இப்படி இருக்கும் கண்ணாடியில், தினமும் உங்களது முகத்தை பார்த்து வந்தால் தரித்திரம் தான் பிடிக்கும்.

mirror-poojai

நம்முடைய வீட்டில் இருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடி மகாலட்சுமியின் மகத்துவம் பெற்றது என்பது, நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். இருப்பினும் இந்த கண்ணாடியை, எந்த இடத்தில் எப்படி வைத்தால் நம்மை நாம், கண் திருஷ்டியில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதைப் பற்றியும், எப்படி இருக்கும் கண்ணாடியில் தினந்தோறும் நம்முடைய முகத்தை பார்க்க கூடாது, என்பதைப் பற்றிய சில குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

mirror

பொதுவாகவே நம்முடைய நில வாசல் படிக்கு வெளிப்பக்கத்தில் கண்ணாடியை வைப்பது மிகவும் நல்லது. அந்த கண்ணாடியை வெளியிலிருந்து வீட்டிற்குள் நுழைபவர்கள், முகத்தை பார்க்கும் அளவிற்கு உயரத்தில் தான் வைக்க வேண்டும். ஒரேயடியாக மிகவும் உயரத்தில் அந்த கண்ணாடியை வைப்பதன் மூலம் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை.

வீட்டிற்குள் வருபவர்கள் தங்களுடைய முகத்தை அந்த கண்ணாடியில் பார்த்து விட்டு, வீட்டிற்குள் நுழையும் பட்சத்தில் உங்களுடைய வீட்டிற்கு உள்ளே வருபவர்களின் மூலமாக எந்தவிதமான கண் திருஷ்டியும், உங்களுடைய குடும்பத்திற்கு ஏற்படுவதற்கு ஒரு துளி அளவும் வாய்ப்பு கிடையாது. அடுத்தபடியாக உங்களுடைய வீட்டில் இருக்கும் கண்ணாடியில் லேசாக உடைந்து இருந்தால் கூட, காலை எழுந்தவுடன் நீங்கள் அந்த கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பது உங்களுக்கு தரித்திரத்தை தேடித்தரும்.

mirror kannaadi

உங்களுடைய வீட்டில் எந்த இடமும் தூசியாக இருக்கக் கூடாது. குறிப்பாக முகம் பார்க்கும் கண்ணாடி தூசு படிந்து இருக்கவே கூடாது. தூசு படிந்து இருக்கும் பட்சத்தில், அந்த கண்ணாடியில் உங்களது முகத்தை பார்ப்பதை நீங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை உங்கள் வீட்டு கண்ணாடியை சுத்தம் செய்து வைத்துக் கொள்வது உங்களுக்கு நன்மையை தேடித்தரும்.

- Advertisement -

இதேபோல் சிறிய கண்ணாடிக்கு பதிலாக ஆள் உயரத்திற்கு இருக்கும் கண்ணாடியை வரவேற்பறையில் வைத்திருப்பது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை தரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதோடு மட்டுமல்லாமல் ஆள் உயரத்தில் இருக்கும் கண்ணாடியில் உங்கள் உருவத்தை, நீங்கள் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருந்தால், உங்கள் மனதில் இருக்கும் தன்னம்பிக்கையானது அதிகரிக்கப்பட்டு, நேர்மறை ஆற்றல் அதிகரிக்கப்பட்டு, அதிர்ஷ்டம் அதிகரிக்கப்பட்டு, வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒரு தூண்டுகளாக இருக்கும்.

mirror

இதை பரிகாரம் என்று நினைத்து நீங்கள் செய்ய வேண்டாம். உங்களுடைய வரவேற்பறையில், உங்களால் முடியும் போது, நீளவாக்கில், உங்களது முழு உருவம் தெரியும் கண்ணாடியை வாங்கி வைத்து பாருங்கள். அதாவது ட்ரெஸ்ஸிங் டேபிள் எல்லாம் கூட இப்போது நீளவாக்கில் இருக்கும் கண்ணாடி வருகிறதல்லவா?  அப்படிப்பட்ட ஒரு கண்ணாடியை வாங்கி வைத்துப் பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் ஏதேனும் கூடிய விரைவில், ஒரு சிறிய நல்ல மாற்றமாவது நிச்சயம் நிகழும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
திங்கட்கிழமை அன்று இதை செய்தால் போதுமே! இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒரு நாள், நீங்கள் நிச்சயம் செல்வந்தர் ஆவது உறுதி.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.