மகாலட்சுமியை உங்களுக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ள, மகாலட்சுமிக்கு மட்டுமே சொந்தமான, இந்த 2 பொருட்களை எப்போதும் உங்கள் கையில், இப்படி வைத்துக் கொண்டால் போதுமே!

mahalashmi

மகாலட்சுமியை எப்போதும் நமக்கு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று தான் நினைப்போம். காரணம் மகாலட்சுமி கடாட்சம் எந்த வீட்டில் நிறைந்து இருக்கின்றதோ அந்த வீட்டில் கஷ்டம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. இந்த மகாலட்சுமிக்கு ரொம்பவும் விருப்பமான இரண்டு பொருள்கள் என்னென்ன? அந்த இரண்டு பொருட்களை குறிப்பாக எந்த முறையில் ஒன்றாக சேர்த்து நம்முடைய கைகளில், எந்த கிழமையில், எந்த இடத்தில் வைத்து கொண்டால், குபேர சம்பத்தை, மகா லட்சுமி கடாட்சத்தை நிரந்தரமாக அடைய முடியும் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.

lakshmi kubera

சுற்றி வளைக்காமல் நேரடியாக பதிவுக்கே சென்றுவிடுவோம். மகாலட்சுமிக்கு உகந்த பொருட்கள் என்று சொல்லப்படும் மருதாணி இலையையும், ஏலக்காயும் தான் அந்த இரண்டு பொருட்கள். பொதுவாகவே மருதாணியை பெண்கள் கையில் இட்டுக்கொண்டால் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும் என்று சொல்லுவார்கள் அல்லவா? இந்த மருதாணி இலைகளை அரைக்கும் போது அதனோடு 2 ஏலக்காய்களையும் போட்டு அரைத்து உங்கள் கைகளில் வைத்து பாருங்கள்.

அந்த மருதாணி ஏலக்காய் கலந்த விழுதை, கையில் வைப்பதிலும் ஒரு சூட்சமம் உள்ளது. குபேர மேடு என்று நம் கைகளில் உள்ள அந்த குறிப்பிட்ட இடத்தில், இந்த மருதாணி கலவையை வைக்க வேண்டும். அதுவும் வெள்ளிக்கிழமைகளில் வைப்பது மேலும் நல்ல பலனை நமக்கு கொடுக்கும். கட்டை விரலுக்கு கீழே கொஞ்சம் மேலெழும்பி உப்பியவாறு இருக்கக் கூடிய பகுதியைத்தான் குபேர மேடு என்று சொல்லுவார்கள்.

kubera-medu

உங்களுடைய கைகளில் அழகாக மருதாணியை இட்டுக் கொள்ளும் போது, அந்த குபேரன் மேட்டிலும் மருதாணியை நன்றாக இட்டுக் கொள்ளுங்கள். அந்த காலத்தில் எல்லாம் மருதாணியை அரைத்து உள்ளங்கை முழுவதும் வட்டவடிவில் தட்டிக் கொள்வார்கள் அல்லவா? அதேபோல் குபேர மூலைறிலும் மருதாணியை வட்டவடிவில் தட்டிக்கொண்டாள் நல்லது.

- Advertisement -

பெண்கள் வலது கையில் குபேர மேட்டில் இந்த மருதாணி விழுதை வைத்துக்கொள்ள வேண்டும். ஆண்கள் இடது கையில் குபேர மேட்டில் இந்த மருதாணி விழுதை வைத்துக்கொள்ள வேண்டும். வாசம் நிறைந்த லட்சுமி கடாட்சம் நிறைந்த இந்த இரண்டு பொருட்களும் பணத்தை வசியப்படுத்த கூடிய தன்மை கொண்டது.

அப்படிப்பட்ட இந்த இரண்டு பொருட்கள் நிரந்தரமாக சிவப்பு வண்ணத்தில், குபேர மேட்டில் இருக்கும் வரை, உங்களுடைய வீட்டில் செல்வ செழிப்பு இருந்து கொண்டே இருக்கும். வாரம் ஒருமுறை தவறாமல் இப்படி மருதாணியை குபேர மேட்டில் மட்டுமாவது வைத்து சோதித்து தான் பாருங்களேன். நிச்சயம் உங்களுடைய வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்க இது ஒரு சுலபமான முறையை தாண்டி, சக்தி வாய்ந்த தாந்திரிக முறை என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் சண்டை வரும்போது இந்த தவறுகளை செய்தால், வீட்டில் குடியிருக்கும் குலதெய்வமும் மற்ற தெய்வங்களும் வெளியேறிவிடும். பின்பு துஷ்ட சக்திகள் வீட்டிற்குள் சுலபமாக நுழைந்துவிடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.