கண்ணுக்குத் தெரியாத கண்திருஷ்டியை கூட கண்டுபிடித்து பஸ்பமாக்கி விடமுடியும். இந்த 4 பொருட்களை முறையாக பயன்படுத்தினால் மட்டுமே பலன் உண்டு.

thirusti1

மனிதனாகப் பிறவி எடுத்த எவராலும், கண் திருஷ்டியில் இருந்து தப்பித்து விட முடியாது. ஏனென்றால் கண்ணுக்கு தெரியாத, இந்த கண் திருஷ்டிக்கு பலம் அவ்வளவு அதிகம். நன்றாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை கூட, திடீரென்று வாழ்க்கையின் அதலபாதாளத்திற்கு தள்ளிவிடும் சக்தியானது இந்த கண் திருஷ்டிக்கு உண்டு என்றால், அது பொய்யாகாது. இந்த கண் திருஷ்டியினை சுலபமான முறையில் கண்டுபிடித்து, சுலபமான ஒரு பரிகாரத்தை செய்வதன் மூலம் இந்த பாதிப்பிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியும். அது என்ன பரிகாரம், என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த பரிகார முறையை நம் பாட்டிமார்கள் நமக்கு சொல்லிக் கொடுத்தது தான், என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

kan-thirusti

பொதுவாக திருஷ்டி கழிக்க பயன்படுத்தக்கூடிய, நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தான் இந்த பரிகாரத்தை செய்யப் போகின்றோம். அந்த பொருட்களை முறையாக எந்த கணக்கில் எடுக்க வேண்டும் என்பதைப்பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

இதில் முதல் பரிகாரமாக ஞாயிற்றுக்கிழமை அன்று 3 வரமிளகாய், கடுகு சிறிதளவு, உப்பு சிறிதளவு, இவை மூன்றையும் உங்களது இடது கையில் எடுத்துக் கொண்டு, உங்கள் வீட்டு உறுப்பினர்கள் அனைவரையும் ஒருசேர, கிழக்கு பார்த்தபடி, அமர வைத்து, ஏழு முறை இடதுபக்கமாக  சுற்ற வேண்டும். அதன் பின்பு உங்கள் கையில் இருக்கும் பொருட்களை அடுப்பில் எரியும் நெருப்பில் போட்டு விடவும். அதுதான் முறை. ஆனால், இந்த காலகட்டத்தில் அடுப்பு இல்லை என்பதால், சிறிய பாத்திரத்தில் கொட்டாங்குச்சியை எரிய வைத்து அதில் உங்கள் கையில் இருக்கும் பொருட்களை போட்டு விடுங்கள்.

thirusti

அதிலிருந்து காரமான நெடி வரவில்லை என்றால் கண் திருஷ்டி அதிகம் இருக்கு என்பதை குறிக்கும். நெடி வந்தால், கண் திருஷ்டி இல்லை என்பதை குறிக்கும். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்கள் வீட்டிற்கு கண் திருஷ்டி இருக்கிறதா? இல்லையா? என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம். இது வீட்டில் செய்யக்கூடிய ஒரு திருஷ்டி எடுக்கும் முறை.

- Advertisement -

சிலருக்கு தொழில் செய்யும் இடத்தில் கண்திருஷ்டி கோளாறு அதிகமாக இருக்கும். நன்றாக சென்று கொண்டு இருந்த தொழில் திடீரென்று முடக்கத்தில் போகும். இதற்கு கண் திருஷ்டியும் கட்டாயம் ஒரு காரணமாக இருக்கலாம். இதை நீக்க என்ன செய்யலாம்?

vellai-mudichu

வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமை அன்று 5 முழு வரமிளகாய், 3 சிறு துண்டு படிகாரம், 9 கற்பூர துண்டு, ஒருகைப்பிடி அளவு கல்லுப்பு இந்தப் பொருட்கள் அனைத்தையும் ஒரு வெள்ளைத் துணியில் வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். நூல் வைத்தும் கட்டிக் கொள்ளலாம். வெள்ளைத்துணி புதிதாக வாங்கப்பட்ட காட்டன் துணியாகதான் இருக்க வேண்டும். பழைய துணியில் கட்டக்கூடாது. நீங்கள் கட்டிய இந்த முடிச்சை உங்களது இடது கையில் வைத்துக்கொண்டு, நீங்கள் தொழில் செய்யும் இடத்தை இடது புறமாக மூன்று முறை சுற்றி, வாசலில் வைத்து எரித்து விடுங்கள்.

உங்களுக்கு இருக்கும் எப்படிப்பட்ட கண்திருஷ்டியாக இருந்தாலும் நெருப்போடு நெருப்பாக பொசுங்கி போய்விடும். இந்த பரிகாரத்தை இரவு ஒன்பது மணிக்கு செய்வது மிகவும் நல்லது. இந்த பரிகார முறையினை உங்களது வீட்டிலும் செய்யலாம். வியாபாரம் செய்யும் இடத்திலும் செய்துகொள்ளலாம்.

Thirusti

இந்த பரிகார முறை வீட்டில் செய்வதாக இருந்தால் உங்கள் வீட்டு உறுப்பினர்கள் அனைவரையும் ஒருசேர கிழக்கு பார்த்தவாறு அமரவைத்து, இந்த மூட்டையை உங்கள் இடது கையில் வைத்து, மூன்று முறை இடது பக்கமாக சுற்றி, வீட்டு வாசலில் வைத்து எரித்து விடவேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு முறைகளும் நம்முடைய முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற முறையாக, திருஷ்டி கழிக்கும் முறை என்று நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே
ஆச்சரியப்படவைக்கும் அன்னாசிப்பூவின் அதிசய சக்தி! மனிதனுக்கு தேவை இல்லாத ஒன்றை கட்டுப்படுத்தும். தேவையான ஒன்றை அதிகமாக கொடுக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kan thirusti. Kan thirusti neenga. Kan thirusti neenga in Tamil. Kan thirusti pariharam Tamil.