- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்நினைத்தாலே நாவூரும் சுவையில் கல்யாண வீட்டு காரக் குழம்பை இப்படி மட்டும் செஞ்சிங்கன்னா, நல்ல கம...

நினைத்தாலே நாவூரும் சுவையில் கல்யாண வீட்டு காரக் குழம்பை இப்படி மட்டும் செஞ்சிங்கன்னா, நல்ல கம கமன்னு வாசத்தோடு வீடே மணக்குன்னா பாருங்களேன்.

- Advertisement -

உணவு வகைகளை பொறுத்த வரையில் நாம் என்ன தான் வீட்டில் சுவையாக செய்தாலும் சில உணவுகள் கடைகளில் வாங்கி உண்பதைப் போல் இருப்பதில்லை. அதே போல தான் சில உணவுகளும் இந்த கல்யாண வீடுகளில் செய்வது போன்ற ருசியை நாம் வீட்டில் செய்யும் போது கிடைக்காது. அப்படி ஒரு சுவை மிகுந்த உணவு தான் கல்யாண வீடுகளில் வைக்கப்படும் இந்த மொச்சை கத்திரி காரக்ஸகுழம்பு. இந்த காரக் குழம்பை எப்படி அதே சுவையில் செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு கப் மொச்சை பயிரை ஊற வைத்து குக்கரில் சேர்த்து கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இத்துடன் 5 பல் பூண்டு, 20 சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் இரண்டு பெரிய சைஸ் தக்காளியும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள், ஒரு எலுமிச்சை பழ அளவு புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி இதையும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு மசாலா அரைக்க வேண்டும். அதற்கு அடுப்பில் கடாய் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடான பிறகு ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பு, ஒரு ஸ்பூன் தனியா, அரை ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம், ஐந்து காய்ந்த மிளகாய், கால் கப் தேங்காய் துருவல், ஐந்து சின்ன வெங்காயம் அனைத்தையும் சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்து தனியாக எடுத்து ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இதே கடாயில் மேலும் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த பின் ஐந்து கத்திரிக்காய் எடுத்து மேலே மட்டும் கீறி எண்ணெயில் சேர்த்து லேசாக வதக்கி இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இதே எண்ணெயில் கால் டீஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து (விருப்பபட்டால் இத்துடன் வடகம், சேர்த்து கொள்ளுங்கள்) பொரிந்த பிறகு மீதம் இருக்கும் சின்ன வெங்காயம் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதங்கிய பிறகு, ஏற்கனவே அரிந்து வைத்த தக்காளியும் சேர்த்து நன்றாக குழைந்து வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு இதில் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து எண்ணையிலே பச்சை வாடை போகும் வரை வதக்கிய பிறகு, கரைத்து வைத்த புளிக் கரைச்சலை ஊற்றி ஒரு முறை நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு நாம் அரைத்து வைத்து விழுதையும் இதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஒரு கப் கோதுமை மாவு இருந்தா பத்தே நிமிஷத்துல உங்க மொத்த குடும்பத்திற்கும் நல்ல ஒரு ஹெல்தியான ரெசிபியை ரெடி பண்ணிடலாம். காலை உணவை இதை விட ஹெல்த்தியா தரவே முடியாது.

குழம்பு நன்றாக கொதித்த பிறகு வேக வைத்த மொச்சையையும் வதக்கி வைத்த கத்திரிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை குழம்பை கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். நல்ல கமகமவென்று வாசனையுடன் கல்யாண வீட்டு காரக்குழம்பு தயார்.

சற்று முன்