இந்த 1 பொருளை படைத்து ஸ்வர்ண பைரவரை வீட்டில் வழிபட்டால் ஸ்வர்ணமும்! செல்வமும்! தடையில்லாமல் கொழிக்கும்!

swarna-bairava-gold

64 பைரவர்களில் செல்வத்தை வாரி வழங்கக் கூடியவர் ‘ஸ்வர்ண பைரவர்’ ஆவார். கிட்டத்தட்ட குபேரருக்கு இணையானவர் இந்த ஸ்வர்ண பைரவர். தன்னை வணங்குபவர்களுக்கு ஸ்வர்ணங்களை அள்ளிக் கொடுக்கும் ஸ்வர்ண பைரவர் வழிபாடு அளவில்லா நன்மைகளை கொடுக்கக் கூடியவை. ஆனால் இவரை வணங்கும் பொழுது அதனை யாரிடமும் சொல்லிக் கொள்ளவும், காட்டிக் கொள்ளவும் கூடாது என்கிற சாஸ்திர நியதியும் உண்டு. இவரை வீட்டில் வைத்து எப்படி வழிபடுவது? என்பதை தெரிந்து கொள்ள இப்பதிவை தொடர்ந்து படியுங்கள்.

swarna bairavar

வருமான தடை மற்றும் பணவரவு அதிகம் தேவைப்படுபவர்கள் சொர்ண பைரவரை வழிபடலாம். ஸ்வர்ண பைரவர் சன்னிதியில் சென்று அவருடைய அஷ்டகத்தை பாராயணம் செய்தால் பணக்குறை ஏற்படவே செய்யாது. தடையில்லா பணவரவு உங்களுக்கு வரும். தேய்பிறை அஷ்டமியில் ஸ்வர்ண பைரவரை வணங்கி ஸ்வர்ண பைரவர் அஷ்டகம் படித்தால் வாழ்க்கையில் பல அதிர்ஷ்டங்களை பெறலாம் என்பது நம்பிக்கை.

ஸ்வர்ண பைரவர் அஷ்டகத்தை படிக்க முடியாதவர்கள் கீழ்வரும் ஸ்வர்ண பைரவர் ஒரு வரி மந்திரத்தை கூறலாம். வீட்டில் ஸ்வர்ண பைரவர் படத்தை வைத்திருந்தால் நிறைய செல்வம் கொழிக்கும். கோவிலுக்கு சென்று அவரை வணங்கி விட்டு வீட்டிற்கு வந்து ஸ்வர்ண பைரவ அஷ்டகத்தை 8 முறை பாராயணம் செய்தால் உங்களுக்கு தேவையான பணம் எங்கிருந்தாவது உங்களைத் தேடி வரும் என்ற ஐதீகமும் உண்டு.

money

சொர்ண பைரவர் மந்திரம்:
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ!!

- Advertisement -

ஸ்வர்ண பைரவர் படம் இல்லாதவர்கள் உங்களுடைய பூஜை அறையின் தெற்குப் புற சுவற்றில் சந்தனம் கொண்டு சூலம் வரைந்து கொள்ளுங்கள். அந்த சூலத்தை ஸ்வர்ண பைரவராக ஏற்றுக் கொள்ளுங்கள். சூலத்திற்கு குங்குமம் வைத்து, நிவேதனமாக செவ்வாழை பழத்தை வைக்க வேண்டும். ஸ்வர்ண பைரவருக்கு மிகவும் பிடித்தது செந்நிற பழங்கள் மற்றும் பூக்கள் ஆகும். செவ்வாழையை வைத்து வழிபடுபவர்களுக்கு ஸ்வர்ண யோகம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

sevvalai-compressed

செவ்வாழையுடன் மரிக்கொழுந்து, செவ்வரளி பூ, மாதுளை பழம், வெற்றிலை, பாக்கு, அவல் பாயாசம் போன்ற நிவேதனப் பொருட்களை படையலாக போட்டு ஸ்வர்ண பைரவரை வழிபட்டால் சகல சம்பத்துகளும் உங்களுக்கு கிடைக்கும். பணக்கஷ்டம் இருப்பவர்கள் தினமும் இது போல் சந்தனத்தால் சூலம் வரைந்து, பைரவருக்கு செவ்வாழை வைத்து மேற்கூறிய அந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்தால் ஸ்வர்ணமும், செல்வமும் மழையாக பொழியும் என்று பைரவர் ரகசியம் என்கிற நூல் கூறுகிறது.

swarna-bairavar3

ஸ்வர்ண பைரவர் வழிபாடு செய்யும் பொழுது யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ரகசியமாக செய்வது உத்தமம். யாரிடமாவது இந்த ரகசியத்தை கூறினால் வழிபாட்டில் தடை உண்டாகும் என்பதால் தான் கூறக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. தினமும் வழிபட முடியாதவர்கள் அஷ்டமி நாட்களில் இது போல் வழிபடலாம். தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி பைரவருக்கு உகந்த நாட்களாக குறிப்பிடப்படுகிறது. முடிந்தால் பைரவர் அஷ்டகத்தை வாசிக்கப் பாருங்கள் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே
நீங்கள் குழப்பமான நேரத்தில், முடிவு எடுக்க தெரியாத இடத்தில் சரியான முடிவு எடுக்க என்ன செய்ய வேண்டும்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.