கல்யாண வீட்டு பர்ஃபெக்ட் ரசம் எப்படி வீட்டில் எளிதாக செய்வது தெரியுமா? வீடே மணக்கும் இப்படி ரசம் வச்சா!

paruppu-rasam
- Advertisement -

கல்யாண வீட்டில் ரசம் வைத்தால் அவ்வளவு சுவையாக இருக்கும். அதே மாதிரி நாமும் வீட்டில் ட்ரை பண்ணலாம் என்றால், அந்த அளவிற்கு நமக்கு சுவை வராது. நெய் மணக்க சூப்பரான கல்யாண வீட்டு ரசம், ரொம்ப எளிதாக நம்முடைய வீட்டிலும் எப்படி தயார் செய்வது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தேவையான பொருட்கள்

புளி – சிறு எலுமிச்சை பழ அளவு, தக்காளி – 3, வேக வைத்த துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, பூண்டு பல் – 4, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. அரைக்க: தனியா – ஒரு டீஸ்பூன், துவரம் பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 1. தாளிக்க: நெய் – ரெண்டு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, வரமிளகாய் – 2, பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், இடித்த பூண்டு பல் – ரெண்டு, மல்லித்தழை – சிறிதளவு.

- Advertisement -

செய்முறை

கல்யாண வீட்டு ரசம் வீடு மணக்க இது போல செய்யுங்கள்! முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மூன்று நல்ல பழுத்த தக்காளி பழங்களில் இரண்டு பழங்களை துண்டு துண்டாக வெட்டி மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தக்காளி பழத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு பிசைந்து கொள்ளுங்கள். அரைத்த தக்காளியையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் சிறு எலுமிச்சை பழ அளவிற்கு புளியை உருட்டி எடுத்து சுடு தண்ணீரில் போட்டு நன்கு கரைத்தால் கெட்டியாக அரை கப் அளவிற்கு திக்கான பேஸ்ட் கிடைக்க வேண்டும். இதை அப்படியே தக்காளியுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கொத்து கருவேப்பிலை பிரஷ்சாக உருவி நறுக்கி சேருங்கள். தேவையான அளவிற்கு மஞ்சள் தூளும், உப்பையும் போட்டுக் கொள்ளுங்கள். நான்கு பல் பூண்டை தோலுடன் அப்படியே ஒன்றிரண்டாக இடித்து சேருங்கள். வேக வைத்த துவரம் பருப்பையும் சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் விட்டு அடுப்பை சிம்மில் வைத்து காய விடுங்கள்.

- Advertisement -

அதற்குள் மற்றொரு புறம் ஒரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு காய விடுங்கள். இந்த நெய்யிலேயே தனியா விதைகள், துவரம் பருப்பு, மிளகு ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். ஒரு நிமிடம் வறுத்ததும் ஒரு வர மிளகாயை கிள்ளி காம்பு நீக்கி சேர்த்து லேசாக வதக்குங்கள்.

பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, அதன் சூட்டிலேயே சீரகத்தை சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். வறுத்து அரைத்த இந்த பொருட்கள் சூடு ஆறியது மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அரைத்ததும் ஒரு டேபிள் ஸ்பூன் இந்த ரசப்பொடியை கொதிக்கும் ரசத்தில் கடைசியாக போட்டு நுரைக்க காத்திருக்கவும். கொதித்து நுரை மேல் எழும்பியதும் அடுப்பை அணைத்து விட வேண்டும். பின்னர் ஒரு பேனில் ரெண்டு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு அதில் கடுகு போட்டு தாளித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
பாரம்பரிய சுவையில் கேரளா ஸ்டைல் சிந்தாமணி அப்பம் செய்வது எவ்வளவு ஈசி பாருங்க. நம்முடைய வீட்டில் கூட இதை முயற்சி செய்து பார்க்கலாம்.

பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலை, ஒரு வரமிளகாய், இடித்த ரெண்டு பல் பூண்டு, கொஞ்சம் பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்து ரசத்தில் கொட்டுங்கள். பின்னர் மேலோட்டமாக மல்லி தழையை ரொம்பவும் பொடியாக நறுக்கி சேருங்கள். அவ்வளவுதாங்க, ரொம்ப சூப்பரான டேஸ்டியான இந்த கல்யாண வீட்டு ரசம் ரெசிபி நெய் மணக்க, வீடு முழுக்க வாசம் வர அனைவரையும் கவர்ந்து இழுக்கும், ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -