உங்கள் வீட்டையோ அல்லது உங்கள் வீட்டு குழந்தையையோ பார்த்து யாராவது கண் வைத்து விட்டது போல தெரிஞ்சா மொதல்ல இத பண்ணிருங்க.

kan-thirusti1

குழந்தை என்றாலே எல்லாருக்கும் பிடித்துவிடும். அதிலும் சற்று அழகாக இருக்கும் குழந்தை என்றால் வருகிறவர்கள், போகிறவர்கள் எல்லாம் பார்த்து கொண்டே போவார்கள். சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு தெருவில் சென்று தான் சோறூட்ட வேண்டி இருக்கும். வேறு வழியே இல்லை என்றாகிவிடும். புட்டி பால் குடிக்கும் பிள்ளைகளுக்கு துணியால் பாட்டிலை மூடி வைத்து குடுக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதற்கு காரணம் மற்றவர்களின் பார்வை பாலின் மீது பட்டு விட்டால் குழந்தைக்கு ஆகாமல் போய் விடும் என்பார்கள். காரணமே இல்லாமல் அழும். நீங்களும் என்னவென்று புரியாமல் ஏதேதோ வைத்திய முறைகளை செய்து கொண்டு இருப்பீர்கள். பெரியவர்கள் எதை கூறினாலும் காரணம் இல்லாமல் கூற மாட்டார்கள். இதற்கு அறிவியல் காரணமும் உண்டு. பாலை பார்த்து கொண்டே குடிக்கும் குழந்தைக்கு மாறுகண் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனாலும் தான் அவ்வாறு கூறுகிறார்கள்.

Baby

மனிதர்களின் பார்வை பொல்லாதது. அவன் எப்படி இவ்வளவு நன்றாக இருக்கிறான்? இவன் எப்படி பணம் சேர்த்தான்? நமக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை? என்று அடுத்தவர்களை பார்த்து பொறாமை கண்களுடனே நோக்கும் பார்வைகள் தான் அதிகம். நமக்கு மட்டும் பிள்ளை இல்லையே என்று ஏக்க கண்களுடன் பார்க்கும் பெண்களும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களை குற்றம் சொல்லி ஆவது ஒன்றும் இல்லை. நம்மை நாம் தான் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

உங்களையோ, நீங்கள் வாழும் வாழ்க்கையையோ, குறிப்பாக உங்கள் குழந்தையையோ பார்த்து உங்கள் இல்லத்திற்கு வரும் யாராவது கண் வைத்து விடுவார்கள். இந்த கண் திருஷ்டி படாமல் இருக்க என்ன செய்யலாம்? என்று தான் நாம் இப்போது இந்த பதிவில் காணப் போகின்றோம்.

kan-thirusti

வாரம் ஒரு முறை கண்ணாடி பவுல் ஒன்றை எடுத்து கொண்டு அதில் நிரம்ப கல் உப்பை போட்டு கொண்டு விடுங்கள். அதன் மீது எழுமிச்சை பழம் ஒன்றை நடுவில் அழுத்தி வையுங்கள். எழுமிச்சை பழத்தை ஊசியால் குத்தி துளை போட்டு கொள்ளுங்கள். பின்னர் வர மிளகாய்களை குடும்பத்தில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கையில் எடுத்து கொண்டு அதன் காம்பு பகுதியை எழுமிச்சை பழத்தை சுற்றிலும் சொருகி வையுங்கள். எத்தனை பேர் உங்கள் குடும்பத்தில் இருக்கிறார்களோ அத்தனை பேருக்கும் சேர்த்து செய்வது தான் நல்லது. அதை அப்படியே கை படாமல் எடுத்து கொண்டு போய் நிலவாசற் கதவின் பின்புறத்தில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான்.

- Advertisement -

kan-thirusti

எந்த நாளில் இதை வைக்கிறீர்களோ அதே நாளில் மறு வாரம் இதை புதிதாக மாற்றி விடுங்கள். இப்படி செய்வதால் யாருடைய கண் திருஷ்டியும் உங்கள் குழந்தையை தாக்காது. உங்களையும், உங்கள் வீட்டையும் தீய சக்திகள் அண்டாமல் பாதுகாக்கும் ஆற்றல் பெற்றது. அதை அப்படியே ஒரு பாலிதீன் பையில் போட்டு தூக்கி எரிந்து விடுங்கள். ஓடும் நீர் நிலைகளில் போடலாம். இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்? அல்லது நன்கு வளர்ந்த மரத்திற்கு அடியில் கொட்டி விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விடுங்கள். இந்த பரிகாரத்திற்கு நேரம், காலம், திசை என்று ஒன்றும் இல்லை. மாற்றும் பொழுது கை படமால் பார்த்து கொண்டால் போதுமானது.

இதையும் படிக்கலாமே
சிவராத்திரியன்று விரதமிருந்து தூங்காமல் கண் விழித்தால் மோட்சத்தை அடைவதற்கு இதுதான் காரணமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kan thirusti remedies Tamil. Kan thirusti neenga Tamil. Kan thirusti neenga in Tamil. Kan thirusti pariharam Tamil. Kan drishti neenga Tamil.