ரின் முக்தி மந்திரம்

kadan-loan-compressed

வாழ்க்கையில் நிம்மதியாக வாழ பொருள் அவசியமாக இருக்கிறது. ஆனால் பல சமயங்களில் நமக்கு அதிகளவு பணம் தேவைப்படுகிறது. இத்தகைய சூழ்நிலைகளில் பலரும் தனி நபர்கள், வங்கிகள் ஆகியவற்றில் பணம் கடன் வாங்குகின்றனர். மற்ற பலர் கடன் அட்டைகளை பயன்படுத்தி பொருட்கள் வாங்குகின்றனர். இந்த எல்லா வகையான கடன்களும் அதிகரித்து ஒரு கட்டத்தில் கடனை அடைக்க முடியாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கான “ரின் முக்தி மந்திரம்” இதோ.

om tamil

ரின் முக்தி மந்திரம்

ஓம் விஸ்வதர்ஷன தேவ்தாய் நம்

இந்த மந்திரம் மிகவும் ஆற்றல் மிகுந்த ரின் முகி மந்திரம் ஆகும். இம்மந்திரத்தை நாம் வழக்கமான மந்திரம் துதிக்கும் முறையில் துதிக்க கூடாது. தினமும் காலையில் நீங்கள் குளிக்கின்ற போதே 18 முறை இந்த மந்திரத்தை துதிக்க வேண்டும். பெண்கள் மாதவிடாய் காலங்களில் இம்மந்திரத்தை துதிப்பதை தவிர்க்க வேண்டும். மேற்கண்ட மந்திரத்தை தொடர்ந்து துதித்து வருவதால் கடன் பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்கள், அனைத்து கடன்களையும் சீக்கிரத்தில் அடைக்கும் நிலை உண்டாகும். கடன் சம்பந்தமான பிரச்சனை இல்லாதவர்கள் கூட மந்திரத்தை துதிப்பதால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

நமது ஆன்மீக பெரியோர்களின் கருத்து படி பொருள் சம்பந்தமான எத்தகைய கடன்களையும் பிறரிடம் வாங்காமல் வாழும் வாழ்க்கையே சிறந்தது என கூறுகின்றனர். அவர்களின் கூற்று உண்மை தான் என்றாலும், சிலரின் சூழ்நிலைகள் அவர்களே விரும்பாவிட்டாலும் அவர்களை கடன் வாங்க செய்து விடுகிறது. கடன் வாங்கி அதை திரும்பி செலுத்த முடியாமல் தவிப்பவர்கள் மற்றும் கடன் வாங்கும் சூழ்நிலை தவிர்க்க விரும்புபவர்கள் இந்த ரின் முக்தி மந்திரத்தை துதித்து வருவவது நல்லது.

இதையும் படிக்கலாமே:
துன்பங்களிலிருந்து காக்கும் பைரவர் கவச மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rin mukti mantra in Tamil.