- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகண் திருஷ்டி, எதிரிகள் தொல்லை நீங்க பரிகாரம்

கண் திருஷ்டி, எதிரிகள் தொல்லை நீங்க பரிகாரம்

- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு நல்ல காரியத்தை செய்து அதன் மூலம் அவர்களுக்கு நற்பலன் ஏதாவது ஒன்று நடந்து விட்டாலே உடன் இருப்பவர்களோ அல்லது சுற்றத்தாரோ உடன் வேலை செய்பவர்களோ யாராக இருந்தாலும் பரவாயில்லை உனக்கு இப்படி வந்துருச்சு இப்படி ஆயிடுச்சு என்று கூறுவார்கள். அப்படி கூறிய உடனேயே நமக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்பது ஏற்படும். ஒன்று அந்த நன்மை நடைபெறாமல் நின்றுவிடும். அப்படியே நடைபெற்றாலும் அதை அனுபவிக்க கூடிய அளவிற்கு நம்முடைய சூழ்நிலை இல்லாமல் போய்விடும் அல்லது உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். இப்படி ஏதாவது ஒரு பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். இதைத்தான் நாம் கண் திருஷ்டி என்று கூறுவோம். இந்த கண் திருஷ்டியை நீக்குவதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் துர்க்கை அம்மனை நினைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிமுறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

துர்கை அம்மன் நரசிம்மர் வழிபடு

எவ்வளவு பெரிய கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அந்த கஷ்டங்களை சர்வ சாதாரணமாக சமாளிக்கக்கூடிய திறமை நம்மிடம் இருந்தாலும் கண் திருஷ்டி, எதிரிகள் போன்றவர்களின் தொல்லைகளால் ஏற்படக்கூடிய பிரச்சினையை நம்மால் அவ்வளவு எளிதில் சமாளிக்க முடியாது. அந்த அளவிற்கு வீரிய தன்மை வாய்ந்ததாக தான் அவை திகழ்கின்றன. அதற்கு நமக்கு கண்டிப்பான முறையில் தெய்வத்தின் அருள் என்பது வேண்டும்.

- Advertisement -

நம்மை பாதுகாக்கும் கவசமாக திகழக்கூடிய தெய்வங்களை நாம் காவல் தெய்வங்கள் என்று கூறுகிறோம். அந்த வகையில் நமக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர்கள் தான் துர்க்கை அம்மனும், நரசிம்மரும்.

வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலகி வீட்டிற்குள் எந்தவித கண் திருஷ்டியும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வெண்கடுகை எடுத்துக் கொண்டு உங்களுடைய நிலை வாசலின் இரண்டு புறங்களிலும் “ஓம் தும் துர்காய நமஹ” என்ற மந்திரத்தை கூறியவாறு சிறிதளவு போட வேண்டும். வீட்டிற்கு இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கும்.

- Advertisement -

எப்பொழுதும் நாம் வீட்டுக்குள்ளே இருக்க முடியுமா? வீட்டை விட்டு வெளியே செல்வோம். வெளியில் செல்லும் பொழுது நன்மைகள் தரக்கூடிய விஷயங்களும் நடக்கும். தீமைகள் தரக்கூடிய விஷயங்களும் நடக்கும். இதிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்கு நமக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கக்கூடிய ஒரு பரிகாரத்தையும் பார்ப்போம்.

இதற்கு நம் வீட்டு பூஜை அறையில் அமர்ந்து கொண்டு ஒரு வெற்றிலையை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் சிறிது வெண்கடுகை வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக குங்குமத்தை வைத்து “ஓம் தும் துர்காய நமஹ” என்னும் மந்திரத்தை 11 முறை சொல்லி குங்குமத்தால் அந்த வெண்கடுகின் மேல் அர்ச்சனை செய்வது போல் செய்ய வேண்டும். பிறகு இந்த வெற்றிலையை ஒரு பேப்பரில் வைத்து மடித்து நாம் எங்கு செல்கிறோமோ அங்கு நம்முடைய பாக்கெட்டில் வைத்து எடுத்துக் கொண்டு செல்லலாம்.

- Advertisement -

இப்படி செல்லும் பொழுது இது நமக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக திகழ்ந்து தீயவைகள் நம்மிடம் வந்து சேராமல் பார்த்துக் கொள்ளும். நரசிம்மரை வழிபாடு செய்பவர்கள் சிவப்பு அட்சதையை தயார் செய்து வைத்துக் கொண்டு “ஓம் நரசிம்மாய நமக” என்று வெண்கடுகுக்கு பதிலாக இதே வழிமுறையை பின்பற்றலாம். சிவப்பு அட்சதையை எப்படி செய்வீர்கள்? பச்சரிசியில் குங்குமத்தை போட்டு சிறிது பன்னீரை திரித்து கலந்து விட்டால் சிவப்பு அட்சதை தயாராகிவிடும்.

இதையும் படிக்கலாமே: மனக்குழப்பம், மன கவலை தீர வாராஹி வழிபாடு

மிகவும் எளிமையான இந்த பரிகாரங்களில் நம்பிக்கை இருப்பவர்கள் முழு மனதுடன் துர்க்கை அம்மனையும் நரசிம்மரையும் நினைத்து இந்த முறையில் பரிகாரம் செய்ய கண் திருஷ்டி, எதிரிகள் தொல்லையில் இருந்து விலக முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்