காளியம்மன் 108 போற்றி

kaliamman-compressed
- Advertisement -

நாம் காணும் அனைத்து விடயங்களுமே இரண்டு அம்சங்களை கொண்டதாகவே இருக்கிறது. ஆண் மற்றும் பெண் போல, வாழ்க்கை மற்றும் மரணம் என்பது போன்று உலகெங்கும் நல்லவை மற்றும் கெட்டவை இருக்கின்றன. நம்முடன் வாழும் சக மனிதர்களின் பொறாமை மற்றும் நமக்கு தீமை ஏற்பட வேண்டும் என்கிற எண்ணங்கள் மற்றும் விருப்பங்களாலும் நம்முடைய வாழ்வில் பல சங்கடங்கள் ஏற்படுவதை உணரலாம். இவையனைத்தையும் போக்கும் ஒரு சிறந்த மந்திரம் தான் “காளியம்மன் 108 போற்றி”.

Rajakali Amman

காளியம்மன் 108 போற்றி

1. ஓம் காளியே போற்றி
2. ஓம் அனுக்கிரகம் அருள்பவளே போற்றி
3. ஓம் அல்லல் தீர்ப்பவளே போற்றி
4. ஓம் அஷ்டபுஜம் கொண்டவளே போற்றி
5. ஓம் அகநாசினியே போற்றி
6. ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி
7. ஓம் அங்குசம் ஏந்தியவளே போற்றி
8. ஓம் ஆதாரசக்தியே போற்றி
9. ஓம் ஆலகாலத் தோன்றலே போற்றி
10. ஓம் இளங்காளியே போற்றி
11. ஓம் இடுகாட்டில் இருப்பவளே போற்றி
12. ஓம் இஷ்டதேவதையே போற்றி
13. ஓம் இடர் களைபவளே போற்றி
14. ஓம் ஈறிலாளே போற்றி
15. ஓம் ஈரெண் முகத்தாளே போற்றி
16. ஓம் உயிர்ப்பிப்பவளே போற்றி
17. ஓம் உக்ரகாளியே போற்றி
18. ஓம் உஜ்ஜைனி காளியே போற்றி
19. ஓம் உதிரம் ஏற்பவளே போற்றி
20. ஓம் ஊழிசக்தியே போற்றி
21. ஓம் எழுதலைக்காளியே போற்றி
22. ஓம் எலுமிச்சை பிரியையே போற்றி
23. ஓம் ஓங்காரியே போற்றி
24. ஓம் கருங்காளியே போற்றி
25. ஓம் காருண்யதேவியே போற்றி
26. ஓம் கபாலதாரியே போற்றி
27. ஓம் கல்யாணியே போற்றி
28. ஓம் காக்கும் அன்னையே போற்றி
29. ஓம் காளராத்ரியே போற்றி
30. ஓம் காலபத்னியே போற்றி

- Advertisement -

31. ஓம் குங்குமகாளியே போற்றி
32. ஓம் குலம் காத்தருள்வாய் போற்றி
33. ஓம் சமரில் வெல்பவளே போற்றி
34. ஓம் சத்திய தேவதையே போற்றி
35. ஓம் சம்ஹார காளியே போற்றி
36. ஓம் சண்டமுண்ட சம்ஹாரிணியே போற்றி
37. ஓம் சிம்ம வாகினியே போற்றி
38. ஓம் சிறுவாச்சூர் தேவியே போற்றி
39. ஓம் சிவசக்தியே போற்றி
40. ஓம் சீற்றம் கொண்டவளே போற்றி
41. ஓம் சுடலைக்காளியே போற்றி
42. ஓம் சுந்தர மாகாளியே போற்றி
43. ஓம் சூலம் கொண்டவளே போற்றி
44. ஓம் செங்காளியே போற்றி
45. ஓம் செல்வம் தருபவளே போற்றி
46. ஓம் சேர்வாரை காப்பாய் போற்றி
47. ஓம் சொர்க்கம் தருவாய் போற்றி
48. ஓம் சோமகாளியே போற்றி
49. ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
50. ஓம் தனகாளியே போற்றி
51. ஓம் தட்சிணகாளியே போற்றி
52. ஓம் தசமுகம் கொண்டவளே போற்றி
53. ஓம் தாண்டவமாடினாய் போற்றி
54. ஓம் தாருகனை அழித்தாய் போற்றி
55. ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
56. ஓம் தில்லைக்காளியே போற்றி
57. ஓம் தீமையை அழிப்பாய் போற்றி
58. ஓம் தீயவர் பகைவியே போற்றி
59. ஓம் நல்லவர் துணைவியே போற்றி
60. ஓம் நலன்கள் தருவாய் போற்றி

61. ஓம் நவக்கிரக நாயகியே போற்றி
62. ஓம் நம்பிக்கை நட்சத்திரமே போற்றி
63. ஓம் நாளெலாம் அருள்வாய் போற்றி
64. ஓம் நால்திசையும் காப்பாய் போற்றி
65. ஓம் நாடாளும் தேவியே போற்றி
66. ஓம் நாகாபரணம் அணிந்தாய் போற்றி
67. ஓம் நிர்மலமாய் நின்றாய் போற்றி
68. ஓம் நித்தியகாளியே போற்றி
69. ஓம் நிக்ரஹ காளியே போற்றி
70. ஓம் பல்பெயர் கொண்டாய் போற்றி
71. ஓம் பராசக்தி தாயே போற்றி
72. ஓம் பஞ்சகாளியே போற்றி
73. ஓம் பஞ்சம் தீர்ப்பாய் போற்றி
74. ஓம் பயங்கரவடிவே போற்றி
75. ஓம் பத்ரகாளியே போற்றி
76. ஓம் பாதாளகாளியே போற்றி
77. ஓம் பாசாங்குசம் ஏந்தினாய் போற்றி
78. ஓம் பாலபிஷேகம் ஏற்பாய் போற்றி
79. ஓம் பாரெல்லாம் காப்பாய் போற்றி
80. ஓம் பூதகாளியே போற்றி
81. ஓம் பூவாடைக்காரியே போற்றி
82. ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
83. ஓம் பெருங்கண்ணியே போற்றி
84. ஓம் பேராற்றலே போற்றி
85. ஓம் பொன்வளம் தருவாய் போற்றி
86. ஓம் பொல்லாரை அழிப்பாய் போற்றி
87. ஓம் மதுரகாளியே போற்றி
88. ஓம் மடப்புரத்தாளே போற்றி
89. ஓம் மகாகாளியே போற்றி
90. ஓம் மகாமாயையே போற்றி

- Advertisement -

91. ஓம் மங்களரூபியே போற்றி
92. ஓம் மந்திரத்தாயே போற்றி
93. ஓம் மருந்தாய் வருவாய் போற்றி
94. ஓம் மாற்றம் தருவாய் போற்றி
95. ஓம் முக்கண்ணியே போற்றி
96. ஓம் மும்மூர்த்தி தலைவியே போற்றி
97. ஓம் மூவுலகம் ஆள்வாய் போற்றி
98. ஓம் மோகம் தீர்ப்பாய் போற்றி
99. ஓம் மோட்சம் தருவாய் போற்றி
100. ஓம் வளம் தரும் தேவியே போற்றி
101. ஓம் வரங்கள் அருள்வாய் போற்றி
102. ஓம் விரிசடையாளே போற்றி
103. ஓம் விண்ணகத்தலைவியே போற்றி
104. ஓம் வீரபத்ரகாளியே போற்றி
105. ஓம் வீணரை அழிப்பாய் போற்றி
106. ஓம் வெக்காளியே போற்றி
107. ஓம் வேதனை களைவாய் போற்றி
108. ஓம் காளி ஜெய் காளி ஓம் காளி ஜெய்காளி ஓம்காளி ஜெய்காளி போற்றி போற்றி

MathuraKaliamman

எத்தகைய தீமைகளையும் அழிக்கும் சக்திவாய்ந்த தெய்வமான காளியம்மனை போற்றும் 108 போற்றி துதி இது. இந்த துதியை தினமும் அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் துதிப்பது நல்லது. எல்லா அம்மன் தெய்வங்களை வழிபடும் தினமான செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அருகிலுள்ள காளியம்மன் கோயிலுக்கு சென்று எலுமிச்சை தீபம் ஏற்றி, இந்த 108 போற்றி துதிகளை கூறி வழிபடுவதால் உங்களின் தொழில், வியாபார மந்த நிலை நீங்கும். செய்வினை, பில்லி சூனிய கட்டுகள் விலகும். மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். வீட்டில் மற்றும் உங்களின் உடலில் பீடித்திருக்கும் துஷ்ட சக்திகள் நீங்கும்.

- Advertisement -

ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்கிற ஒரு தமிழ் பழமொழி உண்டு. அனைத்தையும் படைப் பவளாகவும், அனைத்து உயிர்களுக்கும் தாயாக இருந்து, உலகத்தை தீமைகளிலிருந்து காக்கும் சக்தியாக இருக்கிறாள் சக்தி தேவி. அந்த சக்தி தான் காளியம்மனாக வழிபடப்படுகிறாள். காளி தேவி மரணத்தின் வடிவமாக கருதப்படுகிறாள். மரணம் என்பது நமக்குள் இருக்கும் கீழான எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள், துஷ்ட சக்திகள் போன்றவற்றை மரணிக்கச் செய்து நம்மை வாழ்வில் சிறப்புற செய்யும் தெய்வமாக இருக்கிறாள் காளியம்மன்.

இதையும் படிக்கலாமே:
ரின் முகி மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kaliamman 108 potri in Tamil. It is also called Kaliamman manthiram in Tamil or Kali devi sthuthi in Tamil or Kaliamman stotram in Tamil or Kaliamman thuthi in Tamil or Kaliamman peyargal in Tamil.

- Advertisement -