கண் திருஷ்டி காணாமல் போவதை உங்கள் கண்களால் காண வேண்டுமா? இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!

padikaram2

கண்திருஷ்டி என்பது கண்ணுக்கு புலப்படாத ஒரு விஷயம் தான். கண்திருஷ்டியால் நமக்கு இந்த பிரச்சனை வந்து இருக்குமோ என்ற சந்தேகம் இருப்பவர்கள் இந்த சோதனையை செய்து, பரிசோதித்து பார்த்துக் கொள்ளுங்கள். கண் திருஷ்டியை கண்டுபிடிக்க ஒரு சக்தி வாய்ந்த பரிகாரம் இது. அந்த அளவிற்கு சுலபமான பரிகாரமும் கூட! ஏவல் பில்லி சூனியத்தை விட கண் திருஷ்டிக்கு மிகவும் சக்தி அதிகம். செய்வினை கோளாறுகள் இருந்தாலும் அதனை சில பரிகாரங்கள் மூலமாக படிப்படியாகக் குறைத்துவிட முடியும். கண்திருஷ்டி என்பது அப்படி கிடையாது. சட்டென்று ஆளைத் தூக்கும் அளவிற்கு சக்திவாய்ந்தது.

கண்திருஷ்டியை உதாசீனப்படுத்தி, எக்காரணத்தைக் கொண்டும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. உங்களுடைய வீட்டில் தொடர் சுப நிகழ்ச்சிகள் நடந்தாலும், வீட்டில் இருப்பவர்கள் அதி விரைவாக முன்னேற்றம் அடைந்தாலும், நாம் சந்தோஷமாக இருந்தாலும், ஊர் பார்வையில் இருந்து தப்பிக்கவே முடியாது என்று சொல்லுவார்கள் அல்லவா? அப்படிப்பட்ட ஏதாவது ஒரு கண், நம் மேல் விழுந்து விட்டால், எல்லாமே முடிந்தது. அந்த அளவிற்கு வாழ்க்கை நிலைகுலைந்து போய் விடும்.

அந்தக் காலத்தில் நம்பப்பட்டு வந்த இந்த கண் திருஷ்டியானது நவநாகரீகம் என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. வரக்கூடிய பிரச்சினைகளுக்கு கண்திருஷ்டி தான் காரணம் என்று தெரியாமல், பல பேர் பல வகைகளில் பிரச்சனைகளை அனுபவித்துக் கொண்டு, வீண் விரயங்களை செய்துவருகிறார்கள்.

thrishti

காரணம் முன்னோர்கள் சொல்வதை கேட்பது கிடையாது. அந்த காலத்தில் ஞாயிற்றுக்கிழமை அமாவாசை தினம் என்றாலே வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு சுற்றி போடும் பழக்கம் வீட்டில் இருக்கும். பாட்டிமார்கள் தவறாமல் தங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு சுற்றி போடுவார். இன்றளவும் ஞாயிற்றுக்கிழமையும், அமாவாசை தினத்திலும் சுற்றி போடும் பழக்கம் நம் நிறைய பேர் வீடுகளில் உள்ளது. முடிந்த வரை உங்களுடைய வீட்டிலும் உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் உங்களால் முடிந்தால் திருஷ்டி கழியுங்கள்.

- Advertisement -

குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையில் ஒரு படிகாரக் கல்லை கையில் வைத்துக்கொண்டு, உங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் கிழக்கு பக்கம் பார்த்தவாறு அமர வைத்துவிட்டு, அவர்களது தலையை மூன்று முறை இடப்பக்கம் மூன்று முறை, வலப்பக்கம் மூன்று முறை, மேலிருந்து கீழ் இப்படியாக மூன்று முறை சுற்றவேண்டும்.

padikaram

திருஷ்டி சுற்றும் போது கண்திருஷ்டி விநாயகரை மனதார நினைத்துக்கொண்டு, வீட்டில் இருக்கும் திருஷ்டி அனைத்தும் ஓடிப் போய் விட வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்கள். திரிஷ்டி சுற்றுவதற்கு முன்பாகவே வீட்டு வாசலில் கொஞ்சமாக கொட்டாங்குச்சியை வைத்து நெருப்பை மூட்டி விடுங்கள். எரிந்து கொண்டிருக்கும் அந்த கொட்டாங்குச்சியில், திருஷ்டி கழித்த உங்கள் கையில் இருக்கும் படிகார கல்லை போட்டு விடுங்கள். உங்களுடைய வீட்டில் இருப்பவர்கள் மேல் திருஷ்டி இருந்தால் அந்த பரிகாரங்கள் ஒரு உருவ பொம்மை போல உருகுவதை உங்கள் கண்களாலேயே பார்க்கலாம்.

padikaram1

இது நிஜமான ஒன்று. நம்பிக்கையுள்ளவர்கள் சோதித்து பாருங்கள். உங்களை பிடித்தது அனைத்தும் அந்த பரிகார ரூபத்தில் உருகி கரைந்து போய்விடும். கண்திருஷ்டி காணாமல் போவதற்கு இது ஒரு சுலபமான பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது. பெரிய அளவிலான பிரச்சனைகளை கூட, சுலபமாக தீர்த்து வைக்கும் இந்த பரிகாரத்தை வாரம் ஒருமுறை நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
கர்ப்பமாக இருக்கும் போது மீன் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஞாபக சக்தியை உடனே அதிகரிக்கும் 5 டிப்ஸ்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.