- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇந்த விளக்கை 9 வாரங்கள் தொடர்ந்து ஏற்றி வந்தால் கண் திருஷ்டிகள் அகன்று தடைபட்டுக் கொண்டிருக்கும்...

இந்த விளக்கை 9 வாரங்கள் தொடர்ந்து ஏற்றி வந்தால் கண் திருஷ்டிகள் அகன்று தடைபட்டுக் கொண்டிருக்கும் காரியங்கள் நிறைவேறும்

- Advertisement -

ஒவ்வொருவருக்கும் இனிமையான வாழ்வு அமைய வேண்டும் என்பதே ஆசையாக இருக்கும். அவ்வாறு இனிமையான வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் கண்திருஷ்டி ஏற்பட்டால் தீராத துயரத்தை மாட்டிக்கொள்வார்கள். நடந்துகொண்டிருக்கும் நல்ல விஷயங்களும் ஏதேனும் ஒரு பிரச்சனையில் மாட்டி தடைப்பட்டு நின்று விடும். இவ்வாறு கண்திருஷ்டியிலிருந்து விடுபடவும், தடைபட்டுக் கொண்டிருக்கும் காரியங்கள் நல்லவிதமாக நடைபெறவும் ஊமத்தங்காய் தீபத்தை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் ஏற்றி பூஜை செய்யவேண்டும். வாருங்கள் இந்த பூஜையை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

drishti1

ஊமத்தங்காய் ஒரு விஷகாய் என்பது அனைவரும் அறிந்ததே. கண்திருஷ்டி அகற்றுவதிலும் ஊமத்தங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. வில்வ இலை எவ்வாறு சிவபெருமானுக்கு உகந்தததோ அதேபோல ஊமத்தம்செடியயும் சிவபெருமானுக்கு உகந்த இலை ஆகும். இந்த ஊமத்தங்காய் வைத்து சிவ பெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் நமது பிரச்சனைகளில் இருந்து எளிதாக விடுபட முடியும்.

- Advertisement -

முதலில் இரண்டு ஊமத்தங்காய் களை எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் மீது முட்கள் இருப்பதால் மிகவும் கவனமாக கையாளவேண்டும். ஊமத்தங்காயின் காம்புப் பகுதிகளை வெட்டிகொண்டு கத்தியை பயன்படுத்தி ஊமத்தங்காயின் உள்ளே இருக்கும் விதைப் பகுதியை முழுவதுமாக நீக்கிவிடவேண்டும்.

oomathai1

பின்னர் இரண்டு அகல்விளக்குகள் மற்றும் விளக்கு வைப்பதற்கான இரண்டு தட்டுகளை எடுத்து சுத்தம் செய்து அவற்றிற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு தட்டின் மீதும் ஒவ்வொரு அகல் விளக்கை வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர்ஊமத்தங்காயயை இந்த அகல் விளக்குகளின் மீது வைத்துவிட்டு இலுப்பை எண்ணெய் ஊற்றி திரி போட்டுசிவபெருமானனின் படத்தின் முன்பு வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விளக்கு வைத்திருக்கும் தட்டின் மீது பூக்கள் வைத்து அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

Agal-Vilakku

அதன்பிறகு எப்போதும் பூஜை செய்வதற்கு வைப்பது போன்ற வெத்தலை பாக்கு பழம் போன்றவற்றை வைத்து விட்டு இரண்டு விளக்குகளையும் ஏற்றி சிவபெருமானை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். எனக்கு இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து இன்பமான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும்.

இந்த பூஜையை வெள்ளிக்கிழமை அன்று தொடங்கினால் தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் செய்ய வேண்டும். ஊமத்தங்காயின் மீது எவ்வாறு முட்கள் இருக்கிறதோ அதுபோல நமது வாழ்க்கையில் இருக்கும் முட்கள் போன்ற பிரச்சனைகளைத் அவை தீர்த்து வைக்கின்றன.

vilakku-deepam

இந்த பூஜையை நாம் தொடர்ந்து செய்து வருவதால் நம்மீது இருக்கும் கண் திருஷ்டிகள் அகன்றுவிடும். தீராத துயரங்கள் தீர்ந்து விடும். பணம் நகை நம்மிடம் பெருகி வரும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். உறவினர்களிடையே பகைமை இருந்தால் அவையும் மறைந்துவிடும். நோய்வாய் உள்ளவர்கள் குணமடையவும் இந்த தீபத்தை ஏற்றுவதன் மூலம் நல்ல பலனை பெற முடியும்.

சற்று முன்