குரு பகவான் மந்திரம்

Guru-1
- Advertisement -

வாழ்க்கை என்பது பல இன்பம் மற்றும் துன்பங்களையும் கொண்ட ஒரு அனுபவமாகும். இந்த இரண்டிலும் நாம் சமநிலை தவறாமல் இருக்க குருவருளும், திருவருளும் வேண்டும். வியாழ கிழமை என்பது குருபகவானை வழிபட ஒரு சிறந்த தினமாகவும். அந்த நன்னாளில் பிரதோஷம் போன்ற ஆன்மீக நாட்கள் வந்தால் அது குரு வழிபாட்டிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும். அந்த வகையில் குரு பகவானை வழிபடுவதற்காக மந்திரம் இதோ.

Guru astrology

குரு பகவான் ஸ்லோகம்:

ஓம் ஸுராச்சார்ய வித்மஹே ஸுராஸேரேஷ்டாய
தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்

- Advertisement -

பிரதோஷம் என்பது சிவபெருமானுக்குரிய வழிபாட்டு தினமாகும். அதுவும் ஆடி மாத பிரதோஷம் அதிக ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். பிரதோஷம் வாரத்தின் மற்ற தினங்களை போல வியாழக்கிழமையில் வருவது சிறப்பானதாகும். இத்தினத்தில் மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோவிலுக்கு சென்று சிவ பெருமானையும், பார்வதியையும் வழிபட்ட பின்பு நவகிரகங்கள் சந்நிதியில் குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்களை சமர்ப்பித்து, விளக்கேற்றி வழிபட உங்களின் எதிர்காலம் குறித்த பயங்கள் நீங்கும். உடல் மற்றும் மனம் திடம் பெரும். நீங்கள் விரும்பிய காரியங்கள் நிறைவேற தொடங்கும்.

Sivan temple

பிரதோஷ தினத்தில் நந்தி பகவான் தனது குரு மற்றும் இறைவனான சிவ பெருமானை பூஜித்து வணங்குகிறார். வியாழனன்று வரும் பிரதோஷ தினத்தில் நவகிரகங்களில் முழு சுப கிரகமான தேவர்களுக்கு குருவாகிய பிரகஸ்பதி அல்லது குரு பகவானை வழிபடுவதால் நமக்கும் குருவருள் கிடைத்து அவரால் பற்பல நன்மைகள் ஏற்பட வழி பிறக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
நன்மைகள் பல தரும் சனி பகவான் காயத்திரி மந்திரம்

English Overview:
Here we have Guru Baghavan mantra in Tamil. By chanting this mantra one can get good education, good health and good wealth in life.

- Advertisement -