கல்யாண வீட்டு சாம்பார் கமகமன்னு மணப்பதற்கு இந்த 1 பொருள் தாங்க காரணம். இந்த ரகசிய குறிப்பை தெரிந்து கொண்டால் நம் வீட்டிலும் தினம் தினம் மணக்க மணக்க விருந்து சாம்பார் தான்.

sambar2
- Advertisement -

கல்யாண வீட்டு சாம்பார். விருந்து சாம்பார் என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் நம்முடைய வீட்டில் காய்கறிகள் போட்டு சாம்பார் வைத்தால் மட்டும் வீட்டில் இருப்பவர்கள் யாருமே சாப்பிட மாட்டார்கள். கேட்டால் கல்யாண வீட்ல வைக்கிற சாம்பார் தான் சுவையாக இருக்குது அப்படின்னு சொல்லுவாங்க. அந்த விருந்து சாம்பாரை நம்முடைய வீட்டிலும் மணக்க மணக்க செய்யலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆசையாக உள்ளதா. கல்யாண வீட்டு சாம்பார் ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

இதற்கு முதலில் 1/2 கப் அளவு துவரம் பருப்பை குக்கரில் போட்டு வேகவைத்து எடுத்து கடைந்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து பெரிய எலுமிச்சம் பழம் அளவு புளியை தண்ணீரில் போட்டு கொஞ்சம் நீர்க்க கரைத்து புளிக்கரைசலையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து சில காய்கறிகள் எல்லாம் நமக்கு தேவை. முருங்கைக்காய் 1, கத்திரிக்காய் 2, உருளைக்கிழங்கு 1, முள்ளங்கி 1, சின்ன சைஸ் கேரட் 1, வெண்பூசணி நறுக்கிய துண்டுகள் 10, அவரைக்காய் 2, தக்காளி பழம் 2, இந்த காய்கறிகளை எல்லாம் நறுக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து முதலில் நறுக்கிய காய்கறிகளை எல்லாம் போட்டு, கூடவே நறுக்கி வைத்திருக்கும் தக்காளி பழத்தையும் போட்டு, அது மூழ்கும் அளவுக்கு தண்ணீரை ஊற்றி மஞ்சள் தூள், காய்கறிகளுக்கு மட்டும் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு மூடி போட்டு வேக வைக்கவும். காய்கறிகள் முக்கால் பாகம் வேகட்டும்.

- Advertisement -

காய்கறிகள் முக்கால் பாகம் வெந்து வந்தவுடன் கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை ஊற்றுங்கள். அடுத்து வேக வைத்த பருப்பையும் ஊற்றி விடுங்கள். அடுத்து 4 டேபிள் ஸ்பூன் சாம்பார் தூளை எடுத்து ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு 1/2 டம்ளர் தண்ணீரில் நன்றாக கரைத்து, சாம்பாரில் ஊற்றி விடுங்கள். அப்போது சாம்பார் தூள் கட்டி பிடிக்காமல் இருக்கும். இந்த சாம்பார் இப்போது கொதித்துக் கொண்டே இருக்கட்டும்.

இதற்குள் மற்றொரு அடுப்பில் துருவிய தேங்காய் 1/2 கப் போட்டு இரண்டிலிருந்து மூன்று நிமிடம் லேசாக வறுக்க வேண்டும். தேங்காய் வறுபட்டு லேசாக வாசம் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு அந்த கடாய் சூட்டிலேயே மிளகாய் தூள் 1 ஸ்பூன், மல்லித்தூள் 1 ஸ்பூன் சேர்த்து, மீண்டும் ஒருமுறை கலந்து விட்டு இந்த தேங்காயை நன்றாக ஆரிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும். (இந்த தேங்காய் அரவை தான் கல்யாண வீட்டு சாம்பாருக்கு கூடுதல் சுவை தர ஒரு ரகசிய காரணம்).

- Advertisement -

இதற்குள் சாம்பார் பச்சை வாடை போக கொதித்து வந்திருக்கும். மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை சாம்பாரில் ஊற்றிவிட்டு, இப்போது சாம்பாருக்கு தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து சாம்பாரை ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். தேவைப்பட்டால் இறுதியாக 1 ஸ்பூன் வெல்லம் சேர்க்கலாம்.

இதையும் படிக்கலாமே: ஹோட்டல் ஸ்டைலில் மொறு மொறு கிரிஸ்ப்பி தோசையை இப்படி தான் செய்வார்களாம்? அட இந்த தோசைக்கு இட்லி அரிசி, புழுங்கல் அரிசி எதுவுமே சேர்க்க மாட்டாங்களாம் தெரியுமா?

சாம்பார் தயார் ஆகி வந்ததும் மேலே கொத்தமல்லி தழைகளை தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். இறுதியாக இதற்கு ஒரு தாளிப்பு கொடுக்கணும். அடுப்பில் தாளிப்பு கரண்டியில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு 1 ஸ்பூன், வெந்தயம் 1/4 ஸ்பூன், வரமிளகாய் 3, கருவேப்பிலை 2 கொத்து, நறுக்கிய சின்ன வெங்காயம் 1 கைப்பிடி, போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் நிறம் மாறி வதங்கி வந்தவுடன் இந்த தாலிப்பை மணக்க மணக்க சாம்பாரில் கொட்டி கலந்து சுட சுட சாதத்தில் விட்டு சாப்பிட்டு பாருங்கள். சும்மா டேஸ்ட் அருமையா இருக்கும்.

- Advertisement -