கடுமையான கண் திருஷ்டியை கூட ஒரு நொடிப்பொழுதில் நீக்கிவிடலாம். இந்த முறையில் கண் திருஷ்டியை ஒருமுறை கழித்து பாருங்கள்.

lemon
- Advertisement -

கெட்ட எண்ணத்தோடு ஒருவர் நம்மை பார்த்தாலே போதும். எதிர்மறை ஆற்றல் நம் உடலை சூழ்ந்து விடும். அவ்வளவு தான் நல்லா இருக்கிற குடும்பத்தில் பூகம்பம் வெடிக்க தொடங்கி விடும். வீட்டில் நன்றாக ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு நோய் நொடிகள் வரும். என்ன பிரச்சனை என்றே தெரியாது காசு வீண்விரயமாகும். மருந்து மாத்திரை வீட்டில் குவியத் தொடங்கும். செய்யக்கூடிய சாப்பாடு சமையலறையில் அப்படியே வீணாகும். வீட்டில் இருப்பவர்களால் ஒருவாய் சாப்பாட்டை கூட நிம்மதியாக சாப்பிட முடியாது. வீட்டை சுத்தம் செய்ய முடியாது. வீடு குப்பை கூலங்கள் ஆக மாறி இருக்கும். குழப்பங்கள் சண்டை சச்சரவுகள் வரும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஒரு வீட்டில் திடீரென வந்துவிட்டது என்றால் நிச்சயமாக உங்களுக்கு கண் அடிபட்டுவிட்டது என்பதுதான் அர்த்தம்.

வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை அல்லது மாதத்தில் ஒரு நாள் வரக்கூடிய அமாவாசை தினத்தில் வீட்டில் இருப்பவர்கள் கட்டாயம் திருஷ்டி கழிக்க வேண்டும். ஒருமுறை திருஷ்டியை கழித்துவிட்டால் மீண்டும் நம் மேல் கண்திருஷ்டி படாது என்று சொல்லிவிட முடியாது. நாம் வாழும் ஆயுசு முழுவதும் நம் மேல் எதிர்மறை ஆற்றல்களின் தாக்கம் இருந்துகொண்டேதான் இருக்கும். ஆக திருஷ்டி கழிக்கும் பழக்கத்தை உங்கள் வழக்கமாக்கிக் கொள்வது நல்லது.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக சுண்ணாம்பு, கொஞ்சம் மஞ்சத்தூள் போட்டு இரண்டு சொட்டு தண்ணீர் விட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். அது சிவப்பு நிறமாக மாற தொடங்கும். அதில் கொஞ்சமாக கல் உப்பை போட்டு கலந்து கொள்ள வேண்டும். இப்போது வெள்ளை கல் உப்பு சிவப்பு நிறமாக மாறி இருக்கும்.

ஒரு எலுமிச்சம் பழத்தை நான்கு பாகங்களாக வெட்டவேண்டும். நான்கு துண்டுகளாக கையில் வந்து விட கூடாது. அடிபாகம் ஒட்டி இருக்க வேண்டும். நான்கு பாகங்களாக வெட்டிய எலுமிச்சம்பழத்திற்கு, நடுவே இந்த சிவப்பு நிற கல்லுப்பு எடுத்து நிரப்பி விட்டு, உப்புக்கு மேலே இரண்டு கிராம்புகளை சொருகி, இந்த எலுமிச்சம் பழத்தை வைத்து வீட்டில் உள்ளவர்களுக்கு திருஷ்டி கழியுங்கள்.

- Advertisement -

இந்த எலுமிச்சம்பழத்தை வீட்டில் மூத்தவர்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டு உறுப்பினர்களை கிழக்கு பார்த்து அமரவைத்து, எலுமிச்சம்பழத்தை இடது பக்கம் மூன்று முறை, வலது பக்கம் மூன்று முறை, ஏற்ற இறக்கமாக மூன்று முறை சுற்றி, முடிந்து கொண்டுபோய் முச்சந்தியில் போட்டு விட்டு வரலாம். முடியாதவர்கள் கால் படாத இடத்தில் ஓரமாக ஒரு இடத்தில் போட்டு விட்டு வந்து விட வேண்டும்.

அமாவாசை தினத்தில் இப்பபடி திருஷ்டி கழிப்பது மிக மிக நல்லது. எவ்வளவு பெரிய திருஷ்டி, எவ்வளவு பெரிய எதிர்மறை ஆற்றல் உங்களை சூழ்ந்து இருந்தாலும், அது உங்களை விட்டு அகற்றப்படும். இந்த கல் உப்பு சிகப்பாக மாற வேண்டும் என்பதற்காக குங்குமத்தை சேர்த்து கலக்கக்கூடாது. கட்டாயம் சுண்ணாம்பும் மஞ்சளும் சேர்ந்த கலவையை கொண்டுதான் உப்பை சிவப்பாக மாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிலை பாக்கு போட பயன்படுத்தும் சுண்ணாம்பு என்று கேட்டாலே கடைகளில் கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன முறைப்படி பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -