திங்கட்கிழமை அன்று இதை செய்தால் போதுமே! இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒரு நாள், நீங்கள் நிச்சயம் செல்வந்தர் ஆவது உறுதி.

perumal

இன்றைக்கு இல்லை என்றாலும் நம்முடைய குறிக்கோள் என்றாவது ஒரு நாள் நிறைவேறிவிடும். வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் நாம் ஜெயித்து விடுவோம், என்ற நம்பிக்கை தான் இந்த உலகத்தில் நம்மை வாழ வைக்கின்றது. அந்த நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடரலாம். நம்முடைய வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை, ஆன்மீக ரீதியாக எப்படி நீக்குவது? பாவங்களிலிருந்து விடுபட்டு வாழ்க்கையில் முன்னேற ஆன்மீக ரீதியாக, ஆண்கள் என்ன செய்ய வேண்டும்? பெண்கள் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கான பதிலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

perumal-1

தினமும் காலை கண் விழித்தவுடன் நீங்கள் படுக்கையை விட்டு எழுந்த பின்பு ஒரு நிமிடம் கிழக்குப் பக்கம் பார்த்தவாறு அமர்ந்து மனதிற்குள் ‘ஹரி ஹரி’ என்ற மந்திரத்தை 11 முறை உச்சரியுங்கள். அதன் பின்பு உங்கள் உள்ளங்கைகளை தரிசனம் செய்துவிட்டு, செய்த பாவங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று பூமாதேவியை தொட்டு நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு உங்களது இயல்பான தினசரி வேலையை தொடங்கலாம். மேல் சொன்ன பரிகாரத்தை ஆண்களும் செய்யலாம். பெண்களும் செய்யலாம்.

‘ஹரி ஹரி’ என்று நாம் உச்சரிக்கக் கூடிய இந்த மந்திரம், முந்தைய நாள் பாவ கணக்குகளை எல்லாம் நீக்கிவிடும். இன்றைய நாள் நீங்கள் புதியதாக பிறந்து, புதியதாக உங்களது வாழ்க்கையை தொடங்குவதாக நினைத்துக் கொள்ளுங்கள். ‘அறியாமல் செய்த, தெரியாமல் செய்த பாவங்களுக்கு தான் மன்னிப்பே தவிர, தெரிந்தே அறிந்தே செய்யும் பாவங்களை அந்த இறைவன் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்’. அதற்கான தண்டனையை ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள், நாம் கட்டாயம் அனுபவித்தே ஆக வேண்டும் என்பதையும் நாம் இந்த இடத்தில் நினைவு கூறவேண்டும்.

nallennai

அடுத்தபடியாக, பின் சொல்ல கூடிய பரிகாரத்தை ஆண்களும் பெண்களும் வெவ்வேறு விதமாக, திங்கட்கிழமைகளில் செய்து வாருங்கள். திங்கட்கிழமை அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு சுத்தமாகி, பூஜை அறையில் நல்லெண்ணெய் தீபம் ஒன்றை ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு நீங்கள் கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும். சிறிய கிண்ணத்தில் சுத்தமான நல்லெண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தும் நல்லெண்ணெய் ஆக இருக்கக் கூடாது. அதாவது எச்சில் பட்ட எண்ணையாக இருக்கக்கூடாது. தனியாக பூஜை அறையில் தீபம் ஏற்றுவதற்காக வைத்திருப்பீர்கள் அல்லவா அந்த எண்ணெயைத் தான் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

poojai

நீங்கள் பெண்களாக இருந்தால் உங்களது வலது கையில் நல்லெண்ணையை தொட்டு, இடது உள்ளங்கையில் லேசாக தேய்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஆண்களாக இருந்தால் இடது கையில் நல்லெண்ணையை ஒரு சொட்டு அளவு தொட்டு, வலது உள்ளங்கைகளில் தேய்த்துக் கொள்ளுங்கள். எந்த விரலில் வேண்டுமென்றாலும் தொட்டு தேய்த்துக் கொள்ளலாம். அதில் எந்த ஒரு கணக்கும் கிடையாது.

vilakku-praying

வாரம் தோறும் வரும் திங்கட் கிழமைகளில் மட்டும் இதை நம்பிக்கையோடு கடைபிடித்து வருபவர்களுக்கு, வாழ்வில் விரைவான முன்னேற்றம் இருக்கும். நீங்கள் உங்களது குறிக்கோளை அடைவதற்கு வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கு, செல்வந்தராக மாறுவதற்கும், இந்த ஆன்மீக ரீதியான பரிகாரம் உங்களுக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இவர்களுக்கு மட்டும் தானம் செய்து விடாதீர்கள் நிச்சயம் பாவம் வந்து சேரும்! இது கூட தெரிஞ்சிக்காம இருக்கிறோமோ! ஏன் அவர்களுக்கு தானம் செய்யக்கூடாது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.