கண் திருஷ்டியால் செய்யும் வேலையில் தடை. கண் திருஷ்டியால் உடல் அசதி. கண் திருஷ்டியால் குடும்பத்தில் சண்டை. கண் திருஷ்டியால் நோய்நொடிகள் வருவது. கண் திருஷ்டியால் குடும்பத்தில் பணப்பிரச்சனை. கண் திருஷ்டியால் வந்த கடன். கண்திருஷ்டியால் ஏற்பட்ட நஷ்டம். கண் திருஷ்டியால் ஏற்பட்ட உயிரிழப்பு, என்று கண் திருஷ்டியால் வரும் கஷ்டத்தை அடுக்கிக் கொண்டே போகலாம். பெரிய அளவில் கண் திருஷ்டி பாதிப்பு இருக்கிறது.
இதிலிருந்து விடுபட ஏதேனும் எளிமையான பரிகாரம் உள்ளதா. இந்த மெத்தடை ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா உங்களை பிடித்த கண்திருஷ்டி ஒட்டுமொத்தமாக விலகியதை அனுபவரீதியாக உணர்வீர்கள். இந்த பரிகாரத்திற்கு ஒரு பூண்டு, கொஞ்சம் உப்பு தேவை. அவ்வளவு தான். இது இரண்டும் நம் வீட்டிலேயே இருக்கும். ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த பரிகாரத்தை செய்ய துவங்குவது சிறப்பு.
கண் திருஷ்டி நீங்க பரிகாரம்
முதலில் ஒரு ஜிப்லாக் கவர் எடுத்துக் கொள்ளுங்கள். சின்ன கவர் போதும். அதன் உள்ளே கல் உப்பு, தூள் உப்பு எது வேண்டும் என்றாலும் போட்டுக் கொள்ளலாம். அது உங்கள் விருப்பம். ஒரு சின்ன பூண்டு பல் எடுத்து அதில் சாதாரண பேனாவில் அல்லது ஸ்கெட்ச் பேனாவில் ஒரு கண் வரைந்து கொள்ளுங்கள். கண் வரைவது சுலபம்தானே.
பிறகு அந்த ஒரு பல் பூண்டை உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றி ஏற்கனவே ஜிப்லாக் கவரில் உப்பு போட்டு வைத்திருக்கிறோம் அல்லவா, அந்த கவருக்குள் போட்டு, கவரை ஜிப் லாக் செய்து விடுங்கள். சிப்லாக் கவர் இல்லை என்றால் சாதாரண கவரில் உப்பு போட்டு இந்த பூண்டை போட்டு சுருட்டி, மேலே ஒரு ரப்பர் பேண்ட் போட்டுக்கொள்ளுங்கள். உப்பு கீழே கொட்ட கூடாது.
தயார் செய்த இந்த கவரை தலையணைக்கு அடியில் வைத்து, I release, I release, I release என்று சொல்லிவிட்டு தூங்க வேண்டும். மூன்று நாள் இரவு இதை தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும். விடிந்த பிறகு இந்த பேக்கை அப்படியே எடுத்து அலமாரியில் வைக்க வேண்டும் இவ்வளவுதான் பரிகாரம். மூன்றாவது நாள் இந்த கவரை அப்படியே தூக்கி குப்பை தொட்டியில் போட்டு விடுங்கள். கவரை எக்காரணத்தை கொண்டும் பிரிக்க வேண்டாம்.
இந்த எளிமையான பரிகாரம் உங்கள் உடம்பில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜியை முழுமையாக நீக்கிவிடும். நம்ப முடியாத நல்ல மாற்றங்கள் உங்களுக்கு ஏற்படும். கண் திருஷ்டியால் ஏற்பட்ட பாதிப்புகள் உடல் உபாதைகள் வீட்டில் நடந்த சண்டை சச்சரவுகள் இழப்புகள் எல்லாவற்றையும் திரும்பவும் மீட்டை எடுக்க இறைவன் நல்லதொரு வழியை காண்பித்துக் கொடுப்பான்.
இதையும் படிக்கலாமே: 12-05-2025 சித்ரா பௌர்ணமி மகாலட்சுமி மந்திரம்
எந்த பரிகாரத்தை செய்வதாக இருந்தாலும் குலதெய்வத்தை நினைத்துக் கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தை துவங்குவதற்கு முன்பும் குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை சொல்லி விடுங்கள். நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன், ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.