கம்பர் வாழ்க்கை வரலாறு

Kambar

கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவிபாடும் ” என்ற பழமொழிக்கு ஏற்ப கம்பனது வாழ்க்கை முழுக்க தமிழ் இலக்கியமும், தமிழ் வளமையும் பொங்கி வழிந்து உள்ளது. கம்பத்து புகழும், கவிபாடும் திறனும் இன்றுவரை தமிழ் மக்களிடையே தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அவரது கற்பனை திறன் மற்றும் கவிபாடும் திறமை ஆகியவற்றை அவரது காலத்தில் இருந்த அனைத்து கவிஞர்களும் பாராட்டியுள்ளனர்.

Kambar 1-

கம்பன் தமிழ் மற்றும் சமஸ்கிரத மொழிகளில் புலமை பெற்று இருந்ததும் மேலும் அவர் தமிழ் மீதும் தமிழ் இலக்கியத்தின் மீதும் அவர் கொண்ட பற்று மற்றும் அவர் தமிழ் மொழிக்காக ஆற்றிய தொண்டினையும் இந்த பதிவில் விரிவாக காணலாம் வாருங்கள்.

கம்பரின் பிறப்பு:

கம்பர் கி.பி 1180ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவழுந்தூர் என்கிற கிராமத்தில் ஆதித்தன் என்பவற்றின் மகனாக பிறந்தவர் கம்பர். கம்பனின் பெயர் அவர் காளி கோயிலின் அருகில் இருந்ததால் கம்பர் என்று பெயர் வந்தது என்று சிலரும், வேறு சிலர் கம்பங்கொல்லையை காத்து வந்தததால் கம்பன் என்று பெயர் வந்தது என்று சிலரும் கூறுகின்றனர்.

மற்றும் சிலர் அவரின் பெயர் வந்ததுக்கு காரணம் கம்பர் குலம் அதாவது காலி கோயிலில் பூஜை செய்பவர்கள் குடும்பம் கம்பர் குளம் என்று அழைக்கப்படுகிறது. அதனாலேயே அவருக்கு அந்த பெயர் வந்தது என்று சிலர் கூறுகின்றனர் . இருந்தாலும் அவரது பெயர் எப்படி தழுவி வந்தது என்று இன்று வரை சரியாக தெரியவில்லை மரபு சார்ந்து இந்த பெயர் வந்தது என்று தமிழ் ஏடுகளில் இடம்பெற்றுள்ளது.

பெயர் – கம்பர்
பிறந்த ஆண்டு – கி.பி. 1180
தந்தையின் பெயர் – ஆதித்தன்
பிறந்த ஊர் – திருவழுந்தூர்

- Advertisement -

kambar 2-

கம்பரின் இளம்வயது வாழ்க்கை:

கம்பர் அவரது இளம் வயதில் வள்ளி என்கிற தாசியை காதலித்து வந்ததாகவும் அவரை அந்த பெண் ஏற்று கொள்ளவில்லை என்று நம்பமுடியாத தகவல் உள்ளது. மேலும் அவருக்கு ஒரு மகன் உள்ளதாகவும் அவரது மகன் பெயர் அம்பிகாபதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவரின் மகனான அம்பிகாபதி அந்த காலத்தில் இருந்த சோழ மன்னனின் மகளை காதலித்ததாகவும் அதனால் கோவம் கொண்ட சோழ மன்னன் அம்பிகாபதியை கொன்றுவிட்டதாகவும் சில குறிப்புக்கள் கூறுகிறது. மேலும் அவரின் மகனை அவர் இழந்ததாலேயே புத்திர சோகத்தினை பற்றி கம்பராமாயணத்தில் இடம் பெற்றுள்ளதாக சில குறிப்புகள் கூறுகிறது.

கம்பரை ஆதரித்த வள்ளல்:

ஒச்சன் பரம்பரையில் பிறந்த கம்பர் ஆரம்ப காலத்தில் ஒரு செல்வமிக்க விவசாயி ஒருவரின் அரவணைப்பில் வளர்ந்தார் . அந்த காலத்தில் கம்பர் சமஸ்கிருதம் மற்றும் தமிழில் கைத்தேர்ந்தவரானார். அதோடு தனது கவித்திறனையும் கற்பனைத்திறனையும் மெருகேற்றி தன்னை செதுக்கி கொண்டார்.

பிறகு ஏகப்பட்ட பாடல்களையும், கவிதைகளையும் தமிழில் எழுதிய இவர் கவிபாடும் திறனையும் பெற்றார். பிறகு அரசவையில் சென்று கவிபாடி பரிசு பெறுவது மட்டுமின்றி அங்குள்ள சபையை தனது இலக்கிய திறன் மூலம் கவர்ந்து இழுக்கும் திறனையும் அவர் பெற்றிருந்தார்.

இதுபோன்று அவரின் திறமையை பார்த்த சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்து அவற்றின் தமிழ் திறனை நிலைநிறுத்த மிகுந்த உதவி புரிந்தார்.

கம்பரை ஆதரித்த வள்ளல் – சடையப்ப வள்ளல்

kambar 4-

கம்பரின் அடைமொழி:

கவி பேரரசர் கம்பர்

கவிச்சக்கரவர்த்தி

கல்வியில் பெரியவர் கம்பர்

கம்பரின் அற்புத படைப்புகள்:

கம்பர் தனது படைப்புகளின் மூலம் தனது திறமையை மட்டும் வெளிப்படுத்தாமல் தமிழின் அழகையும், எளிமையினையும் தனது படைப்புகளின் மூலம் உலகிற்கு தந்தார். அவரின் படைப்புகளின் சிறு தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

கம்ப ராமாயணம்

சரசுவதி அந்தாதி

சடகோபர் அந்தாதி

ஏரெழுபது

சிலையெழுபது

திருக்கைவழக்கம்

மும்மணிக்கோவை

Kambar 3-

கம்ப ராமாயணம்:

வால்மீகி எழுதிய ராமாயணத்தினை தழுவி கம்பர் தனது ராமாயணத்தை எழுதினார் அதுவே கம்பராமாயணம் வால்மீகி எழுதிய ராமாயணத்தில் 24000 ஈரடிகள் இடம்பெற்று இருந்தன. ஆனால், கம்பர் தனது புலமை மூலம் அதனை எளிமையாக்கி 11000 சந்தங்களில் தேவைக்கு ஏற்ப இடங்களை மாற்றி அமைத்து அதனை முறைப்படுத்தி வெளியிட்டார்.

இந்த கம்ப ராமாயணத்தினை வாசித்த புலவர்கள் கூட கம்பரை தங்களது மனதார வாழ்த்தி அவரின் திறனை கண்டு வியந்தனர். கம்ப ராமாயணத்தில் ராமர் முடிசூடும் வரை மட்டும் கம்பர் எழுதினார். பிற்பாதி ஒட்டக்கூத்தரால் எழுதப்பட்டது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.

கம்பரின் இறப்பு:

ஈடு இணையற்ற கவிஞராக வலம் வந்த கம்பர் தனது 70ஆம் வயதில் 1250ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

கம்பரின் இறப்பு – கி.பி 1250

கம்பர் இந்த உலகில் இருந்து மறைந்தாலும் அவரது படைப்புகள் இன்னும் மறையவில்லை . தமிழ்மொழி எவ்வாறு தொன்மையாக உள்ளதோ அதேபோன்று கம்பரின் படைப்புகளும் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் துளிகூட ஐயம் இல்லை.

English Overview:
Here we have Kambar biography in Tamil. We can also call it as Kambar history in Tamil or Kambar varalaru in Tamil or Kamabar essay in Tamil or katturai in Tamil.

வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்