என்ன ஸ்பீடு. மின்னல் வேகத்தில் வந்த பந்து கணிக்க முடியாமல் தலையில் அடிவாங்கி வெளியேறிய தவான் – வீடியோ

Dhawan

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 158 ரன்களை அடித்தது. நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

rohith dhawan

அடுத்து ஆடிய இந்திய அணி எளிதாக சேசிங் செய்து வென்றது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 50 ரன்களும், பண்ட் 40 ரன்களும் அடித்தனர். குருனால் பாண்டியா சிறப்பாக பந்துவீசி 28 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆட்டநாயகன் விருதை குருனால் பாண்டியா தட்டி சென்றார்.

இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான தவான் 31 பந்தில் 30 ரன் எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான பெர்குசன் வீசிய மின்னல் வேகப்பந்தில் தனது கட்டுப்பாட்டை இழந்து பந்து பேட்டில் பட்டு கேட்சாகி ஆட்டமிழந்து வெளியேறினார். இதோ அந்த அசுரவேக பந்து வீடியோ :

இந்த வீடியோவில் தவான் ஹெல்மெட் நகருவதை தெலிவாக காணமுடியும். அந்த அளவிற்கு வேகத்தில் பந்து வந்தது. அவுட் ஆனதும் சற்று ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார் தவான்.

இதையும் படிக்கலாமே :

ஏறி வந்து சிக்ஸ் அடிக்க நினைத்த தல தோனி. கடைசில அவரை வித்த காட்ட வச்சிட்டாங்க. அசாத்திய திறமையால் பந்தை நிறுத்திய தல – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்