வீட்டில் அடிக்கடி மருத்துவ செலவு ஏற்பட இப்படியும் ஒரு காரணம் இருக்கிறதா? கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதது ஏன்?

vilaku-milagu-uppu-salt

வீட்டில் அடிக்கடி வயதானவர்கள் அல்லது சிறுவர்களுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போகலாம். இதற்கு என்ன காரணம்? என்று கூட தெரியாமல் நாம் பல முறை யோசித்து இருப்போம். எப்பொழுதாவது மருத்துவ செலவு ஏற்பட்டால் அது இயல்பான ஒரு விஷயம் தான். ஆனால் அடிக்கடி மருத்துவ செலவு ஏற்படுவது என்பது சாதாரண விஷயமல்ல. குடும்பத்தில் மருத்துவச் செலவு ஏற்பட்டு, பணம் வீண் விரயமாகி கொண்டிருந்தால் அந்த வீட்டில் திருஷ்டி இருப்பதாகவே கருதப்படுகிறது. கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது என்பது பழமொழி. இந்த பழமொழிக்கு ஏற்ப கண்ணாடி பட்ட திருஷ்டியை நீக்க என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

Thirusti

அடிக்கடி மருத்துவ செலவு ஏற்படுவது உங்கள் மேல் இருக்கும் திருஷ்டியை குறிக்கிறது. நீங்கள் தினமும் 1000 பேரை சந்திக்கும் தொழில் அல்லது கடை வைத்து வியாபாரம் செய்பவர்களாக இருந்தாலும், உங்கள் மேல் இருக்கும் திருஷ்டி காரணமாக அடிக்கடி வீட்டில் மருத்துவ செலவு ஏற்படும். இப்படி உங்களுக்கு திருஷ்டி இருப்பதாக தோன்றினால் செய்ய வேண்டிய பரிகாரம் இருக்கிறது. இதனை தொடர்ந்து தினமும் செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் எந்த திருஷ்டியாக இருந்தாலும் எளிதாக வெளியேறிவிடும்.

மருத்துவச் செலவு என்பது வீண் விரயம் தான். வீண் விரயத்தை அடிக்கடி செய்து கொண்டிருந்தால் கடன் வாங்க நேரிடும். இதனை தவிர்க்க தினமும் ஒரு சிறிய அகல் விளக்கு ஒன்றில், கல் உப்பு நிரப்பி அதன் மேல் ஒன்பது மிளகுகளை நவகிரகங்களாக கருதி வைக்கவும். இந்த அகல் விளக்கை வீட்டு வாசலில் வைத்து விடுங்கள். அதனை மற்றவர்களுடைய பார்வை படும் படியாக ஒரு ஓரத்தில் வைத்தால் போதும். அகல் விளக்கு இல்லை என்றால் கண்ணாடி பவுல் பயன்படுத்தலாம். வேறு எந்த உலோகப் பொருட்களையும் திருஷ்டிக்காக பயன்படுத்தாதீர்கள் அதில் எந்த பலனும் இல்லை.

Milagu benefits in Tamil

உங்கள் மேல் அல்லது உங்கள் வீட்டின் மேல் விழும் திருஷ்டி பார்வைகள் அந்த உப்பு மற்றும் மிளகு ஈர்த்துக் கொள்ளும். இதனை தொழில் மற்றும் கடைகளில் கூட நீங்கள் செய்து பார்க்கலாம். தினமும் நூறு பேர் வந்து போகும் இடத்தில் கட்டாயம் திருஷ்டி இருக்கும். இதனை நீக்குவதற்கு கடைக்கு வெளியில் வாசலில் ஒரு ஓரத்தில் இப்படி செய்து வைத்து விட்டால் போதும். எந்த விதமான திருஷ்டி தோஷமும் உங்களை தாக்காது. மறுநாள் அதனை கால் படாத இடங்களில் போட்டுவிட வேண்டும். அல்லது நீர்நிலைகளில் கரைத்து விட வேண்டும். எதுவுமே இல்லை என்றால் தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரை ஓரமாக ஊற்றி விடுங்கள். வீட்டின் சமையலறையில் இருக்கும் சிங்கிலும் கரைத்து ஊற்றி விடலாம்.

- Advertisement -

திருஷ்டிக்காக செய்யப்படும் இந்த பரிகாரத்தில், கல் உப்பை நீங்கள் புதிதாக தான் வாங்க வேண்டும். வீட்டில் இருக்கும் கல் உப்பை பயன்படுத்தக் கூடாது. நீங்கள் அந்த உப்பை கரைக்கும் பொழுது உங்களுடைய கைகள், கால்களில் படக்கூடாது என்பதையும் நினைவில் வையுங்கள். இதனை தினமும் செய்ய முடியாதவர்கள் வாரம் ஒரு முறையாவது செய்து பார்க்கலாம். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படாமல் வீண் விரயங்கள் நிகழாமல், வருமானம் தடையில்லாமல் வீட்டில் நிம்மதியுடன் இருக்கலாம்.

salt1

மிளகை திருஷ்டிக்காக மட்டும் பயன்படுத்தாமல் தினமும் பாலில் சிறிதளவு மிளகு, மஞ்சள் சேர்த்து குடித்து வந்தாலே ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருக்கும் வீட்டில் மிளகை அடிக்கடி உணவில் பயன்படுத்துங்கள். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்கிற பழமொழி உண்மையில் கடுகை குறிப்பது அல்ல! மிளகை குறிப்பது தான். மிளகு சிறியதாக இருந்தாலும் அதன் காரம் மட்டும் குறைவில்லாமல் நிறைவாக நம் ஆரோக்கியத்தை காக்கும்.

இதையும் படிக்கலாமே
இந்த 1 பொருளை படைத்து ஸ்வர்ண பைரவரை வீட்டில் வழிபட்டால் ஸ்வர்ணமும்! செல்வமும்! தடையில்லாமல் கொழிக்கும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.