெற்றியும் கண்டேன்.

அவர் என்னை தைரியமாக உள்ளே பந்துகளை வீச சொன்னார். நானும் அவ்வாறு பந்து வீசினேன், இரண்டு போல்டு எடுத்தேன் என்று கூறினார் கலீல் அகமது.

இதையும் படிக்கலாமே :

என்ன ஸ்பீடு. மின்னல் வேகத்தில் வந்த பந்து கணிக்க முடியாமல் தலையில் அடிவாங்கி வெளியேறிய தவான் – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்