அதிகப்படியான புரதச்சத்து நிறைந்த தானியமாக திகழக்கூடிய கம்பை பயன்படுத்தி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் லட்டுவை இப்படி தயார் செய்து கொடுங்கள்.

kambu laddu
- Advertisement -

நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய தானிய வகைகளில் சிறு தானிய வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் உடலுக்குத் தேவையான அனைத்து வகையான உயிர் சத்துக்களும் நிறைந்ததாக தான் சிறுதானியங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் முக்கியமான ஒரு தானியம் தான் கம்பு. மற்ற எந்த தானியங்களிலும் இல்லாத அளவிற்கு புரதச்சத்து அதிகம் இருக்கக்கூடிய தானியமாகவும் இந்த கம்பு திகழ்கிறது. அப்படிப்பட்ட இந்த கம்பை பயன்படுத்தி நாம் லட்டு செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை விரும்பி உண்பார்கள். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் கம்பு லட்டு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

கம்பு தானியத்தில் சருமத்தை பாதுகாக்கவும், கண் பார்வையை தெளிவு பெறவும் உதவக்கூடிய விட்டமின் ஏ யை உருவாக்குவதற்குரிய பீட்டா கரோட்டின் அதிகமான அளவில் இருக்கிறது. மேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின் பி11 மற்றும் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புகள் உள்ளன.

- Advertisement -

கம்பை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம்முடைய சருமம் ஆரோக்கியமாக திகழும். கண்பார்வை தெளிவடையும். ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். அஜீரணக் கோளாறுகளை நீக்க உதவும். உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். உடல் எடையை குறைக்க விரும்புவோர் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை இதற்கு இருக்கிறது. மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது. மேலும் வளரும் குழந்தைகள் கம்பை உணவில் சேர்த்துக் கொள்வதால் நல்ல வலுவான உடல் கட்டமைப்பை பெறுவார்கள்.

செய்முறை 

ஒரு கப் அளவிற்கு கம்பை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் சுத்தம் செய்த இந்த கம்பை குறைந்த தீயில் வறுக்க வேண்டும். கம்பு பொரிய ஆரம்பித்த உடன் அதை எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆரவைத்து விட வேண்டும். பிறகு முக்கால் கப் அளவிற்கு பச்சை வேர்க்கடலையை வறுக்க வேண்டும். வறுத்த வேர்க்கடலையை தனியாக ஒரு தட்டில் போட்டு ஆறவைத்து தோலை நீக்கி விட வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது ஈரம் இல்லாத ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் வருத்த கம்பை போட்டு நெறி நெறி வென்று அரைத்துக் கொள்ள வேண்டும். தோல் உரித்த வேர்க்கடலையையும் ஒரு கப் அளவிற்கு வெல்லத்தையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் பல்ஸ்மோடில் இரண்டு முறை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை மிகவும் அதிகமான நேரம் அரைத்தால் வேர்க்கடலையில் இருந்து எண்ணெய் வெளியில் வந்து கெட்டியாகிவிடும் என்பதால் பல்ஸ்மோடில் தான் அரைக்க வேண்டும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய்யை ஊற்ற வேண்டும். நெய் நன்றாக உருகியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் கம்பு மாவை அதில் சேர்த்து நெய் அனைத்து மாவிலும் சேரும் அளவிற்கு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது வருத்த மாவுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் வேர்க்கடலை வெள்ளத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். விருப்பம் இருப்பவர்கள் நெய்யில் வறுத்த முந்திரியையும் இதனுடன் சேர்த்து கலந்து கொள்ளலாம்.

- Advertisement -

நன்றாக கலந்து கொண்டு உருண்டை பிடிக்க ஆரம்பிக்க வேண்டும். அவ்வளவுதான் கம்பு லட்டு தயாராகி விட்டது. உருண்டை பிடிக்க வரவில்லை என்று நினைப்பவர்கள் சிறிது நெய்யை சூடாக்கி மாவுடன் சேர்த்து பிணைந்து பிடிக்கும் பொழுது உருண்டை பிடிக்க வந்துவிடும்.

இதையும் படிக்கலாமே: நீங்க செஞ்சா மட்டும் இட்லி கல்லு மாதிரியும் தோசை வெள்ளையா ஆப்பம் மாதிரியும் இருக்கா? அப்படியான்னா இனி இட்லி தோசைக்கு மாவு அரைக்கும் போது இந்த டிப்ஸ் பாலோவ் பண்ணா போதும். நல்லா பஞ்சு போல புசுபுசு இட்லியும் மொறு மொறு தோசையும் ரெடி.

தினம் ஒரு லட்டு வீதம் வீட்டில் இருக்கும் அனைவரும் இதை எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -