மே மாத தேய்பிறை அஷ்டமி திதி வழிபாடு

bairavar2
- Advertisement -

நாளை மே 1 ஆம் தேதி. புதன்கிழமையில் தேய்பிறை அஷ்டமி திதியானது வரவிருக்கின்றது. தீராத கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்கள் நாளைய தினம் செய்ய வேண்டிய பைரவர் வழிபாட்டை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் படிப்படியாக உங்கள் கடன் பிரச்சனை குறைந்து, படிப்படியாக வருமானம் உயர தொடங்கும் என்பது நம்பிக்கை.

கடன் தீர தேய்பிறை அஷ்டமி வழிபாடு

நாளை மாலை பழமையான எல்லா சிவன் கோவிலில் இருக்கும் பைரவர் ஆலயங்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். கட்டாயம் சென்று அதில் கலந்து கொள்ளுங்கள். பைரவருக்கு உகந்தது தயிர் சாதம். முடிந்தால் அந்த பிரசாதத்தை உங்கள் கையாலேயே செய்து எடுத்துச் சென்று பைரவருக்கு நெய்வேத்தியம் செய்துவிட்டு, அந்த பிரசாதத்தை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுங்கள். முடிந்தால் ஏழை எளியவர்களுக்கு பசியோடு இருப்பவர்களுக்கு இந்த பிரசாதத்தை கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும்.

- Advertisement -

பைரவருக்கு செவ்வரளி பூ, செவ்வாழை போன்ற பொருட்களை கொடுத்து அர்ச்சனை செய்யலாம். கடன் கஷ்டம் தீர வேண்டும் என்று பைரவர் சன்னிதானத்தில் இந்த விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். வீட்டிலிருந்து கிளம்பும்போது இந்த விளக்குக்கு தேவையான பொருட்களை தயார் செய்து எடுத்துச் செல்லுங்கள். சிவப்பு நிறத்தில் சதுர வடிவில் சின்னதாக துணி எடுத்துக் கொள்ளவும்.

இரண்டு சிவப்பு துணிகள் நமக்கு தேவை. அதில் ஒரு சிவப்பு துணியில், 4 மிளகு வைக்கவும். இன்னொரு சிவப்பு துணியில் 7 மிளகு வைக்கவும். இதை ஒரு நூல் போட்டு முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். பைரவர் கோவிலுக்கு சென்று இரண்டு மண் அகல் விளக்குகளில், இந்த முடிச்சை போட்டு, இதன் மேலே நல்லெண்ணெய் ஊற்றி, இந்த முடிச்சை திரியாக்கி அப்படியே விளக்கு ஏற்றி வைக்கவும்.

- Advertisement -

இரண்டு முடிச்சுகளிலும் சேர்த்து 11 மிளகு இருக்கிறது. தேய்பிறை அஷ்டமி திதியில் மேல் சொன்ன முறைப்படி விளக்கு போட்டு பைரவரை மனதார வேண்டிக் கொண்டால் உங்கள் கடன் சுமை நிச்சயமாக குறையும். செல்வ வளம் படிப்படியாக உயரத் தொடங்கி விடும். நாளை மாலை கட்டாயம் இந்த வழிபாட்டை மறக்காமல் பைரவர் கோவிலில் செய்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் தீர சாந்த ஸ்வரூபினி காளி வழிபாடு

பைரவரின் பரிபூரண ஆசி கிடைத்து, நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து வெளிவரலாம். இதோடு மட்டும் அல்லாமல் பைரவரின் வாகனமாக இருக்கும் நாய்க்கு உங்களால் முடிந்த பிஸ்கட்டுகளை வாங்கிக் கொடுப்பது நல்லது. வீட்டு நாய்களுக்கு இதை செய்வதை விட, வீதி ஓரங்களில் திரியும் நாய்களுக்கு உணவு பொருட்கள் வாங்கிக் கொடுங்கள். சிறப்பான பலனை பெறலாம் என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -