கடுமையான திருஷ்டியை போக்கும் மரம்! அது என்ன மரம்? எப்படி திருஷ்டியை போக்கும் தெரிந்தால் வியந்து போவீர்கள்.

கண் திருஷ்டி என்பது இருக்கிறதா? இல்லையா? என்கிற சந்தேகம் நிறைய பேருக்கு இருந்து வருகிறது. திருஷ்டி எல்லாம் ஒன்றும் இல்லை. எல்லாம் அவர்களின் நம்பிக்கை என்று அதை ஒதுக்கி விடுபவர்களும் உண்டு. கண் திருஷ்டி இருக்கிறது என்பதற்கு உதாரணமாக துதிப்பாடல் ஒன்றில் திருமணமான புது மணப் பெண் மீது தீய பார்வைகள் விழக்கூடாது என்று பழமையான குறிப்புகளில் உள்ளன. இதிலிருந்து கண்திருஷ்டி என்பது உண்மை தான் என்பது தெளிவாகிறது. இத்தகைய திருஷ்டியை முழுக்க நீக்க அதே குறிப்பில் இந்த மரத்தைப் பற்றியும் பெருமையாக பேசப்பட்டுள்ளது. அதனைப் பற்றிய விளக்கத்தை தான் இப்பதிவில் பார்க்க இருக்கிறோம்.

marraige-picture

புதிதாக திருமணமானவர்கள் மேல் நிறைய கண் திருஷ்டிகள் ஏற்பட்டு இருக்கும். கண் திருஷ்டி என்பது முழுமையாக கெட்ட விஷயம் கிடையாது. ஆஹா! அடடே! என்று ஒருவரைப் பார்த்து மற்றொருவர் கண்கள் வெறித்து பார்த்தாலே அதுவும் கண் திருஷ்டி தான். அவர்கள் நல்ல நோக்கத்தோடு பார்த்தாலும் அவர்களுடைய பார்வை திருஷ்டியாக மாறும் என்பது தான் உண்மை.

பச்சிளம் குழந்தையை பார்த்து இந்த குழந்தை எவ்வளவு கொழுகொழுவென்று அழகாக இருக்கிறது என்று கூறி விட்டால் அதுவும் திருஷ்டி தான். தேர்வில் அல்லது ஏதாவது ஒரு விஷயத்தில் வெற்றி பெற்று வரும் நபர்களைப் பார்த்து பேஷ்.. பேஷ்.. என்று வாழ்த்தும் பொழுது வெறிக்க பார்த்தால் கூட திருஷ்டி தான்.

baby-laughing

உலகம் முழுக்க பல்வேறு மதம் மற்றும் பல்வேறு இன பாகுபாடின்றி கண் திருஷ்டி என்கிற ஒன்று நம்பப்பட்டு வருகிறது. அதனால் தான் பல இடங்களில் ஒரு நல்ல விஷயம் அல்லது வெற்றிக்கான விஷயங்களை செய்து விட்டு வருபவர்களை திருஷ்டி சுத்தி தோஷத்தை கழித்து விடுகிறார்கள்.

- Advertisement -

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூட சக பணியாளர்கள் சில சமயத்தில் பொறாமைப்பட்டு விடுவார்கள். அதுவும் திருஷ்டியாக தான் மாறும். உங்களுக்கு ஊதிய உயர்வு கிடைத்தாலும் அல்லது அவர்கள் செய்ய முடியாததை நீங்கள் செய்து விட்டாலும் உடனே ஒரு விதமான ஏக்கப் பார்வை பார்ப்பது உண்டு. அதேபோல் குழந்தை இல்லாத தம்பதியர்கள் குழந்தைகளை பார்க்கும் பொழுது ஒரு விதமான ஏக்கத்தோடு பார்ப்பது கூட திருஷ்டி ஆக மாறுகிறது. நல்லதோ கெட்டதோ நம் மேல் விழும் ஏக்க பார்வைகள், பொறாமை பார்வைகள், கெட்ட பார்வைகள் அனைத்தும் திருஷ்டி ஆக மாறுகிறது என்பது தான் ஆன்மீக ரீதியான உண்மை.

office

இவ்வகையான திருஷ்டியை நம்மிடம் இருந்து முழுமையாக நீக்கவும் அல்லது ஏற்படாமல் தடுக்கவும் கூடிய ஆற்றல் மருத மரத்திற்கு உண்டு. மருத மரத்தின் பட்டையை உடைத்து வந்து தாயத்து செய்து கட்டிக் கொண்டால் போதும். அத்தனை விதமான திருஷ்டிகளும் நீங்கி விடுமாம். இதைத்தான் அப்பாடலில் கூறியுள்ளார்கள். மருத மரத்திற்கு அத்தகைய சக்தி இருப்பதை சித்தர்கள் அன்றே கண்டறிந்துள்ளனர்.

marutha-maram

வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஒரு விதமான இனம் புரியாத உடல் சோர்வும், மனதில் அமைதியின்மையும் இருந்தால் உங்களுக்கு திருஷ்டி தோஷம் ஏற்பட்டு உள்ளதாகவே பொருள்படுகிறது. மருத மரத்திற்கு நாம் எங்கு செல்வது? என்று யோசிக்காதீர்கள். மருத மரத்தைப் பற்றிய குறிப்புகளை தெரிந்து கொண்டு எங்கு கிடைத்தாலும் அதை விட்டு விடாமல் எடுத்துக் கொண்டு வந்து விடுங்கள். பின்னர் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒரு தாயத்து தயார் செய்து அதில் சிறிதளவு இதனை போட்டு கட்டிக் கொண்டால் போதும். எந்த திருஷ்டியும் உங்களை நெருங்க கூட செய்யாது.

இதையும் படிக்கலாமே
மகாலட்சுமியை உங்களுக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ள, மகாலட்சுமிக்கு மட்டுமே சொந்தமான, இந்த 2 பொருட்களை எப்போதும் உங்கள் கையில், இப்படி வைத்துக் கொண்டால் போதுமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.