கண் திருஷ்டி விலக வைக்கோல் பொம்மை மாட்ட தேவையில்லை! இதை வைத்தாலே போதும் எந்த திருஷ்டியும் ஆயுசுக்கும் உங்கள் வீட்டை நெருங்காது!

thirusti-bommai

நமக்கு எந்த விதத்திலும் பிரச்சினைகள் இல்லாமல் நல்ல முன்னேற்றம் இருந்தாலும் யாருடைய கண்களாலாவது பட்டு ஏதாவது ஒரு தடங்கல்கள் ஏற்படுவது உண்டு. கஷ்டப்பட்டு முன்னேற நினைக்கும் பொழுது தடைக் கற்களாக இருக்கும் இந்த தடங்கல்கள் கண் திருஷ்டி ஆக கூட இருக்கலாம். ஒருவர் முன்னேறினால் இன்னொருவருக்கு பிடிப்பது இல்லை. இத்தகைய பொல்லாத திருஷ்டிகள் உங்களையும், உங்கள் வீட்டையும் காக்க என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

thirusti-bommai1

கண் திருஷ்டி கோளாறுகள் நீங்க நீங்கள் புதிதாக வீடு கட்டும் பொழுது இதை செய்து விடலாம். பொதுவாக புதிய வீடு கட்டுபவர்கள் திருஷ்டிக்காக வைக்கோலுக்கு சட்டை, பேண்ட் மாட்டி வீட்டின் முன்புறம் மேல் பகுதியில் தொங்க விட்டுவிடுவார்கள். நாற்று நடும் வயல்வெளிகளில் பறவைகளும், விலங்குகளும் வராமல் இருக்க வைக்கோல் பொம்மையை வைப்பது வழக்கம். அந்த பொம்மையை பார்க்கும் பறவைகள் உண்மையில் மனிதன் யாராவது நிற்பது போல நினைத்துக் கொண்டு அதன் அருகில் வர தயங்கும். இதனால் பயிர்கள் சேதம் அடையாமல் இருக்கும் என்பதால் தான் இவ்வாறு செய்வது உண்டு.

ஆனால் அதனை புதிய வீடு கட்டும் பொழுது மாட்டி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. புதிதாக வீடு கட்டுபவர்கள் ஆக இருந்தாலும், நீங்கள் இப்போது வசிக்கும் வீடாக இருந்தாலும் சரி, எப்படி இருந்தாலும் உங்கள் வீட்டிற்கு எத்தகைய கண் திருஷ்டிகளையும் நெருங்க விடாமல் தடுக்கும் இந்த பொருளை தவறாமல் வாங்கி மாட்டி விடுங்கள். பொதுவாக திருஷ்டி தோசங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் சில விஷயங்களை வைத்தே கண்டுப்பிடித்து விடலாம்.

thirusti-lemon

ஒரு வீட்டில் திருஷ்டி இருக்கிறது என்றால் அந்த வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகளும், தடைகளும் ஏற்படும். பிரிவு, பொருள் நஷ்டம், பண நஷ்டம், இழப்புகள், கவலை போன்ற விஷயங்களை தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் சந்தித்துக் கொண்டே இருப்பார்கள். இப்படி இருக்கும் பொழுதே உங்களுக்கு திருஷ்டி இருப்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் கணவன் மனைவிக்குள் தேவையில்லாத பிரச்சினைகள் எழுவது, இரவில் தூக்கமின்மை, துர் சொப்பனங்கள் உண்டாவது, வீண் விரயங்கள், அடிக்கடி யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போவது போன்ற பிரச்சனைகள் இருக்கும் பொழுது அங்கு திருஷ்டி தோஷம் இருப்பதை உணரலாம்.

- Advertisement -

உங்களுக்கு நீங்களே ஏதாவது ஒரு கற்பனை செய்து கொண்டு பயப்படுவது, திருமணத்தடைகள், சுபகாரிய தடைகள், மருத்துவ செலவுகள் அல்லது அடிக்கடி உடல் சோர்வு, மனச்சோர்வு ஏற்படுவது, கொட்டாவி விடுவது போன்ற விஷயங்களை செய்யும் பொழுது அங்கு திருஷ்டி தோஷம் இருப்பதை உணரலாம். ஒரு விஷயத்தில் எதிர்மறையான சிந்தனைகள் தோன்றுவது, எதற்கெடுத்தாலும் தேவையில்லாமல் மற்றவர்கள் மீது எரிந்து விழுவது போன்ற விஷயங்களும் திருஷ்டி தோஷத்தின் அறிகுறிகள் தான். இதில் உங்களுக்கு எந்த அறிகுறிகள் இருந்தாலும் உடனே திருஷ்டி கழிக்க இவ்வாறு செய்யுங்கள்.

thirusti-yantra

உங்கள் வீட்டிற்குள் நுழைந்த உடன் மற்றவர்கள் பார்க்கும் வண்ணம் பெரிய கண்ணாடியை மாட்டி வையுங்கள். கண்ணாடி திருஷ்டி தோஷத்தை பூமராங் போல அவர்களுக்கே திருப்பி அனுப்பிவிடும் ஆற்றல் கொண்டுள்ளது. உங்களை திருஷ்டி கண்களுடன், பொறாமை பார்வையுடன் பார்ப்பவர்கள் உடைய கெட்ட எண்ணங்கள் அவர்களுக்கே திரும்பிவிடும். அதுபோல கண் திருஷ்டி யந்திரம் மாட்டி வைப்பது ஆயுசு முழுக்க திருஷ்டி தோஷம் ஏற்படாமல் பாதுகாக்கும். கண் திருஷ்டி எந்திரம் கடைகளிலும், இணையதளங்களிலும் கிடைக்கும். மிகவும் சக்தி வாய்ந்த கண் திருஷ்டி யந்திரம் தமிழிலும் கிடைக்கப் பெறுகிறது. செப்பு தகடுகளில் பொறிக்கப்பட்ட இந்த மந்திரங்கள் பதித்த கண் திருஷ்டி யந்திரம் எந்த விதமான துர் தேவதைகளையும், துஷ்ட சக்திகளையும் உங்கள் வீட்டை நெருங்க கூட செய்யாமல் தடுக்கும்.

thirusti-yantra1

ஒரு முறை மாட்டி வைத்தால் அதன் பிறகு நீங்கள் அதனை அப்படியே விட்டு விடலாம். ஆயுள் முழுவதும் உங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து தோஷத்தை கழிக்கும். வாரம் ஒரு முறை கடுகு, உப்பு, காய்ந்த மிளகாய் கற்பூரம் ஆகியவற்றை சுற்றி திருஷ்டி கழிப்பது, மாதமொருமுறை பூசணிக்காய், தேங்காய் அல்லது எலுமிச்சை ஆகியவற்றின் மீது கற்பூரம் வைத்து திருஷ்டி சுத்தி போடுவது போன்ற விஷயங்களைச் செய்தாலே போதும்! உங்களை சுற்றி இருக்கும் எந்த திருஷ்டியும் உங்களை ஒன்றும் செய்யாது. திருஷ்டி கழிப்பவர்கள் நடுரோட்டில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் படி இதை செய்யாதீர்கள்! தெரு ஓரமாக செய்து பயனடையுங்கள்.