நீங்க செஞ்சா மட்டும் இட்லி கல்லு மாதிரியும் தோசை வெள்ளையா ஆப்பம் மாதிரியும் இருக்கா? அப்படியான்னா இனி இட்லி தோசைக்கு மாவு அரைக்கும் போது இந்த டிப்ஸ் பாலோவ் பண்ணா போதும். நல்லா பஞ்சு போல புசுபுசு இட்லியும் மொறு மொறு தோசையும் ரெடி.

idly dosai
- Advertisement -

நம்முடைய உணவு பழக்கவழக்கத்தில் இந்த இட்லி தோசையை தவிர்க்க முடியாத உணவாகி விட்டது. வீட்டில் எது இருக்கிறதோ இல்லையோ எப்போதும் கொஞ்சம் மாவு இருக்கும். இதை வைத்து தான் இன்றைய பல குடும்பங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. என்ன தான் இப்போதெல்லாம் கடைகளில் பாக்கெட் மாவு வந்து விட்டாலும் வீட்டில் மாவு அரைத்து இட்லியோ, தோசையோ சுடும் போது அதற்கான சுவையை தனி ஆனால் அப்படி அரைக்கும் போது நாம் ஹோட்டலில் கிடைப்பது போன்ற நல்ல மொறு மொறு தோசையும் சாப்பிட்டுலையும் கிடைப்பதில்லை. இனி வீட்டிலும் அதே ருசியில் எப்படி செய்வது என்பதை இந்த சின்ன சின்ன குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால் போதும்.

மாவு அரைக்கும் முறை:
பஞ்சு போல சாப்பிட்டானா இட்லி செய்ய வேண்டும் என்றால் அதற்கு அரிசியும் உளுந்தும் ஊற வைக்கும் பக்குவத்தை சரியாக கடைபிடிக்க வேண்டும். அதாவது 4 பங்கு அரிசி சேர்த்தால் அதற்கு ஒரு பங்கு உளுந்தும் ஒரு டீஸ்பூன் வெந்தயமும் தேவை. இது நான்கு பங்கு அரிசியை தனியாக தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். இதை நான்கு மணி நேரம் ஊற வேண்டியதும் அவசியம்.

- Advertisement -

அதே போல் உளுந்து வெந்தயம் இரண்டையும் இரண்டு அல்லது இரண்டரை மணி நேரம் வரை ஊற வைத்து இரண்டையும் அரைக்க வேண்டும். அப்படி அரைக்கும் போது உளுந்தை அரைக்க முதலில் உளுந்தை கிரைண்டரில் போட்டு அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மாவு பந்து போல உருண்டு வரும் வரை விட்டு அரைக்க வேண்டும் அரிசியை போடும் போது தண்ணீருடன் சேர்த்து அரைக்க வேண்டும் பின்பு இரண்டையும் ஒன்றாக உப்பு சேர்த்து கரைத்து எட்டு மணி நேரம் புளிக்க வைத்த பிறகு இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு ஊற்றினால் பஞ்சு போல சாஃப்ட் இட்லி தயார்.

அதே போல் தோசை செய்ய நான்கு பங்கு புழுங்கல் அரிசி, இரண்டு பங்கு பச்சரிசி, ஒரு பங்கு உளுந்து, ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு, 1/4 டீஸ்பூன் வெந்தயம் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நான்கு மணி நேரம் வரை ஊற வைத்து அதன் பிறகு ஒன்றாகவே அரைத்து இதையும் உப்பு சேர்த்து கரைத்து எட்டு மணி நேரம் கழித்து ஊற்றி பாருங்கள். நல்ல சிவந்த மொரு மொரு என்று தோசை தயார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: திணை அரிசியில் இவ்வளவு சாஃப்ட் சாஃப்ட் சப்பாத்தியா? கோதுமை மாவில் சுட்டா கூட இத்தனை ருசியாக இத்தனை ஆரோக்கியமாக சப்பாத்தி சுட முடியாது.

இதிலும் தோசை ஊற்றும் போது கல் சூடான பிறகு மிதமான தீக்கு மாற்றிய பிறகு தான் தோசை ஊற்ற வேண்டும். கல் அதிக சூடாகி விட்டாலும் தோசை வராது இந்த மாவு அரைக்கும் நாம் இட்லி, தோசை வார்க்கும் போது அதற்கான சுடுர்பதத்தையும் சரியாக செய்தாலே இட்லியும் தோசையும் நன்றாக வரும்.

- Advertisement -