இந்த 1 முடிச்சினை உங்கள் வீட்டு வாசலில் கட்டி தொங்க விட்டால், கண் திருஷ்டியும் உள்ளே வராது, கெட்ட சக்தியும் உள்ளே வராது.

kan-thirusti

எப்படிப் பட்ட கஷ்டங்கள் நமக்கு வந்தாலும் அதிலிருந்து நம்மால் மீண்டு, புத்துணர்ச்சி பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து விட முடியும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் எப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்தும் வெளி வந்துவிடலாம். ஆனால் கண்ணுக்குத் தெரியாத கண்திருஷ்டியினாலும், கெட்ட எண்ணம் கொண்டவர்களின் வயிற்றெரிச்சலினாளும் பாதிக்கப்பட்டவர்கள் எப்பாடு பட்டாலும் வெளியில் வருவது மிகவும் சிரமம். கண்அடி பட்டால், அதற்கான கஷ்டத்தை கட்டாயம் நாம் அனுபவித்து தான் ஆக வேண்டும். இது பல பேருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

kan-thirusti-vinayagar

இப்படிப்பட்ட சிரமத்தில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும் என்றால், கண் திருஷ்டியும், கெட்ட சக்தியும் நம் வீட்டு நிலவாசபடியை தாண்டி உள்ளே வரவிடக் கூடாது. அதற்கு என்னதான் செய்வது? ஒரு சுலபமான பரிகாரம் உள்ளது. அதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

அந்த காலத்தில் எல்லாம் வீட்டு வாசலிலேயே தண்ணீர் வைத்து காலைக் கழுவிக் கொண்டு தான் வீட்டிற்குள் நுழைவார்கள். காரணம் வெளியில் நல்லவையும் இருக்கும். கெட்டதும் இருக்கும். வீதியில் கெட்டது எதையாவது மிதித்து இருந்தாலோ, அல்லது தாண்டி இருந்தாலோ அதன்மூலம் நமக்கு நோய் தொற்று, கிருமித் தொற்று ஏற்படலாம் என்பதற்காகவும், அடுத்தவர்கள் பிரச்சனைக்காக சுற்றி போட்ட எலுமிச்சம்பழம், மிளகாய் இவைகளைத் தாண்டி இருந்தால் அதில் இருக்கும் கெட்ட சக்தி நம்மை தொற்றிக்கொண்டு இருந்தால், அதன் பாதிப்பு வீட்டிற்குள் வரக்கூடாது என்பதற்காகவும் வாசலிலேயே தண்ணீர் வைத்து, காலை கழுவிக்கொண்டு, தலையில் தண்ணீர் தெளித்து கொண்டுதான் வீட்டுக்குள்ளேயே நுழைவார்கள்.

kan-thirusti

இப்படிப்பட்ட பழக்கம் எல்லாம் காற்றில் கரைந்து போய் விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த சூழ்நிலையில், நம் வீட்டிற்குள் கெட்ட சக்தியையும், கண் திருஷ்டியும், கெட்ட எண்ணம் கொண்டவர்கள் கூட, வீட்டிற்கு உள்ளே நுழைய விடாமல் தடுக்க நம்மால் ஒரு பரிகாரத்தை சுலபமாக செய்ய முடியும். கெட்ட எண்ணம் கொண்டவர்களை எப்படி கண்டுபிடிப்பது! என்று யோசிக்காதீர்கள். அவர்களது கெட்ட எண்ணமானது நம் வீட்டு வாசற்படிக்கு வெளியிலேயே நின்றுவிடும்.

- Advertisement -

இதற்கு ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பு, சதுரவடிவிலான சிகப்பு துணி, சிகப்பு நூல் மட்டுமே போதும். ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு கைப்பிடி அளவு கல் உப்பினை உங்கள் உள்ளங்கையில் எடுத்துக்கொண்டு, பூஜை அறையில் இருக்கும் உங்கள் வீட்டு குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு, குலதெய்வத்தின் சாட்சியாக, ‘கெட்ட எண்ணம் பிடித்தவர்கலும், கெட்ட சக்தியையும், கண்திருஷ்டியையும் இந்த வீட்டிற்குள் நுழைய கூடாது’. என்று மனதார சொல்லி அந்த உப்பை, சிகப்பு துணியில் வைத்து, சிகப்பு நூலால் மூன்று முடிச்சுகள் போட்டு, உங்கள் வீட்டு நில வாசப்படியில், நடுப்பகுதியில் மாட்டிவிட வேண்டும்.

salt

பார்ப்பதற்கு இது ஒரு சின்ன பரிகாரம் போல்தான் இருக்கும். ஆனால் இந்த முடிச்சை தாண்டி, உங்கள் வீட்டிற்குள் எந்த கெட்ட சக்தியும் நுழைய முடியாது என்பது தான் உண்மை. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம். இதை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. வருடத்திற்கு ஒருமுறை மாற்றினால் மட்டுமே போதும். ஆனால் தினம் தோறும் வீட்டில் விளக்கு ஏற்றும் சமயத்தில் தூபம் காட்டுவது மிக அவசியம்.

இதையும் படிக்கலாமே
வேண்டியதெல்லாம் நடக்க வேண்டுமா? கேட்டதெல்லாம் கிடைக்க வேண்டுமா? இந்த 1 பரிகாரம் போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kan thirusti neenga. Kan thirusti neenga in Tamil. Kan thirusti pariharam Tamil. Kan thirusti remedies Tamil.