ஆச்சரியப்படவைக்கும் அன்னாசிப்பூவின் அதிசய சக்தி! மனிதனுக்கு தேவை இல்லாத ஒன்றை கட்டுப்படுத்தும். தேவையான ஒன்றை அதிகமாக கொடுக்கும்.

star-anise3

மனிதனுக்கு தேவைப்படாத ஒன்றா? அது என்ன? அது தேவைப்படாது என்று தெரிந்தாலும், அது நமக்கு அடிக்கடி வரும். மனிதனுக்கு தேவையான ஒன்று? அடிக்கடி தேவைப்பட்டாலும் அதுமட்டும் நம் கைக்கு வராது! விடுகதை போல உள்ளதா? அது என்ன? இந்த இரண்டு கேள்விக்கான பதில் உங்களில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். மனிதனுக்கு தேவையில்லாத பிரச்சனையையும், ஆரோக்கிய குறைபாட்டையும் கொண்டுவருவது ‘கோபம்’. மனிதனுக்கு அவசியமான, அடிப்படையான தேவை ‘பணம்’. ஏனோ தெரியவில்லை! வேண்டாம் வேண்டாம் என்று சொல்லும் கோபம் நம்மிடம் விருப்பப்பட்டு வந்துகொண்டே இருக்கிறது. வேண்டும் வேண்டும் என்று ஆசைப்படும் பணம் நம்மை விட்டு விலகிச் சென்றே இருக்கின்றது. என்ன செய்வது?

star-anise

தேவையில்லாமல் வரும் கோபத்தை கட்டுப்படுத்தவும், நமக்கு தேவையான பணத்தை தருவதற்கும் ஒரு பொருள் உள்ளது. அது தான் அன்னாச்சி பூ. இந்த அன்னாச்சி பூவை வைத்து என்ன செய்தால் கோபம், சண்டை சச்சரவுகள் வராமல் தப்பித்துக் கொள்ளலாம்? என்ன செய்தால் பணவரவை அதிகரித்துக் கொள்ளலாம்? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே அந்த காலங்களில் எல்லாம் நம் முன்னோர்கள் அன்னாசிப் பூவினை, வீட்டு வாசலில் ஒரு கயிறு கட்டி தொங்க விட்டால், திருஷ்டி அண்டாது என்று சொல்லுவார்கள். அன்னாசிப் பூவின் மூலம் எதிர்மறை ஆற்றல்கள் கட்டுப்படுத்தப்படும் என்று சில குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. பொதுவாகவே சில வீடுகளில் சண்டை சச்சரவுக்கு குறைவே இருக்காது. அதுவும் குறிப்பிட்ட சில நபர் வீட்டுக்குள் நுழைந்தாலே, அவரால் பிரச்சனை வந்துவிடுமோ என்ற பயம் நமக்கு இருக்கும்.

star-anise1

சில பேரது வீட்டில் எல்லாம் வேலையை முடித்துவிட்டு அப்பா வீட்டிற்கு வருகிறார் என்றாலே, நம்முடைய அம்மா பயந்து நடுங்குவாங்க!. ‘ஏனென்றால் அப்பாவிற்கு கோபம் அதிகமாக வரும் என்பதற்காகத் தான்’ இன்னைக்கு என்ன பிரச்சனையை உண்டுபண்ண போகிறார்களோ! என்று. இப்படிப்பட்டவர்கள் வீட்டில் ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத கண் திருஷ்டியோ அல்லது கெட்ட சக்தியை எதிர்மறையாக இருப்பதால் கூட இப்படிப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. அல்லது சில மனிதர்களுக்கு இயல்பாகவே கோப குணம் அதிகமாக இருக்கும். எது எப்படியாக இருந்தாலும், இப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளிக்க பிரியாணிக்காக பயன்படுத்தப்படும் 4 அன்னாசிப் பூவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு விடுங்கள். அந்த வாசம் நல்ல நறுமணத்தோடு மேலோங்கும்.

- Advertisement -

அந்த நறுமணமானது வீடு முழுவதும் பரவும்படி செய்யவேண்டும். அந்த பாத்திரத்தை ஒவ்வொரு அறையிலும் ஐந்து நிமிடங்கள் வைத்தால் போதும். அந்த நறுமணம், நம் சுவாசத்தில் கலந்து நம் கோபத்தை கட்டுப்படுத்தும் என்பது உண்மையான ஒன்று. இதை பரிகாரம் என்று கூட சொல்லிவிட முடியாது. இது ஒருவிதமான பயிற்சி. வாரத்தில் இரண்டு முறை உங்கள் வீட்டிலும் இப்படி செய்து பாருங்கள். இயற்கையாகவே அன்னாச்சி பூவுக்கு கோபத்தை கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது.

annachi-poo-pattai

சண்டை வரும் வாய்ப்பு கண்டிப்பாக குறையக்கூடும். இதேபோல், இந்த அன்னாச்சி பூவை பண வரவிற்காகவும் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் ஒரு அன்னாசிப்பூ 1, 5 ஒரு ரூபாய் நாணயம், 3 ஏலக்காய், 2 பட்டை, இவைகளை ஒன்றாக போட்டு வையுங்கள். உங்கள் கைகளில் வரும் வருமானத்தில் சிறிதளவே அந்த டப்பாவில் போட்டு சேமித்து வையுங்கள். அந்த டப்பாவை திறந்தபடி உங்கள் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள் போதும்.

பணத்தட்டுப்பாடு இல்லாமல் உங்கள் செலவுக்கு ஏற்றவாறு வருமானம் வந்துகொண்டே இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. பொதுவாகவே அஞ்சறைப் பெட்டியிலும் பணம் சேர்த்தால், அது தொடர்ந்து சேர்ந்து கொண்டே வரும், என்பது நம் பாட்டி காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்படும் நம்பிக்கை தான். வாசனை பொருட்களை சேமித்து வைக்கும் பெட்டியும் அஞ்சரைப்பெட்டி என்று தான் சொல்லப்படும். ஆகவே இந்த முயற்சியை செய்து பார்ப்பதில் தவறில்லை.

star-anise2

இந்த பதிவின் மூலம் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பரிகாரங்களுமே மிகவும் சுலபமான பரிகாரங்கள் தான். நமக்கு நன்மை தரக்கூடிய பரிகாரங்கள் தான். நம்பிக்கையோடு நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். அன்னாச்சி பூ பிரியாணிக்கு மட்டும் சுவையை கொடுக்கவில்லை. நம் வாழ்க்கையையும் சுவையான வாழ்க்கையாக மாற்றும் அளவிற்கு சக்தி கொண்டது என்பதை நீங்கள்  அனுபவித்து உணர்ந்தால் தான் தெரிந்துகொள்ள முடியும்.

இதையும் படிக்கலாமே
பிள்ளையாரை 7 சனிக்கிழமை இப்படி வழிபட்டால் என்ன நினைத்தாலும் அப்படியே நடக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Annachi poo benefits in Tamil. Annasi poo in Tamil. Annachi poo uses in Tamil. Star anise benefits in Tamil. Star anise Tamil.