வீட்டில் ஏற்றும் இந்த விளக்கு இப்படி இருந்தால் மகாலட்சுமி மனம் குளிர்வாள்! காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் பொழுது செய்துவிடக்கூடாத தவறு என்ன?

kamatchi-amman-vilaku
- Advertisement -

எந்த ஒரு வீட்டிலும் காலை, மாலை விளக்கேற்றி வழிபட்டால் அவர்களுக்கு செல்வ வளத்திற்கு குறைவே இருக்காது என்பது சாஸ்திர உண்மை. ஆனால் அதனை யாரும் பின்பற்றுவது கிடையாது. இதுபோல் விளக்கு ஏற்றும் பொழுது மகாலட்சுமியின் மனம் குளிர நாம் என்ன செய்ய வேண்டும்? காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் பொழுது சில தவறுகளை நாம் செய்து விடுவது உண்டு. அந்த தவறு தான் என்ன? அதனால் உண்டாகும் விளைவுகள் என்ன? என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

kamatchi-vilakku3

எத்தனை விளக்குகள் இருந்தாலும் காமாட்சி அம்மன் என்கிற அந்த ஒற்றை விளக்கை ஏற்றி வழிபடுவது தான் நம் மரபு. அனுதினமும் ஏற்றக்கூடிய காமாட்சி அம்மன் விளக்கில் கஜ லட்சுமியின் திருவுருவம் இருக்கும். காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றி வழிபட்டால் எல்லா தெய்வங்கள் உடைய ஆசியும் ஒருசேர நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் தான் மற்ற விளக்குகளை காட்டிலும், காமாட்சி அம்மன் விளக்கு முதன்மைப்படுத்தி அனைவரது வீட்டிலும் ஏற்றப்படுகிறது. இத்தகைய காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் பொழுது செய்யக்கூடாத தவறு என்ன?

- Advertisement -

உலக நன்மைக்காக காமாட்சி அம்மன் தவம் இருந்ததாகவும், அவளுடன் சேர்த்து அனைத்து தேவாதி தேவர்களும், அத்துணை தெய்வங்களும் தவம் புரிந்ததாகவும் சாஸ்திரம் கூறுகிறது. எனவே காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றி வழிபடும் பொழுது வேண்டிய வேண்டுதல்கள் அத்தனையும் பலிக்கும். குலதெய்வம் தெரியாதவர்கள், குல தெய்வக் குற்றம் இருப்பவர்கள் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வழிபட்டால் அவைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றினால் குல தெய்வ வழிபாடு செய்ததற்கு சமமாகும். விளக்கு ஏற்றும் பொழுது குலம் காக்க வேண்டி ஏற்ற வேண்டும்.

kamatchi-amman9

காமாட்சி அம்மன் விளக்கை நேரடியாக தரையில் படும்படி வைக்க கூடாது. கீழே ஒரு தாம்பாளத் தட்டு வைத்து கொள்ள வேண்டும். நீங்கள் வைக்கும் இந்த தாம்பூலத் தட்டு விளக்கை விட பெரியதாக இருக்க வேண்டியது அவசியமாகும். விளக்கை விட சிறிய அளவிலான தாம்பூலத் தட்டு வைத்து ஏற்றக்கூடாது. விளக்கின் அடிபாகம் சரியாக தாம்பூலத் தட்டில் அழுத்தமாக பதிந்து இருக்க வேண்டும். தாம்பாளத்தில் வைத்த காமாட்சி அம்மன் விளக்கு ஆடி கொண்டிருக்கக் கூடாது. திரி போடும் இடத்தில் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். அங்கு வைக்கும் மஞ்சள், குங்குமம் கறுகிப் போகுமாறு விளக்கு ஏற்றக்கூடாது. இப்படி நிறைய விஷயங்களை சரியாக கடைபிடித்து காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றினால் சகல நன்மைகளும் நம்மை வந்தடையும் என்பது உறுதி.

- Advertisement -

காமாட்சி அம்மன் விளக்கிற்கு பொட்டு வைக்கும் பொழுது ஒற்றைப்படை எண்ணிக்கையில் வைப்பது சிறப்பு. முன்பக்கம் வைப்பது போல பின்பக்கமும் பொட்டு வைக்க வேண்டும். திரி போடும் பொழுது சற்று தூக்கியபடி மஞ்சள், குங்குமம் வைத்த அந்த இடத்தை விட்டு இடைவெளி இருக்கும்படி எண்ணெயில் தோய்த்து திரித்து தீபமேற்றினால் தீபம் சுடர் அழகாக எரியும். தாம்பூலத் தட்டில் வைக்கப்படும் பொட்டின் எண்ணிக்கை 5 ஆக இருப்பது சிறப்பு. தட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்க வேண்டும். நீங்கள் வைக்கப் போவது விளக்கு அல்ல! சாட்சாத் அந்த காமாட்சி அம்மனையே அமர்த்த போகிறீர்கள்! எனவே அதற்கு ஏற்றார்போல் அலங்கரிப்பது சகல, சௌபாக்கியங்களையும் நமக்கு அள்ளித்தரும்.

kamatchi-vilakku

காமாட்சி அம்மன் விளக்கு வைப்பதற்கு முன்பு அதற்கு அடியில் ஐந்து ரூபாய் நாணயம் அல்லது ஒரு ரூபாய் நாணயம் ஏதாவது ஒன்றை வைக்க வேண்டும். அதன் சிங்கமுகம் மேற்புறம் தெரியும்படி வைப்பது சிறப்பு. இதனை மாற்ற வேண்டிய அவசியம் கூட இல்லை. பிறகு விளக்கை அமர்த்தி தீபத்தை ஏற்ற வேண்டும். முத்து போல தீபம் எரியும் பொழுது நம் வாழ்வும் அவ்வாறே மலரும். எனவே தீபச்சுடரை பந்தம் போல் எரிய விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை தீபம் ஏற்றும் பொழுது கட்டாயம் புதிய திரியை பயன்படுத்துவது தான் நல்லது. திரி நன்றாக இருக்கிறது என்பதற்காக அதே திரியை பயன்படுத்தாதீர்கள். இந்த வகையில் காமாட்சி அம்மன் விளக்கை நாம் வீட்டில் ஏற்றினால் நிச்சயம் மகாலட்சுமியின் மனம் குளிரும். நீங்கள் வேண்டிய வரம் எல்லாம் அப்படியே சற்றும் யோசிக்காமல் வாரி வழங்கி விடுவாள். எனவே மகாலட்சுமியின் அருள் பெற காமாட்சி அம்மன் விளக்கை இப்படி ஏற்றுங்கள்!

- Advertisement -