கண்திருஷ்டி, தரித்திரம் நீங்க ஞாயிற்றுக்கிழமையில் வீட்டு வாசலில் இதை கட்டி தொங்க விடுங்கள்! தீய சக்திகள் சர்வமும் நீங்கி செல்வம் பெருகும்.

thirusti-poondu
- Advertisement -

கண்திருஷ்டி என்பது மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவரைப் பார்த்து மகிழ்ச்சியற்ற ஒருவர் பொறாமை படுவதை குறிக்கிறது. எதிரிகள், துரோகிகள் மட்டுமல்லாமல் கூடவே இருந்து குழி பரிக்க காத்துக் கொண்டிருக்கும் நண்பர்களும் இவ்வகையில் அடங்கி விடுவார்கள். தீராத கண் திருஷ்டியும், வீட்டில் இருக்கும் தரித்திரமும் நீங்க ஞாயிற்று கிழமைகளில் வீட்டு வாசலில் இதை கட்டி தொங்க விடுங்கள். அது என்ன? எப்படி கட்ட வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

பொதுவாக நமக்கு நல்லது என்று ஒன்று நடக்கும் பொழுது அதை பார்த்து மற்றவர்களுடைய கண்கள் படாமல் இருக்காது என்பதை அறிவோம். அத்தகைய கண் திருஷ்டிகள் அகல, வீட்டிற்குள் நுழையும் முன்பு திருஷ்டி கழித்து போடுவது வழக்கம். தேர்வில் முதல் தேர்ச்சி பெற்ற மாணவனுக்கும், குழந்தையை பெற்றெடுத்து விட்டு வீட்டிற்கு வரும் தாய் மற்றும் சேய்க்கும், திருமணம் ஆனவர்களுக்கும், நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வருபவர்களுக்கும் இது போல திருஷ்டி கழிப்பது உண்டு.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் வீடு, கடை, தொழில் என்று எல்லா இடங்களிலும் நம்முடைய வளர்ச்சியை பார்த்து யாருடைய கண்களும் பட்டுவிடக்கூடாது என்று அமாவாசை அன்று திருஷ்டி கழிப்பது உண்டு. இப்படி வாரம் ஒருமுறை திருஷ்டி கழித்து வந்தால் தோஷங்கள் நீங்கி நமக்கு அதனால் வர கூடிய பாதிப்புகள் கட்டுப்படும் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது.

நாம் வெளியில் ஒரு விஷேஷம், விழாவிற்கு நல்ல அலங்காரம் செய்து கொண்டு போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். போகும் பொழுது இருக்கும் அதே உணர்வு, வீட்டிற்கு வந்தவுடன் இருப்பதில்லை என்பதை என்றாவது கவனித்து பார்த்திருக்கிறீர்களா? நல்ல அலங்காரத்துடன் நீங்கள் வீட்டை விட்டு சென்று சுற்றி விட்டு, திரும்பவும் வீட்டிற்கு வரும் பொழுது தலைவலி, காய்ச்சல் அல்லது உடல் சோர்வு ஏற்படுவதை உணர்ந்து இருப்பீர்கள். சொகுசாக காரிலேயே சென்று காரிலேயே வந்தாலும் கூட நமக்கு இந்த உடல் சோர்வு ஏற்படுவது உண்டு.

- Advertisement -

வெளியில் சுற்றிக் கொண்டு வருவதால் மட்டும் ஏற்படும் தலைவலி அல்ல இது! பலரும் உங்களைப் பார்த்து வைக்கப்படும் கண் திருஷ்டிகள் உங்களுக்கு இது போன்ற உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனவே ‘கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது’ என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இது போன்ற திருஷ்டிகள் அகலுவதற்கு மற்றும் வீட்டில் பணக்கஷ்டம், மனக்கஷ்டம், குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும் இந்த தரித்திரம், பீடை போன்றவற்றை எதிர்மறையை ஒழிக்கவும் ஞாயிற்றுக் கிழமையில் ஒரு சிவப்பு துணியை எடுத்துக் கொள்ளுங்கள். சூரியன் மறைவதற்கு முன்னர் இதை செய்து கொள்ளுங்கள்.

சிவப்பு துணியை விரித்து அதில் மூன்று பூண்டு பற்களை உரித்து சேருங்கள். அதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சாம்பிராணி பவுடர், ஒரு துண்டு அடுப்புக்கரி ஆகியவற்றை சேர்த்து மூட்டையாகக் முடிச்சுப் போட்டு கட்டிக் கொள்ளுங்கள். பின்பு அதனை உங்கள் தலை வாசல் படியில் கட்டி தொங்க விட்டு விடுங்கள். அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை இது அப்படியே இருக்க வேண்டும். பின்பு மறு வாரம் இதே போல அதை தூக்கி எறிந்துவிட்டு, வேறு ஒன்றை செய்து மாற்றவும். இது போல் தொடர்ந்து செய்து வரும் பொழுது எவ்வகையான தந்திரமும் உங்களை நெருங்க கூட செய்யாது. கண்திருஷ்டி என்பது ஏற்படவே செய்யாது. இதனால் தொழில், ஆரோக்கியம், குடும்பம் எல்லாமே வளர்ச்சி அடையும்.

- Advertisement -