எப்படிப்பட்ட கெட்ட சக்தி, உங்கள் உடம்பில் இருந்தாலும், அது தெறித்து ஓடிவிடும்! இந்த 3 பொருட்களை தலையை சுத்தி போடுங்க!

kan-thirushti

கண்ணுக்கே தெரியாத எதிர்மறை ஆற்றலினால் நம் உடலுக்கும், மனதுக்கும் ஏதேனும் பிரச்சனை இருப்பதாக உணர்ந்தால், அந்த எதிர்மறை ஆற்றலை விரட்டி அடிக்க, சுலபமான ஒரு நல்ல தீர்வைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை, உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை, அடிக்கடி சோர்வு ஏற்படுகிறது, வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை, எப்போதும் இருள் சூழ்ந்த நிலைமை இருந்தால், கட்டாயம் கண்ணுக்குத்தெரியாத ஏதோ ஒரு சக்தியின் மூலம் நமக்கு பாதிப்பு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

kettasathi-1

அந்த எதிர்மறை ஆற்றலுக்கு கண்திருஷ்டி, கெட்ட சக்தி, ஏவல், பில்லி, சூனியம், பேய், பிசாசு எப்படி வேண்டுமென்றாலும் பெயரை வைத்துக் கொள்ளலாம். அது அவரவருடைய இஷ்டம்தான். ஆக மொத்தத்தில் அடுத்தவர்களுடைய வயிற்றெரிச்சல் கூட நம்மை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் போக்க என்ன செய்ய வேண்டும்?

இப்படிப்பட்ட கெட்ட சக்திகளை விரட்ட அந்த காலங்களில் பெரிய யாகங்கள் நடத்துவார்கள். அதாவது, ஹோம குண்டம் வளர்த்து, அந்த அக்னி தீயில், சில பொருட்களை போட்டு கெட்ட சக்தியையும், கண்திருஷ்டி ஐயும் விரட்டுவார்கள். அவ்வளவு பெரிய யாகங்களை எல்லாம், நம்மால் இந்த காலத்தில் செய்ய முடியுமா என்பது, கொஞ்சம் சந்தேகமான விஷயம் தான். ஆகவேதான், அந்த பெரிய பரிகாரத்தை எப்படி, இந்த காலத்திற்கு ஏற்றார்போல் சுலபமான முறையில் செய்வது என்பதைப் பற்றித்தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

dry-chilli-milagai

முதலில், இந்த பரிகாரம் செய்வதற்கு மூன்று பொருட்கள் தேவை. ஓமம், பருத்திக்கொட்டை, காய்ந்த வரமிளகாய். பருத்திக்கொட்டை மூன்று, வரமிளகாய் மூன்று, ஓமம் ஒரு கைப்பிடி அளவு இவை மூன்றையும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். முதலில், வரமிளகாயை உங்கள் தலையை மூன்று முறை சுற்றிக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, ஓமத்தை எடுத்து உங்களது தலையை மூன்று முறை சுற்றிக் கொள்ளுங்கள். அடுத்ததாக பருத்திக் கொட்டையையும் எடுத்து தலையை மூன்று முறை சுற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்கள் வீட்டில் தூபம் போடுவதற்காக பயன்படுத்தப்படும் இரும்பு கரண்டி ஏதாவது இருக்கும் அல்லவா? அதைக் கொண்டுபோய் உங்கள் வீட்டு வாசலில் வைத்து, அதில் ஒரு கற்பூரத்தை வைத்து ஏற்றி விட்டு, உங்கள் தலையை சுற்றி வைத்திருக்கும் இந்த மூன்று பொருட்களையும் அந்த அக்கினியில் போட்டு விட வேண்டும்.

parithikottai

உங்களால் முடிந்தால், உங்களுக்கு கிடைத்தால் இரண்டு மா மரக்குச்சி, இரண்டு வெள்ளெருக்கு குச்சிகளை, அந்த அக்கினியில் போட்டு விடுங்கள். அவ்வளவு தான், உங்களை பிடித்த அனைத்தும் உங்களை விட்டு கண்காணாத தூரம் ஓடி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிகாரத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் நம்பிக்கையோடு செய்து பாருங்கள். கண் திருஷ்டியின் மூலமாகவோ, கெட்ட சக்தியின் மூலமாகவோ பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக நல்ல தீர்வு கிடைக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நாம் இப்படி தான் சமைத்து சாப்பிட வேண்டும் என்று அன்றே ஆச்சரியமூட்டும் தகவல்களை வள்ளலார் கூறியுள்ளார். அவர் அப்படி என்னதான் சொன்னார் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.