அனைத்து தெய்வங்களும் குடியிருக்க கூடிய ஒன்றாக திகழ்வதுதான் காமதேனு. காமதேனுவின் உடலில் இடம்பெறாத தெய்வங்களே இல்லை என்று தான் கூற வேண்டும். அப்படிப்பட்ட காமதேனுவை நாம் வழிபடும் பொழுது அனைத்து தெய்வங்களின் அருளையும் நம்மால் எளிதில் பெற முடியும் என்று கூறப்படுகிறது. இந்த காமதேனுவின் அருளை பெறுவதற்கும் அனைத்து தெய்வங்களின் அருளை பெறுவதற்கும் காமதேனுவை வீட்டில் எந்த இடத்தில் வைத்து வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
காமதேனுவை வீட்டில் வைக்கும் முறை
திருப்பாற்கடலை கடையும் பொழுது பல தெய்வீக அம்சம் பொருந்திய பொருட்கள் தோன்றின என்று கூறப்படுகிறது. அப்படி தோன்றிய பொருட்களில் ஒன்றாக திகழ்வதுதான் காமதேனு. இந்த காமதேனுவில் அனைத்து விதமான தெய்வங்களும் இடம்பிடித்து இருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும். அதனால் தான் இன்றளவும் கர்ம வினைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் பசுமாட்டிற்கு உணவுப் பொருட்களை தானமாக தரவேண்டும் என்றும் பசுமாட்டை பராமரிப்பதற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது.
அந்த அளவுக்கு முக்கியமான இந்த காமதேனுவை நாம் முறையாக வழிபட்டோம் என்றால் நம் வாழ்வில் பல நன்மைகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. காமதேனு வழிபாடு என்பதும் காமதேனு பூஜை என்பதும் மிகவும் சிறப்புக்குரியது. காமதேனு பூஜையை பசு மாட்டிற்கு பல ஆலயங்களில் செய்வது உண்டு. வீட்டிலும் காமதேனுவின் படத்தை வைத்து நாம் பூஜையோ அல்லது வழிப்பாடோ செய்து வரும் பொழுது அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த காமதேனுவை பலரும் தங்களுடைய வீட்டு பூஜை அறையில் வைத்து தான் வழிபாடு செய்வார்கள். பூஜையறையில் வைத்து வழிபாடு செய்வதை விட அதிக அளவு பலனை தரக்கூடிய இடமாக ஒரு இடம் திகழ்கிறது. அந்த இடத்தில் நாம் காமதேனுவின் படத்தையோ அல்லது சிலையையோ வைத்து வழிபாடு வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு பல மடங்கு பலன்கள் கிடைக்கும் என்றும் அனைத்து தெய்வங்களின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு நமக்கு வெறும் காமதேனுவின் சிலை மட்டும் இருந்தால் பத்தாது. காமதேனுவின் உருவத்தில் அனைத்து தெய்வங்களும் இடம்பெற்று இருப்பது போல் இருக்கக்கூடிய படமோ சிறையோ வேண்டும். மேலும் இந்த காமதேனு உடன் அதனுடைய கன்றும் இருக்க வேண்டும். இப்படி இருக்கக்கூடிய படத்தை வைத்து வழிபாடு செய்தால் தான் நமக்கு முழு பலனும் கிடைக்கும். இந்த படத்தை நம்முடைய வீட்டின் ஈசானிய மூலை என்று கூறக்கூடிய வடகிழக்கு மூலையில் வைக்க வேண்டும்.
இந்த வடகிழக்கு மூலையில் வடக்கு பார்த்தவாறு அல்லது கிழக்கு பார்த்தவாறு காமதேனுவின் முகம் இருப்பது போல் பார்த்துக் கொள்வது என்பது மிகவும் விசேஷமான ஒன்று. இப்படி படத்தையோ சிலையோ வைத்து விட்டு அதற்கு தினமும் காலையிலும் மாலையிலும் தீபமேற்றி நாம் வழிபாடு செய்து வரலாம் அல்லது காமதேனுவின் படத்திற்கு முன்பாக அட்சய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பூக்களை போட்டு வைப்பதும் மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. இப்படி செய்வதன் மூலம் காமதேனுவின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். காமதேனுவின் அருள் பரிபூரணமாக கிடைத்துவிட்டால் அனைத்து தெய்வங்களின் அருளும் எளிதில் கிடைத்துவிடும். அதோடு மட்டுமல்லாமல் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர முருகனின் தாந்திரீக பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த வழிமுறையை பின்பற்றி காமதேனுவை அதற்குரிய இடத்தில் வைத்து நாம் வழிபட்டோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்குவதோடு அனைத்து தெய்வங்களின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.